MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பரந்தூர் விமான நிலையம்: விஜய் ஈகோவை கைவிட வேண்டும் – வானதி சீனிவாசன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பரந்தூர் விமான நிலையம்: விஜய் ஈகோவை கைவிட வேண்டும் – வானதி சீனிவாசன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பரந்தூர் விமான நிலையம்: விஜய் ஈகோவை கைவிட வேண்டும் – வானதி சீனிவாசன்

தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையம்: விஜய் ஈகோவை கைவிட வேண்டும் – வானதி சீனிவாசன்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 24, 2026 6:08 மணி
Fernandez
Share
பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
SHARE

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட்டதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளும் செயல் என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். பரந்தூரிலேயே விமான நிலையம் அமைக்க முதலமைச்சர் தனது ஈகோவைக் கைவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், "விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், புதிய விமான நிலையம் அமைப்பதற்குப் பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டு, புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்" என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது அறிக்கையில் வானதி சீனிவாசன் மேலும் கூறுகையில், "பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிற்குப் புதிய விமான நிலையம் என்பது மிக அத்தியாவசியமானது. ஏற்கனவே பெங்களூரு, ஐதராபாத் போன்ற விமான நிலையங்கள் சென்னை விமான நிலையத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டு, பெரும்பகுதி நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, அதை ரத்து செய்வது மிக மோசமான முன்னுதாரணமாகும். இது தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகளை வெகுவாகப் பாதிக்கும். ஆட்சி மாறியதும் திட்டத்தைத் தொடர முடியாது என்ற அச்சம் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"தற்போது அனைத்து மாநிலங்களும் போட்டிபோட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் சூழலில், விஜய் அரசின் இந்தச் செயல்பாடு, இருக்கும் முதலீட்டாளர்களையும் வெளியேற்றிவிடுமோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது. புதிய இடம் தேர்வு செய்து விமான நிலையம் அமைப்பது எளிதான காரியம் அல்ல. விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்குப் பாதிப்பின்றி தமிழ்நாட்டில் 6,000 ஏக்கர் நிலம் கிடைப்பது சாத்தியமில்லை. புதிய இடத்தைத் தேர்வு செய்தால் அங்கும் விவசாயிகள் போராட்டம் பரந்தூரைவிட வீரியமாக இருக்கும்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடினோம் என்ற ஒரே காரணத்திற்காக அந்தத் திட்டத்தை ரத்து செய்வது சரியானது அல்ல. எனவே, முதலமைச்சர் விஜய் தனது ஈகோவைக் கைவிட்டு, பரந்தூரிலேயே விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தைத் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதையும், புதிய விமான நிலையம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களின் விவரங்களையும் உடனடியாக வெளியிட வேண்டும்" என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

"புதிய விமான நிலையம் அமைக்க சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுவரை சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனால், சென்னைக்குக் குறைந்தது 10 ஆண்டுகளுக்குப் புதிய விமான நிலையம் வராது என்ற அச்சம் தொழில்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதை உணர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் செயல்பட வேண்டும். பரந்தூரிலேயே விமான நிலையத்தை அமைக்க வேண்டும்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Joseph VijayParandur AirportVanathi Srinivasanதமிழ்நாடு வளர்ச்சிபரந்தூர் விமான நிலையம்வானதி சீனிவாசன்விமான நிலைய திட்டம்ஜோசப் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் இந்திய செய்தி சேனல்கள் மீது அமெரிக்க தூதர் விமர்சனம்
Next Article இந்திய கிரிக்கெட் வீரர் தேவ்தத் படிக்கல் பேட்டிங் செய்யும் காட்சி படிக்கல் சதத்தால் கம்பீருக்கு தலைவலி – ஸ்ரீகாந்த் கடும் எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கணவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் குறித்த விசாரணை

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி: குடலை உருவி பையில் போட்ட கொடூரம்!

சென்னையில் கணவனை கொடூரமாக கொலை செய்து, குடல்களை உருவி பையில் போட்ட மனைவி,…

ஆகஸ்ட் 24, 2026

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு!

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

ஆகஸ்ட் 24, 2026

புதுச்சேரியில் 10 மலிவு விலைக் கடைகள் திறப்பு

புதுச்சேரியில் ஏழை, நடுத்தர மக்களைக் காக்க 10…

ஆகஸ்ட் 24, 2026

செப்.5ல் சிஜேபி பேரணி: மத்திய அரசுக்கு கண்டனம்

ஜூலை 25 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய…

ஆகஸ்ட் 24, 2026

ஓணம்: நேந்திரம் வாழை விலை கிடுகிடு உயர்வு!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நேந்திரம் வாழைக்காய்…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

சென்னை மெட்ரோ ரயில் நிலைய அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

சென்னை மெட்ரோ: விதிமீறல்களுக்கு ரூ.2,500 அபராதம்

சென்னை மெட்ரோவில் விதிகளை மீறி மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு இனி ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 Min Read
வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சி
தமிழ்நாடு

வங்கி மேலாளரை தாக்கிய அழகிரி மகள்: ஊழியர்கள் போராட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, வங்கி மேலாளரை தாக்கிய சம்பவத்தை அடுத்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

2 Min Read
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

நீட் எதிர்ப்பு: திமுக-கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்ப்பு!

நீட் தேர்வை ரத்து செய்து, தமிழ் மொழி மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாக்க திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த கூட்டணியை…

2 Min Read
தமிழ்நாடு

எருமையூரில் 2 நாள் மின்தடை: பாம்புகளால் மக்கள் அச்சம்

எருமையூரில் 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாம்புகள் ஊருக்குள் வருவதாகவும், மக்கள் அச்சத்தில் உள்ளனர். அடிப்படை வசதிகள் பாதிப்பு.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?