MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி: பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி: பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி: பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழ்நாடு

1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி: பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Admin
Last updated: மே 11, 2026 3:18 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பெரியகருப்பன் 83 ஆயிரத்து 364 வாக்குகளையும், த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 365 வாக்குகளையும் பெற்றிருந்தனர். த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் அவசர வழக்கு தொடர்ந்தார். அதில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்ட தொகுதிக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அந்த வாக்கை மீட்டு, என்னுடைய தொகுதியின் கணக்கில் சேர்க்க வேண்டும். அதுவரை சீனிவாச சேதுபதி, சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விடுமுறை நாளான நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தஹி, சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதி தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அங்கு அந்த வாக்கை, அந்த தொகுதி தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். அந்த வாக்கை சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பியிருக்க வேண்டும். செல்லத்தக்க அந்த வாக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தால் இரு வேட்பாளர்களும் சமமான வாக்குகளை பெற்றிருப்பர். குலுக்கல் மூலம் வெற்றி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்று வாதிட்டார்.

உடனே நீதிபதிகள், இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏதேனும் விதிகள் வகுத்துள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மூத்த வக்கீல், இதுசம்பந்தமாக எந்த நடைமுறையும் இல்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்கள் அளித்தும் எந்த பதிலும் இல்லை. தவறான முகவரிக்கு செல்லும் கடிதம் கண்டு பிடிக்கும்போது, சரியான முகவரிக்குதானே அனுப்பி வைக்க வேண்டும். அது போல இந்த வாக்கை சரியான தொகுதிக்கு அனுப்ப உத்தரவிடவேண்டும் என்றார்.

த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, இந்த விவகாரம் தொடர்பாக பெரியகருப்பன் தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும். சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை கோரி இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது என்பதால், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்ககூடாது. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டால், அவரை கடமையாற்ற அனுமதிக்க வேண்டும். சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்க முடியாது. தடை விதித்தால், மக்கள் உரிமை பாதிக்கப்படும் என்றார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் கே.தருண், இந்த விவகாரத்தில் தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும். தபால் வாக்குகள் இந்திய தபால் துறை மூலம் அனுப்பப்படுவதில்லை. தபால் வாக்குகளை பெற தேர்தல் ஆணையம், துணை தாசில்தாரர் அந்தஸ்து அதிகாரியை நியமிக்கும். அந்த அதிகாரி தபால் வாக்குகளை பெற்று, சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார்.

அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இதில் அமர்த்தப்படுவதால் எந்த தவறும் நடக்காது. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாற்றி அனுப்பி விட்டால், என்ன செய்ய வேண்டும்? என சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் வழக்கு தாக்கல் செய்யும் வரை தேர்தல் தொடர்பான ஆவணங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றார்.

அதற்கு நீதிபதிகள், தபால் வாக்குகள் வேறு தொகுதிக்கு அனுப்பியது குறித்து திமுக வேட்பாளரின் புகாருக்கு பதிலளிக்காதது ஏன்? ஒரு வாக்காக இருந்தாலும் பதிலளிக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. இதற்கான காரணங்களை விரிவாக விளக்கி இன்று தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரிப்போம் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பத்தூர் பெயர் கொண்ட வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட ஒரு தபால் வாக்குச்சீட்டால், தேர்தல் முடிவுகள் மாறியுள்ளதாகவும், தபால் வாக்குச்சீட்டு தொகுதி மாறி அனுப்பினால் என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது தெரியாத நிலை உள்ளதாகவும் பெரியகருப்பன் தரப்பில் வாதிட்டப்பட்டது.

இறுதியில் இருதரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்த விமானம்.! நேபாளத்தில் அதிர்ச்சி சம்பவம்
Next Article வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தான் 386 ரன்களுக்கு ஆல்அவுட்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தி பேசுகிறார்

ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கையை விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்…

ஆகஸ்ட் 14, 2026

பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை: 2 வார கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ள பாக்கெட்…

ஆகஸ்ட் 14, 2026

ஹரித்வார் புனித பூமி குப்பை மேடானது: பக்தர்கள் வருகையால் அவதி

உத்தராகண்ட் மாநிலத்தின் புனித நகரமான ஹரித்வார், 5…

ஆகஸ்ட் 14, 2026

திருப்பதியில் ஒரே நாளில் 82,800 பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில்…

ஆகஸ்ட் 14, 2026

ஜார்க்கண்டில் அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடு: 600 பேர் மீது வழக்கு

ஜார்க்கண்டில் அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாகக்…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வீட்டில் கஞ்சா வளர்த்த தவெக ஆதரவாளர் கைது: பரபரப்பு!

சென்னையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு இலக்குக்கு எதிராக இத்தகைய சம்பவங்கள் நடப்பது விமர்சனங்களை…

1 Min Read
தமிழ்நாடு

பழனி முருகன் கோவில்: ரூ.3000 லஞ்சம் பெற்ற காவலர் பணிநீக்கம்

பழனி முருகன் கோவிலில் விரைவு தரிசனம் செய்ய பக்தர்களிடம் ₹3 ஆயிரம் லஞ்சம் பெற்ற காவலர் முத்து, லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதையடுத்து பணியில் இருந்து நீக்கப்பட்டார்.…

1 Min Read
அமைச்சர் அருண்ராஜ் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

இளநிலை மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். மாணவர் சேர்க்கைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கும்.

1 Min Read
தமிழ்நாடு

வெங்கடநாராயணா நியமனத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது 'வெந்த புண்ணில் வேல்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?