MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரோஹித் சர்மாவுக்கு இனி வாய்ப்பில்லை: சடகோபன் ரமேஷ் கருத்து
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரோஹித் சர்மாவுக்கு இனி வாய்ப்பில்லை: சடகோபன் ரமேஷ் கருத்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ரோஹித் சர்மாவுக்கு இனி வாய்ப்பில்லை: சடகோபன் ரமேஷ் கருத்து

விளையாட்டு

ரோஹித் சர்மாவுக்கு இனி வாய்ப்பில்லை: சடகோபன் ரமேஷ் கருத்து

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 17, 2026 4:53 மணி
Sri Prem Kumar R
Share
முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் கருத்து தெரிவிக்கிறார்
ரோஹித் சர்மாவுக்கு உலகக் கோப்பை அணியில் இடம் இல்லை - சடகோபன் ரமேஷ்
SHARE

2027 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் திட்டங்கள் குறித்து இந்திய கேப்டன் கில் பேசியபோது, ரோஹித் சர்மாவின் பெயரை குறிப்பிடாமல் விட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதன் மூலம், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெற மாட்டார் என்பதை கில் மறைமுகமாக உணர்த்திவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 39 வயதான ரோஹித் சர்மா 47 பந்துகளில் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான தடுமாற்றம் அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பேசிய கேப்டன் கில், 'ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருந்துள்ளனர். இந்திய அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் திறமையும் அனுபவமும் எங்களுக்கு விலைமதிப்பற்றது' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், உலகக் கோப்பைக்கான காம்பினேஷன் குறித்து பேசிய கில், 'எந்த காம்பினேஷன் சரியாக இருக்குமோ, எந்த வீரர்கள் சரியான தேர்வாக இருப்பார்களோ அதை வைத்து தான் நாங்கள் முடிவு எடுக்க முடியும். தற்போது அணியில் இல்லாத வீரர்கள் கூட மீண்டும் வரலாம்' என்று கூறியிருந்தார்.

இந்த பேட்டியின்போது, விராட் கோலியின் பெயரை கில் பலமுறை குறிப்பிட்டாலும், ரோஹித் சர்மாவின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், 'கில் அளித்த பேட்டியை பார்த்தோம். 2027 உலகக் கோப்பை பற்றி பேசும்போது அவர் விராட் கோலியின் பெயரையே திரும்பத் திரும்பச் சொன்னார். ஆனால், ரோஹித் சர்மாவின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. இதன் மூலம் இந்தியாவின் உலகக் கோப்பை திட்டத்தில் ரோஹித் சர்மா இல்லை என்பது தெளிவாகி இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், 'ரோஹித் சர்மாவுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவு சாதனைகளை செய்தும் அவருக்கு அழுத்தம் தருவது உண்மையில் வேதனையாக இருக்கின்றது. யார் வேண்டுமானாலும் அவர் இடத்திற்கு வரலாம். ஆனால் அவர்கள் ரோஹித் இடத்தை பிடிக்க நீண்ட நாட்கள் ஆகலாம். ஏனென்றால் இவர்கள் எல்லாம் ஒரு தலைமுறைக்கான வீரர்கள்' என்றும் தெரிவித்தார்.

'நான் இன்னும் ஒரு விஷயத்தை நினைவு கூற விரும்புகிறேன். இந்திய அணி தோனியை இன்னும் மாற்றக்கூடிய வீரரை கண்டுபிடிக்கவில்லை' என்றும் சடகோபன் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். கில்லின் இந்த கருத்து, ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:2027 உலகக் கோப்பைCricket World Cup 2027GillRohit SharmaSadagopan Rameshகிரிக்கெட்கில்சடகோபன் ரமேஷ்ரோஹித் சர்மா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் பேசுகிறார் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
Next Article காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் திமுக ஒருபோதும் பாஜகவுடன் இணையாது: காங்கிரஸ் நம்பிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி

பணியிடப் பாதுகாப்பு: பெண்களின் பணித்திறனுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

பெண்களின் பணித்திறனை அதிகரிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய வளர்ச்சியை எட்டுவதற்கும் பணியிடங்களில் பாதுகாப்பு…

ஜூலை 17, 2026

இஸ்லாமிய வீட்டுப்பாடம்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இந்து மாணவருக்கு இஸ்லாமிய வீட்டுப்பாடம் கொடுத்ததாக…

ஜூலை 17, 2026

பீகாரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் 3 வயது…

ஜூலை 17, 2026

ஜூலை 20 வரை உயிரோடு இருப்பேன்: சோனம் வாங்சுக் உறுதி

லடாக் மக்களின் நலனுக்காகப் போராடும் சோனம் வாங்சுக்,…

ஜூலை 17, 2026

மத்தியபிரதேசம்: 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி திருட்டு

மத்தியபிரதேச நர்வார் கோட்டையில் இருந்து 400 ஆண்டுகள்…

ஜூலை 17, 2026

You Might Also Like

விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷியை சீண்டிய இலங்கை வீரர்: நடந்தது என்ன?

இந்தியா ஏ - இலங்கை ஏ அணிகள் மோதிய போட்டியில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியை இலங்கை வீரர் விஷென் ஹலம்பகே சீண்டியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. 'வீட்டுக்குப்…

2 Min Read
விளையாட்டு

பும்ராவுக்கு ஓய்வா? ஜம்மு வீரருக்கு வாய்ப்பு – ஆப்கன் டெஸ்டில் இந்திய அணி மாற்றம்?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஜம்மு வீரர் ஆகிப் நபி தாருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்.

2 Min Read
விளையாட்டு

விராட் கோலி சதம்: கொல்கத்தாவை வீழ்த்தி ஆர்சிபி அசத்தல் வெற்றி!

விராட் கோலியின் அதிரடி சதம் மற்றும் இறுதிவரை ஆட்டமிழக்காத ஆட்டம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 6…

1 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி! ஆர்சிபிக்கு 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

ஐபிஎல் 2026-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இஷான் கிஷன் ஆட்ட நாயகன் விருது…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?