ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்தைகளில் இழுபறி நீடித்து வரும் சூழலில் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமான் வளைகுடாவின் மேல் பறந்துகொண்டிருந்தபோது அமெரிக்க F-35 போர் விமானம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஐக்கிய அரபு அமீரகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்தப் போர் விமானம், ஓமன் வளைகுடாவின் மீது பறந்துகொண்டிருந்தபோது ஆபத்து சமிக்ஞையை அனுப்பிய பின்னர் ரேடாரில் இருந்து மறைந்தது.
அதன் பிறகு அந்த விமானம் எங்கு சென்றது என்பது தெரியவில்லை. இதற்கிடையில், அந்த விமானத்தை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை ராணுவம் சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் அமெரிக்க தரப்பு இன்னும் இதை உறுதிப்படுத்தவில்லை. விமானத்தை கண்டறியும் பணியும் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக ஏற்கனவே அமெரிக்காவின் 3 போர் விமானங்கள் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவை தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்தில் சிக்கின என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
🇺🇸⚡ An F-35 aircraft belonging to the US Air Force has launched an emergency signal (7700) over the Strait of Hormuz. pic.twitter.com/887bVKdvdr
