MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிரதமர் அறிவுரை மீறல்: பாஜக பிரமுகருக்கு முதல்வர் அதிரடி நோட்டீஸ்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிரதமர் அறிவுரை மீறல்: பாஜக பிரமுகருக்கு முதல்வர் அதிரடி நோட்டீஸ்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பிரதமர் அறிவுரை மீறல்: பாஜக பிரமுகருக்கு முதல்வர் அதிரடி நோட்டீஸ்!

இந்தியா

பிரதமர் அறிவுரை மீறல்: பாஜக பிரமுகருக்கு முதல்வர் அதிரடி நோட்டீஸ்!

Admin
Last updated: மே 16, 2026 2:00 மணி
Admin
Share
SHARE

உலகளாவிய போர் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை மீறி மத்தியப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, பாஜக பிரமுகர் சவுபாக்ய சிங் தாக்கூர் மீது அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, உலக சந்தையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையை சமாளிக்க, பொதுமக்கள் தங்க நகை வாங்குவதைத் தள்ளிப்போடவும், பெட்ரோல், டீசலை சிக்கனமாகப் பயன்படுத்தவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பிரதமரின் அறிவுரையை ஏற்று, மத்திய அமைச்சர்களும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் தங்கள் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, அத்தியாவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கினர்.

ஆனால், மத்தியப் பிரதேச மாநில பாஜக பிரமுகரும், அம்மாநிலப் பாடநூல் கழகத்தின் தலைவருமான சவுபாக்ய சிங் தாக்கூர், பிரதமரின் வேண்டுகோளைப் புறக்கணித்து, உஜ்ஜயினிலிருந்து போபாலுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் கொண்ட ஊர்வலத்தை நடத்தியுள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்பதற்காக அவர் சென்றபோது இந்த வாகன அணிவகுப்பு நடைபெற்றது. இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, முதல்வர் மோகன் யாதவ் உடனடியாக சவுபாக்ய சிங்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

தேசிய நலன் சார்ந்த வேண்டுகோளைப் புறக்கணித்ததற்கும், அரசின் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாததற்கும் விளக்கம் கேட்டிருப்பதாக அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சவுபாக்ய சிங் பாடநூல் கழகத்தின் அலுவலகம் அல்லது வளாகத்திற்குள் நுழையவும், கழகத்திற்குச் சொந்தமான எந்தவொரு வசதியையும், வாகனத்தையும், ஊழியரையும் பயன்படுத்தவும், கழகம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கவும், நிர்வாகம் அல்லது நிதி சார்ந்த முடிவுகளில் கையெழுத்திடவும் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மாவட்ட பாஜக தலைவர் ஹன்ஸ்ராஜ் விஷ்வ கர்மா, உ.பி அமைச்சரவையில் புதிய உறுப்பினராகச் சேர்க்கப்பட்டதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் சுமார் 80 வாகனங்களுடன் அவரை வரவேற்றுள்ளனர். இந்த ஊர்வலத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் யோகி அரசு பயன்படுத்தும் புல்டோசரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அமைச்சரான ஹன்ஸ்ராஜ் இதை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதுவும் தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Madhya PradeshPM Modiஎரிசக்தி சிக்கனம்பாஜகமத்தியப் பிரதேசம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கேரளாவில் 7 நாட்கள் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடக்கம்!
Next Article நைஜீரியாவில் அமெரிக்க அதிரடி: ஐஎஸ் தலைவர் அபூபக்கர் மனுகி சுட்டுக்கொலை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாத்திரைகளை தண்ணீரில் கலக்கும் பெண்

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும் மாத்திரைகள் என கூறி, நசியா…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்தாரா? – பாஜக குற்றச்சாட்டுக்கு காங். மறுப்பு

காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழாவின் போது…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அண்ணாமலை பாஜகவை இழந்துள்ளார் – பாஜக மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர்

நாங்கள் அண்ணாமலையை இழக்கவில்லை, மாறாக அண்ணாமலை தான் பாஜகவை இழந்துள்ளார் என பாஜக மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மோடியின் 12…

3 Min Read
இந்தியா

இந்து மதம் வாழ்க்கை முறை: கோயிலுக்குச் செல்வது கட்டாயமில்லை – உச்சநீதிமன்றம்

இந்து மதம் ஒரு வாழ்க்கை முறை என்றும், அதற்காகக் கோயில்களுக்குச் செல்வது கட்டாயமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மத சுதந்திரம் மற்றும் பாகுபாடு தொடர்பான…

1 Min Read
நீதிமன்ற கட்டிடம் மற்றும் சட்ட புத்தகங்கள்
இந்தியா

நீதிமன்ற கதவுகளை தட்டலாம்: புதிய சட்டம் விரைவில்

சாதாரண மக்களும் எந்த நேரத்திலும் நீதிமன்றங்களை அணுகி நீதி பெறக்கூடிய புதிய சகாப்தம் விரைவில் தொடங்கவுள்ளது. இது குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

1 Min Read
இண்டியா கூட்டணி தலைவர்கள் காந்தி ஸ்மிருதிக்குச் சென்றனர்
இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: உயிரிழந்த மாணவர்களுக்கு இண்டியா கூட்டணி அஞ்சலி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், போராடும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கவும் இண்டியா கூட்டணி தலைவர்கள் காந்தி ஸ்மிருதிக்குச் சென்றனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?