MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: போஜ்சாலா சரஸ்வதி சிலை: லண்டனிலிருந்து மீட்க ம.பி முதல்வர் மோகன் யாதவ் உறுதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > போஜ்சாலா சரஸ்வதி சிலை: லண்டனிலிருந்து மீட்க ம.பி முதல்வர் மோகன் யாதவ் உறுதி
இந்தியா

போஜ்சாலா சரஸ்வதி சிலை: லண்டனிலிருந்து மீட்க ம.பி முதல்வர் மோகன் யாதவ் உறுதி

Admin
Last updated: May 16, 2026 2:29 pm
Admin
Share
SHARE

மத்தியப்பிரதேசத்தின் தார் நகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க போஜ்சாலா வளாகம், இந்துக்களால் வாக்தேவி (சரஸ்வதி) கோயிலாகவும், முஸ்லிம்களால் மவுலானா கமலூத்தீன் மசூதியாகவும் உரிமை கோரப்பட்டு வந்தது. இந்த நீண்டகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போஜ்சாலா ஒரு வாக்தேவி கோயிலே என்றும், அங்கு முஸ்லிம்களின் தொழுகை நிறுத்தப்பட வேண்டும் என்றும் மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மேலும், லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள வாக்தேவி சிலையையும் போஜ்சாலாவில் நிறுவ வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள ம.பி முதல்வர் மோகன் யாதவ், சரஸ்வதி சிலையை மீட்டு வந்து போஜ்சாலாவில் நிறுவ சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், 'மன்னர் போஜ், வாக்தேவி திருவுருவத்தின் மூலம் இந்த இடத்தின் முக்கியத்துவத்தை நிலைநாட்டினார். நீதிமன்றம் அதை அங்கீகரித்துள்ளது. போஜ்சாலாவின் பெருமையை மீட்டெடுக்கும் வகையில், வெளிநாட்டிலிருந்து வாக்தேவி சிலையைத் திரும்பக் கொண்டுவருவதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் செய்யப்படும். அயோத்தி கோயில் தீர்ப்பு சமூக நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக அமைந்தது. அந்த மரபைப் பின்பற்றி, போஜ்சாலா தீர்ப்பையும் ஏற்பதன் மூலம் மத்தியப் பிரதேசம் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும்' எனத் தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை விஷ்வ இந்து பரிஷத் வரவேற்றுள்ளது. அதன் சர்வதேசத் தலைவர் அலோக் குமார், 'போஜ்சாலா மீதான இந்தத் தீர்ப்பு, இந்தியாவின் கலாச்சார உணர்வு, உண்மை மற்றும் சனாதன மரபு ஆகியவற்றிற்கு அளிக்கப்பட்ட ஒரு முக்கிய அங்கீகாரம். இது முறையான நீதித்துறை செயல்முறைகளைப் பின்பற்றியே வெளியாகி உள்ளது. போஜ்சாலா சரஸ்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோவில் மற்றும் சமஸ்கிருத கல்விக்கான மையமாக திகழ்ந்தது என நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது' என்று கூறினார். இந்து தரப்பு மனுதாரர் ஆஷிஷ் கோயல், 'வரலாற்றுச் சூழல்களின் காரணமாகவே போஜ்சாலாவில் தொழுகை நடத்தும் வழக்கம் உருவானது. இந்த உண்மையை நிலைநாட்ட நாங்கள் நீண்ட காலமாகப் போராடி வந்தோம்' என்றார்.

முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் இந்த தீர்ப்பின் மீது கருத்து தெரிவிக்கையில், 'போஜ்சாலா இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள வரலாற்றுச் சின்னம். அத்தகைய சின்னத்திற்குள் இந்து முறைப்படி பூஜையோ அல்லது இஸ்லாமிய முறைப்படி தொழுகையோ நடத்த அனுமதிக்கப்படுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கே உண்டு. வாரணாசி கியான்வாபி, சம்பல் ஷாஹி ஜாமா மசூதி, மதுரா கிருஷ்ண ஜென்மபூமி – ஷாஹி ஈத்கா வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன' என சுட்டிக்காட்டினார்.

