MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அமைச்சர்களின் தனித்துவம் குறைகிறதா? சீமான் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அமைச்சர்களின் தனித்துவம் குறைகிறதா? சீமான் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அமைச்சர்களின் தனித்துவம் குறைகிறதா? சீமான் கேள்வி

தமிழ்நாடு

அமைச்சர்களின் தனித்துவம் குறைகிறதா? சீமான் கேள்வி

Fernandez
Last updated: செப்டம்பர் 3, 2026 3:42 மணி
Fernandez
Share
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
SHARE

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிக்கும் திட்டங்கள் மக்களாட்சிக்கும், வாக்களித்த மக்களுக்கும் எதிரானது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்புகள் என்ற பெயரில், நிதிநிலை அறிக்கையில் இல்லாத புதிய திட்டங்களை ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முதல்வர் அறிவித்து வருவது ஏன்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"அனைத்துத் திட்டங்களும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால், தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? அதன் மீதான விவாதங்கள்தான் எதற்கு? சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிடும் முக்கியத் திட்டங்கள் குறித்து அவையில் விவாதங்கள் நடைபெற வேண்டாமா? மக்களுக்கான இன்றியமையாத திட்டங்கள் ஏன் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை?" என்றும் சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு முடிவுகள் மற்றும் புதிய திட்டங்களைப் பேரவைத்தலைவர் அனுமதியுடன் சட்டப்பேரவையில் அறிவிக்கவும், அறிவிக்கும் நேரத்தில் அதன் மீது விவாதம் நடைபெறாமல் இருக்கவும் கடந்த திமுக, அதிமுக அரசுகள் விதி 110-ஐ பயன்படுத்தியதாக சீமான் சுட்டிக்காட்டினார். ஆனால், 'மாற்றம்' எனச் சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, விளம்பர வெற்று அறிவிப்புகளுக்கு இதைப் பயன்படுத்துவது, நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும், இதுதான் மாற்றமா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

சட்டங்களை உருவாக்கவும், விவாதிக்கவும், நிறைவேற்றவும் அமைக்கப்பட்ட சட்டப்பேரவையில், இவ்விதியை பயன்படுத்தி நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத திட்டங்களை ஒவ்வொரு நாளும் வெளியிடுவதும், அதன் மீது விவாதம் நடைபெறாமல் கடந்து போவதும், சட்டப்பேரவை உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நிறைந்த அவையில், மக்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்பைப் பறிப்பது கொடுங்கோன்மை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் பொறுப்பிலிருந்த துறைகளையே மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கிவிட்ட நிலையில், மற்ற அமைச்சகம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு மட்டும் முதலமைச்சர் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர்கள் வெளியிட வேண்டிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவது, அமைச்சர்களின் தனித்துவத்தைக் குறைக்கும் செயல் என்றும், இதன் மூலம் தவெக அரசு தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வரும் செய்தி என்ன? அனைத்து முக்கியத் திட்டங்களும் முதலமைச்சரின் மூளையில் உதித்தது என்பதையா? என்றும் அவர் சாடியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து இன்று வரை தவெக அரசு விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்களுக்கான மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி என சீமான் குறிப்பிட்டுள்ளார். மேலும், எரிகாற்று உருளை, இலவச பேருந்து, பால் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் தொடர் செலவாக 10,720 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் திட்டங்களின் வரவு செலவுகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏன் என்றும், நிதிநிலை அறிக்கையின்படி இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி கடன் வாங்குவதாக அறிவித்திருக்கும் நிலையில், புதிதாக 110 விதியின் கீழ் அறிவித்திருக்கும் திட்டங்களுக்கான ரூ.73,900 கோடிக்கான நிதியை எப்படி பெறுவீர்கள், யாரிடம் கடன் வாங்குவீர்கள் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதான் கடன் சுமையைக் குறைக்கும் முறையா? இதுதான் தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான மாற்றமா? என்றும் அவர் வினவியுள்ளார்.

மக்களாட்சிக்கு எதிரான, நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பர திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்றும் சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:110 விதிBudgetRule 110SeemanTamil Nadu GovtVIJAYசீமான்தமிழ்நாடு அரசுநாம் தமிழர் கட்சிநிதிநிலை அறிக்கைவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் விவசாயிகள், ஆசிரியர்கள் வழக்குகள் வாபஸ்: இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு
Next Article எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் உரையாற்றுகிறார் முதலமைச்சர் பாஜகவைக் கண்டு அஞ்சுகிறார் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியீடு

இந்திய பள்ளிகளில் 5 கோடி குழந்தைகளுக்கு சுகாதார வசதி இல்லை: உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, பள்ளிகளில் சுகாதார வசதிகள் இல்லாத 24.4 கோடி…

செப்டம்பர் 28, 2026

வலி நிவாரண மருந்துகளால் சிறுநீரகம் பாதிப்பு: மத்திய அரசு எச்சரிக்கை

மருத்துவரின் பரிந்துரையின்றி ஸ்டீராய்டு அல்லாத வலி நிவாரண…

செப்டம்பர் 28, 2026

உத்தரபிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டம் மல்வா பகுதியில்…

செப்டம்பர் 28, 2026

யுபிஐ கட்டணம்: மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும்…

செப்டம்பர் 28, 2026

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: புனேவில் சோகம்

புனேவில் வரதட்சணை கொடுமையால் 23 வயது ஐடி…

செப்டம்பர் 28, 2026

You Might Also Like

முதல்வர் ஜோசப் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது
தமிழ்நாடு

சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம்: மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

சென்னை விமான நிலைய நிர்வாகத்தில் மாற்றம் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தற்போதைய நிர்வாகத்தை மாற்றி, தனியார் ஆபரேட்டர் மூலம் மேம்படுத்த…

2 Min Read
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
தமிழ்நாடு

கே.என்.நேரு மீது ஊழல் வழக்கு: ரூ.1020 கோடி டெண்டர் முறைகேடு

நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. FIR…

2 Min Read
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக ஓய்வு…

1 Min Read
பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு

கேரளத்திற்கு கனிமங்கள் கடத்தல்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து கேரளாவிற்கு கனிமங்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு. பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், சட்டவிரோத கனிம கடத்தலுக்கு 100 மடங்கு அபராதம் விதிக்க வலியுறுத்தல்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?