MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சென்னையில் ஆக்ரோஷமான தெருநாய்களைப் பராமரிப்பதற்கான தனிமைப்படுத்தல் மையம் அமைப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > சென்னையில் ஆக்ரோஷமான தெருநாய்களைப் பராமரிப்பதற்கான தனிமைப்படுத்தல் மையம் அமைப்பு!
தமிழ்நாடு

சென்னையில் ஆக்ரோஷமான தெருநாய்களைப் பராமரிப்பதற்கான தனிமைப்படுத்தல் மையம் அமைப்பு!

Admin
Last updated: May 11, 2026 4:47 pm
Admin
Share
SHARE

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்தவும், நோய்களிலிருந்து பாதுகாக்கவும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்த புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 5 இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட நிலையில், செட்டிமேடு, திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் கண்ணப்பர்திடல் என கூடுதலாக 5 இடங்கள் என மொத்தம் 10 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதுதவிர அம்பத்தூர் மண்டலம், வார்டு-86க்குட்பட்ட அத்திப்பட்டு, ஆலந்தூர் மண்டலம், வார்டு-158க்குட்பட்ட நந்தம்பாக்கம், பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலை, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194க்குட்பட்ட உயிரி எரிவாயு நிலையம் ஆகிய 4 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்களுக்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று விரைவில் அனைத்து மையங்களும் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, 28 நாய்கள் பிடிக்கும் வாகனங்கள், 159 நாய் பிடிக்கும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 150 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், புதிதாக 15 நாய் பிடிக்கும் வாகனங்கள் மண்டலங்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன.

இதுநாள்வரை 88,240 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களுக்கும் இலவச ரேபிஸ் நோய் தடுப்பூசியும், அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 1,47,538 தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி மற்றும் அக புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர் நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வெறிநாய்க்கடி நோய் பாதிப்பு (Rabies) மற்றும் கெனைன் டிஸ்டெம்பர் (Canine Distemper) எனும் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் கடிக்கும் தன்மை கொண்ட ஆக்ரோஷமான தெருநாய்கள் ஆகியவற்றை பராமரிப்பதற்கான தனிமைப்படுத்தல் மையம் (Quarantine Center) பெருங்குடி மண்டலம், வார்டு-189க்குட்பட்ட ம.பொ.சி. நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் நோயுற்ற 100 தெருநாய்களை பராமரிப்பதற்கான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட தெருநாய்களை உடனடியாக மீட்கவும், அவசர மீட்புப் பணிக்கும் 6 சிறப்பு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய உடனடி நடவடிக்கைகள் மூலம் ரேபிஸ் மற்றும் கெனைன் டிஸ்டெம்பர் நோய் பரவல் தடுக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் நலன் பாதுகாக்கப்படும்.

பொதுமக்களிடமிருந்து தெருநாய்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க மாநகராட்சி சார்பில் பிரத்யேக புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரேபிஸ் மற்றும் கெனைன் டிஸ்டெம்பர் (Canine Distemper) நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் கடிக்கும் தன்மை கொண்ட ஆக்ரோஷமான தெருநாய்கள் இருப்பின் பொதுமக்கள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மையத்தின் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், குணப்படுத்த முடியாத நோயுற்ற நாய்கள், கடிக்கும் தன்மையுள்ள ஆக்ரோஷமான நாய்கள் ஆகியவற்றை பராமரிப்பதற்காக மணலி மற்றும் பெருங்குடி மண்டலம்,

வார்டு-189 ஆகிய 2 இடங்களில் தலா 250 தெருநாய்களை பராமரிப்பதற்காக நாய்கள் காப்பகங்கள் (Dog Shelters) அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, பொதுமக்கள் மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்கள் தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article F35 மாயம்: மீண்டும் அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்?
Next Article “சினி​மா​வில் பாலின பாகு​பாடு இப்போதும் இருக்​கிறது” – நடிகை கீர்த்தி சனோன் புகார்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமுல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல், நாடு முழுவதும் பால் விலையை…

May 13, 2026

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல்…

May 13, 2026

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள…

May 13, 2026

பிரிக்ஸ் மாநாடு: டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்!

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும்…

May 13, 2026

திருமணத்தில் ஸ்விக்கி டெலிவரி: பூசாரிக்கு விறகு கொடுத்த நபர் வைரல்!

தென்னிந்திய திருமணங்கள் எப்போதும் பரபரப்புக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும்…

May 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளேன் – மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.

0 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்!! சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடி!

கடந்த சட்ட மன்ற தேர்தலில் 224 வேட்பாளர்களின் சுயவிவரப் பிரமானங்களை ஆய்வு செய்தபோது 192 பேர் கோடீஸ்வர எம்.எல்.ஏக்களின் சொத்துமதிப்பு என்று ஆய்வு அறிக்கை செய்யப்பட்டது. இந்நிலையில்…

1 Min Read
தமிழ்நாடு

அரசியல் கருத்துக்களை முடக்க தடை: எக்ஸ் கணக்குகள் வழக்கு – உயர்நீதிமன்றம்

அரசியல் கருத்துக்களைப் பதிவிடும் 18 எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்குகளை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸார் அனுப்பிய நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

1 Min Read
தமிழ்நாடு

மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணியுடன் விஜயின் தமிழக முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது. முதன்முறையாக போட்டியிட்டதால், விஜய் உடன்…

4 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?