1875ல் பிரிட்டிஷ் பிரதிநிதி மேஜர் ஜெனரல் வில்லியம் கைக் நடத்திய அகழ்வாராய்ச்சியில் வாக்தேவி சிலை கண்டெடுக்கப்பட்டது. 1903ல் கர்சன் பிரபு அதை லண்டன் அருங்காட்சியகத்தில் வைத்தார். 128.5 செ.மீ உயரமும், 58.6 செ.மீ அகலமும் கொண்ட இந்த 250 கிலோ எடைள்ள சிலை, நான்கு கரங்களுடன், நேர்த்தியான கிரீடம் மற்றும் சிகை அலங்காரத்துடன் தெய்வீகத் தன்மையுடன் காட்சியளிக்கிறது. சிலை அடிப்பாகத்தில் உள்ள சமஸ்கிருத கல்வெட்டு, வரருச்சி என்பவர் வாக்தேவி சிலை உட்பட மூன்று சிலைகளைச் செதுக்கப் பணித்ததாகக் கூறுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Madhya PradeshSaraswati idolசரஸ்வதி சிலைபோஜன் யாதவ்போஜ்சாலாவரலாற்று சின்னம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஈரோடு: 70 டன் ரயில் பெட்டி கிரேனில் இருந்து விழுந்து விபத்து!
Next Article முதல்வர் விஜய்யின் அதிரடி: தலைமைச் செயலகத்தில் புதிய கலாச்சாரம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வேலையில்லா இளைஞர்கள் குறித்து தலைமை நீதிபதி விளக்கம்: என்ன சொன்னார்?

வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் தவறாக…

May 17, 2026

மத்திய அமைச்சர் மகன் போக்சோ வழக்கில் கைது: பரபரப்பு!

தெலுங்கானா மாநில மத்திய இணை அமைச்சர் பண்டி…

May 17, 2026

நீட் முறைகேடு: மத்திய அமைச்சரை நீக்க மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

May 17, 2026

பேராசிரியர் கைது: மாணவியிடம் மிரட்டல் விடுத்த வினாத்தாள் விவகாரம்!

லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர், மாணவியிடம் தேர்வு வினாத்தாள்…

May 17, 2026

குஜராத்தில் கொடூரம்: வாடகை பாக்கிக்கு மனைவியையும் மகளையும் பலி கொடுத்த கணவன்!

குஜராத்தில் வாடகை பாக்கிக்கு ஈடாக, தனது மனைவியையும்…

May 17, 2026

You Might Also Like

இந்தியா

5 நாடுகளுக்கு பிரதமர் மோடி: முக்கிய பயண திட்டம் வெளியானது!

பிரதமர் நரேந்திர மோடி, மே 15 முதல் 20 வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு முக்கிய வெளிநாட்டுப்…

1 Min Read
இந்தியா

3ஆம் கட்ட சிறப்பு வாக்காளர் திருத்தம்: 16 மாநிலங்களில் இன்று தொடக்கம்!

தேர்தல் ஆணையம், 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 3ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை இன்று முதல் தொடங்குகிறது. இதன் மூலம்…

1 Min Read
இந்தியா

மேற்கு வங்க முதல்வர் பதவியேற்பு விழாவில் பா.ஜனதா-வின் 98 வயது தொண்டரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி

மேற்கு வங்காளத்தின் முதல் பா.ஜ.க. முதல் மந்திரி யாக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர்.…

1 Min Read
இந்தியா

ரூ.182 கோடி போதைப்பொருள்: ‘ஆபரேஷன் ரேஜ்பில்’ வெற்றி – அமித் ஷா பாராட்டு!

ரூ.182 கோடி மதிப்புள்ள 227.7 கிலோ கேப்டகான் போதைப்பொருளை 'ஆபரேஷன் ரேஜ்பில்' மூலம் கைப்பற்றிய NCB-க்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?