MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் அதிசய பருப்புக்கீரை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் அதிசய பருப்புக்கீரை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் அதிசய பருப்புக்கீரை!

லைஃப் ஸ்டைல்

கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் அதிசய பருப்புக்கீரை!

Sri Prem Kumar R
Last updated: ஆகஸ்ட் 27, 2026 6:53 காலை
Sri Prem Kumar R
Share
கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் அதிசய பருப்புக்கீரை
பருப்புக்கீரையில் உள்ள மருத்துவ குணங்கள்
SHARE

பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கும், குடலுக்கும் நன்மை செய்யக்கூடியவை. அதிலும் பருப்பு கீரையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த கீரை மூலம் கல்லீரல் நோய்கள் குணமடையும் என நம்பப்படுகிறது.

பருப்புக்கீரையின் வேர்வை கொப்பளங்கள், வெந்நீர் கொப்பளங்கள், தீக்காய கொப்ளங்களுக்கும் அரைத்து தடவினால் நிவாரணம் கிடைக்கும். மேலும், உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் தன்மையும் இதற்கு உண்டு. இக்கீரையின் விதைகளை 4 கிராம் அளவிற்கு எடுத்து, தண்ணீரில் சுத்தம் செய்து இளநீரில் கலந்து பருகினால் சீதபேதி நிற்கும். வயிற்று எரிச்சல் மற்றும் சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கும் இது தீர்வாக அமையும்.

ஆரோக்கியம் தரும் பருப்புக்கீரையில் அபரிமிதமான அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது நுரையீரல் பாதிப்புகளில் இருந்து காக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. மேலும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குறைக்கவும் இது உதவுகிறது.

அடிக்கடி பருப்புக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் சூடு தணியும். மலச்சிக்கல் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். வெயில் காலங்களில் உண்பதற்கு மிகவும் ஏற்ற கீரையாக இது கருதப்படுகிறது.

பருப்புக் கீரை மசியலுடன் நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர, வெயில் காலத்தில் ஏற்படும் உடல் சூடு, நீர்க்கடுப்பு, வியர்க்குரு, வேனல்கட்டிகள் போன்றவை தவிர்க்கப்படும். பித்தம் அதிகம் உள்ளவர்கள் மற்றும் அடிக்கடி தலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் தரும் பருப்புக்கீரை மிகவும் ஏற்றது.

ஆரோக்கியம் தரும் பருப்புக்கீரை மூலம் கல்லீரல் நோய்கள் குணமடையும். இதில் ஒமேகா 3 சத்தும் நிறைந்துள்ளது. கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் பருப்புக் கீரையைப் பயன்படுத்தினால், எளிதில் கால்சியம் கிடைக்கும்.

மேலும், பருப்புக் கீரை மலச்சிக்கலைப் போக்குவதுடன், குடற்புழுக்களை அகற்றவும் உதவுகிறது. இரைப்பையில் மிகுதியாக சுரக்கும் அமிலம் காரணமாக ஏற்படும் நெஞ்செரிச்சலையும் இது போக்கும். தலைவலி உள்ளவர்கள் பருப்புக் கீரையை மைபோல் அரைத்து தலைக்கு பற்றுப்போட்டால் தலைவலி நீங்கும்.

இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பருப்புக்கீரையை உணவில் சேர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஆரோக்கியம்உடல் சூடுஒமேகா 3கல்லீரல் நோய்கள்கீரைபருப்புக்கீரைமலச்சிக்கல்வைட்டமின்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆரோக்கியமான பாதாம் பருப்புகள் நிறைந்த ஒரு கிண்ணம் பாதாம்: மூளைக்கும் இதயத்திற்கும் நலம் தரும் அற்புத உணவு!
Next Article தமிழக முதல்வர் விஜய் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்து அறிவிக்கிறார் அக்டோபர் 2 முதல் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம்: தமிழக அரசு அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

சோயா பாதிப்பு: விந்தணுக்கள் குறையுமா? ஆய்வு சொல்வது என்ன?

ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு சோயா பொருட்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என பாஸ்டன் ஆய்வு தெரிவிக்கிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கார்பனேட்டட் பானங்களும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்துக: தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் IOC நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ள 4 ஹைட்ரோகார்பன் கிணறுகளை சுற்றுச்சூழல் பாதிப்பு, மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அதிமுகவில் சர்ச்சை: ஆர்.பி.உதயகுமாருக்கு விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் சரமாரி கேள்வி!

அதிமுகவில் உட்கட்சி பூசல்: ஆர்.பி.உதயகுமாரை கடுமையாக விமர்சித்த விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள். மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் ஜெயிக்க சொல்லுங்கள் என சவால்.

3 Min Read
லைஃப் ஸ்டைல்

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி-வங்கதேசம் ஒருநாள் தொடர்: நாளை தொடக்கம்

15 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இது இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?