MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கள்ளக்காதல் விபரீதம்: கணவர் வெளிநாட்டில், மனைவி கொலை – தோட்ட்த்தில் புதைத்த கொடூரம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கள்ளக்காதல் விபரீதம்: கணவர் வெளிநாட்டில், மனைவி கொலை – தோட்ட்த்தில் புதைத்த கொடூரம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கள்ளக்காதல் விபரீதம்: கணவர் வெளிநாட்டில், மனைவி கொலை – தோட்ட்த்தில் புதைத்த கொடூரம்!

தமிழ்நாடு

கள்ளக்காதல் விபரீதம்: கணவர் வெளிநாட்டில், மனைவி கொலை – தோட்ட்த்தில் புதைத்த கொடூரம்!

Admin
Last updated: மே 14, 2026 6:11 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடியில் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விபரீதமாகி, மனைவியே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல், அவரது கணவர் மற்றும் அவரது தம்பி உதவியுடன் தோட்ட்த்தில் புதைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த 62 வயதான செல்லத்துரை என்பவரின் மகள் பிருந்தாதேவி (32). இவருக்கு கிருஷ்ணகுமார் என்பவருடன் திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். கிருஷ்ணகுமார் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், பிருந்தாதேவி குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற பிருந்தாதேவி வீடு திரும்பாததால், அவரது தந்தை செல்லத்துரை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பிருந்தாதேவி பக்கத்து வீட்டில் வசிக்கும் கட்டிட ஒப்பந்ததாரர் மாரிமுத்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் அவரது மனைவி சரவணப் பிரியா (34) வீட்டிற்கு சென்றதும், பின்னர் வெளியே வரவில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மாரிமுத்து மற்றும் சரவணப் பிரியாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பிருந்தாதேவி கொலை செய்யப்பட்டது அம்பலமானது. பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி மாரிமுத்து வீட்டிற்கு வந்து சென்ற பிருந்தாதேவிக்கும், மாரிமுத்துவுக்கும் நாளடைவில் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பிருந்தாதேவி மாரிமுத்துவுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சரவணப் பிரியாவுக்கும், பிருந்தாதேவிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணப் பிரியா, பிருந்தாதேவியை தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது கணவர் மாரிமுத்து மற்றும் அவரது தம்பி கார்த்திக் உதவியுடன் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியில் உள்ள தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் புதைத்துள்ளனர்.

இதையடுத்து சரவணப் பிரியா மற்றும் மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர். உடலை ஏற்றிச் சென்ற காரையும், தலைமறைவான கார்த்திக்கையும் தேடி வருகின்றனர். மாரிமுத்துவை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், தோட்ட்த்தில் உடலை புதைத்த இடத்தை கண்டுபிடித்தனர். இரவு நேரமானதால், இன்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பிருந்தாதேவியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7Tamil Nadu Crimeகள்ளக்காதல்கொலைதூத்துக்குடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோயம்பேடு பேருந்து நிலையத்தை மால் ஆக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்!
Next Article இந்திய ‘ஏ’ அணிக்கு வைபவ் சூர்யவன்ஷிக்கு முதல் வாய்ப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் இன்று (ஜூன் 28) நடைபெறுகிறது. முதல்வர் ஜோசப் விஜய் இதனை தொடங்கி…

2 Min Read
தமிழ்நாடு

தூங்கும்போது சார்ஜ் போடுவது உயிருக்கு ஆபத்து: மின்வாரியம் எச்சரிக்கை

தூங்கும்போது செல்போன் சார்ஜ் போடுவது உயிருக்கு ஆபத்தானது என ஈரோடு மின் ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது. போலியான சார்ஜர்கள், முறையற்ற எர்த் இணைப்பு, ஈரத்துணியால் சுத்தம் செய்தல் போன்றவை…

2 Min Read
பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு

ராமதாஸ் வழக்கு: அன்புமணிக்கு ஆதரவாக முடிவெடுத்த பாமக

பாமகவில் யாருக்கு உச்சபட்ச அதிகாரம் என்பதில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிய நிலையில், ராமதாஸ் அன்புமணிக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளார்.

1 Min Read
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாடு

அமைச்சர் கீர்த்தனா குழந்தையிடம் அத்துமீறல்: சீமான் கண்டனம்

அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு செல்லாத அமைச்சர் கீர்த்தனா, அரசுப் பள்ளியில் குழந்தையிடம் அத்துமீறியதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?