MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அண்ணாமலை பாஜகவை இழந்துள்ளார் – பாஜக மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அண்ணாமலை பாஜகவை இழந்துள்ளார் – பாஜக மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - அண்ணாமலை பாஜகவை இழந்துள்ளார் – பாஜக மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர்

லைஃப் ஸ்டைல்

அண்ணாமலை பாஜகவை இழந்துள்ளார் – பாஜக மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர்

Admin
Last updated: ஜூன் 14, 2026 6:32 காலை
Admin
Share
SHARE

நாங்கள் அண்ணாமலையை இழக்கவில்லை, மாறாக அண்ணாமலை தான் பாஜகவை இழந்துள்ளார் என பாஜக மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு 15 பிரதமர்கள் நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இதில் பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால ஆட்சி ஒரு வரலாற்றுச் சாதனை என்று அவர் குறிப்பிட்டார். மோடியின் சாதனைகளைக் கண்டு மக்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும், அவர் முதன்முறை பொறுப்பேற்றபோதே நிர்வாகத்தை முழுமையாகச் சீரமைத்தார் என்றும் கூறினார். மத்திய அரசின் திட்டங்கள், குறிப்பாக விவசாயிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நாடு பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது நாம் 3-வது கட்ட ஆட்சியில் அடியெடுத்து வைத்துள்ளோம். வரும் 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே முக்கிய இலக்கு என்றும், இதற்காக தொழில் துறை, தனிமனித வளர்ச்சி, கல்வி, விவசாயம் மற்றும் இளைஞர்களின் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார். அடுத்ததாக, மீண்டும் 4-வது முறையும் மக்களின் பேராதரவோடு பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வரிப் பகிர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் உதவி மானியம் 341.7 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மீனாட்சி நித்திய சுந்தர் கூறினார். தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.506 கோடி வழங்கப்பட்டுள்ளதுடன், ஆண்டுதோறும் தமிழகத்தின் பொருளாதாரம் உயர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். திருச்சியின் வளர்ச்சிக்கு மட்டும் ரூ5,650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலைகள், உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் கல்லூரிகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கப்பட்டு, மாநிலம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. வந்தே பாரத் ரயில் சேவை, 77 ரயில் நிலையங்கள் புதுப்பித்தல், மெட்ரோ ரயில் திட்டம், சர்வதேச விமான நிலைய மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்துதல் என நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து முக்கியப் பணிகளையும் மத்திய அரசு செய்துள்ளது.

தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு எந்தத் தாமதமும் செய்யவில்லை என்றும், ஏதேனும் நிர்வாக ரீதியிலான காரணங்களால் மட்டுமே அது தள்ளிப் போகிறது என்றும் அவர் விளக்கினார். நிகழ்காலச் சூழலைக் கருத்தில் கொண்டு, மும்மொழி எதிர்ப்பைத் தாண்டி நாம் சிந்திக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் வெறும் மொழி அரசியல் மட்டுமே நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். இன்றைய காலகட்டத்தில் நாம் பல மொழிகளைத் தெரிந்து கொள்வது அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார். பாஜகவின் வளர்ச்சி என்பது தனிமனிதரைச் சார்ந்தது அல்ல என்றும், கட்சி வளர்ச்சியில் சில தடைகள் வரலாம், ஆனால் தன் உயிரையே தியாகம் செய்த தியாகிகளால் உருவான கட்சி இது என்றும் அவர் குறிப்பிட்டார். அண்ணாமலைக்காக இயக்கத்தில் இருந்து சிலர் வெளியேறியிருக்கலாம், ஆனால் அது கட்சிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.

நாங்கள் அண்ணாமலையை இழக்கவில்லை. அண்ணாமலை தான் பாஜகவை இழந்துள்ளார். அவருக்குத்தான் தற்போது கட்டம் சரியில்லை. தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகவும் வலுவாகவும் நிலையாகவும் உள்ளது, வரும் நாட்களில் மேலும் பல புதிய கட்சிகள் பாஜக கூட்டணியில் இணையும். வருங்காலத்தில் மாற்றம் வரும். அது எந்த மாதிரியான மாற்றம் என்பது போகப்போக தான் தெரியும். ஒருவேளை திமுக கூட்டணிக்கு வந்தால் அப்போது பார்க்கலாம் என அவர் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJPTamil Nadu Politicsஅண்ணாமலைதமிழ்நாடு அரசியல்பாஜகமீனாட்சி நித்திய சுந்தர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மெட்ரோ ரயிலில் சிக்கிய பயணிகள்: 15 நிமிடங்கள் கதவுகள் திறக்காமல் பீதி
Next Article சென்னையில் ஏடிஎம் கொள்ளை முயற்சி: இளைஞர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மலப்புரம் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை

கேரளாவில் ஒற்றை காட்டு யானை உலா: மலப்புரம் மக்கள் அச்சம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை ஒன்று…

ஜூலை 31, 2026

காவி உடையணிந்து, உண்டியலில் பணம் போட்ட ராகுல்: எதிர்க்கட்சி நூதனப் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் நிதி விவகாரத்தை கண்டித்து…

ஜூலை 31, 2026

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோவை விமர்சித்த அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் 'வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத்…

ஜூலை 31, 2026

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான்…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

You Might Also Like

வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் பெண்
லைஃப் ஸ்டைல்

வீட்டில் இந்த 4 பொருட்களை வைத்திருக்கிறீர்களா? உடனடியாக அகற்றுங்கள்!

வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவது மன அமைதியையும், சுத்தமான சூழலையும் அதிகரிக்கும். குறிப்பாக ஓய்வு பெற்ற பிறகு, இந்த மாற்றங்கள் அவசியம்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கைவிடப்படுகிறது? தமிழக அரசு முடிவு!

தமிழகத்தில் மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கிடுவதற்காக 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் திட்டம் நிதி நெருக்கடி காரணமாக கைவிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான செய்தியை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

7 ஜூன் 2026: சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சனம்

7 ஜூன் 2026 அன்று சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை மற்றும் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஊஞ்சல் சேவை உட்பட முக்கிய கோவில்களில் சிறப்பு அபிஷேக தரிசனங்கள்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தினமும் முந்திரி சாப்பிட்டால் இந்த உறுப்புகள் பலப்படும்!

தினமும் சிறிதளவு முந்திரிப் பருப்பை சாப்பிட்டு வந்தால், அது நம் உடலுக்கு பல்வேறு மருத்துவ நன்மைகளை அளிக்கும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள சத்துக்கள் இதயம், சிறுநீரகம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?