MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காவிரி நீர்: காங்கிரஸ் அமைச்சர்களை நீக்க தயாரா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காவிரி நீர்: காங்கிரஸ் அமைச்சர்களை நீக்க தயாரா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காவிரி நீர்: காங்கிரஸ் அமைச்சர்களை நீக்க தயாரா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழ்நாடு

காவிரி நீர்: காங்கிரஸ் அமைச்சர்களை நீக்க தயாரா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

Fernandez
Last updated: ஜூலை 9, 2026 8:53 மணி
Fernandez
Share
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடுதல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
SHARE

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கான நீரை உடனடியாக விடுவிக்க கர்நாடக அரசு தவறினால், தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்க தமிழக அரசு தயாரா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது பரந்து விரிந்த பாரதத்தில் பல்வேறு மாநில ஆட்சியாளர்கள் உள்ளனர். அவர்களில் திமிர்த்தனமும், அதிகார மமதையும், சர்வாதிகார மனப்பான்மையும், சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் எண்ணம் கொண்ட ஒரே ஆட்சியாளர்களாகத் திகழ்வது கர்நாடகத்தை நிர்வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் என்பது நம் நாட்டின் சாபக்கேடு. தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்களின் வேளாண் தொழிலுக்கு காவிரி நீரை நம்பித்தான் இருக்கிறார்கள். சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்கு காவிரி நீரை பயன்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காக நாம் அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டும் என்று கர்நாடக ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களே தவிர, காவிரியில் நமக்குள்ள உரிமையை உணர மறுக்கிறார்கள்.

காவிரி நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் தகராறு தீர்ப்பாயமும், உச்ச நீதிமன்றமும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி பல தீர்ப்புகளை வழங்கிய பின்பும், அவைகளை உதாசீனப்படுத்துவதையே கர்நாடக ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தின் பெரும் வளர்ச்சிக்கு அங்கு வாழும் தமிழர்களின் உழைப்புதான் காரணம் என்பதை, தற்போது ஆட்சி செய்யும் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. D.K. சிவகுமார் அவர்கள் மறந்துவிடக்கூடாது.

காங்கிரஸ் அரசின் நீர்பாசனத் துறை அமைச்சர் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் தர உத்தரவிடவில்லை என்றும், தமிழகத்திடமிருந்து காவிரியில் உரிய பங்கு நீரை திறந்துவிட எந்தக் கோரிக்கையும் விடவில்லை என்றும் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்ற காவிரி ட்ரிபியூனல் தீர்ப்பையும், அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும், கர்நாடக அரசு முறையாக செயல்படுத்துகிறதா என்பதை கண்காணிப்பது தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி.

இதை மறைத்துவிட்டு, மேலாண்மை ஆணையம் உத்தரவிடவில்லை, தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக நீர்பாசனத் துறை அமைச்சர் திரு. ராமலிங்க ரெட்டி அவர்கள் சொல்வது வடிகட்டிய பொய். தமிழக மக்களின் வாழ்வோடு கர்நாடக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் விளையாடுவதை, த.வெ.க. அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கக்கூடாது!

கர்நாடக அரசு காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கர்நாடகம் தமிழகத்திற்கு தரவேண்டிய பங்கு நீரைப் பெறுவதற்கு த.வெ.க. அரசின் முதலமைச்சர் கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்.

காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கவில்லையெனில், 'தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார்' என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க த.வெ.க. அரசின் முதலமைச்சர் தயாரா? 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' – ‘ஆட்சிப் பொறுப்பில் இருந்து தவறி, மக்களுக்கு அநீதி இழைப்பவர்களை அந்த அறநெறியே, எமனாக (கூற்றாக) மாறி தண்டிக்கும்' என்று தமிழக, கர்நாடக இரு ஆட்சியாளர்களையும் எச்சரிக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKCauvery WaterCongress MinistersEdappadi PalanisamyKarnatakaTamil Nadu Governmentஅதிமுகஎடப்பாடி பழனிசாமிகர்நாடகாகாங்கிரஸ் அமைச்சர்கள்காவிரி நீர்தமிழக அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடுரோட்டில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி கறி விருந்து சென்ற ஓட்டுநர்
Next Article தமிழக முதல்வர் விஜய் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் குழுவில் திருமாவளவன்: தவெக அரசின் முக்கிய அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்து போலீஸ் அதிகாரி அபராதம் விதிக்கும் காட்சி

காதலி லிப்ஸ்டிக் முத்தம்: காதலனுக்கு ரூ.5,500 அபராதம்

காதலியின் லிப்ஸ்டிக் முத்தத்தின் அடையாளத்தை காரில் இருந்து அழிக்க உத்தரவிட்டதோடு, போக்குவரத்து போலீசாரால்…

ஆகஸ்ட் 25, 2026

ரஷ்ய அதிபர் புதினுடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

மாஸ்கோவில் நடைபெற்ற இந்திய-ரஷ்ய வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற…

ஆகஸ்ட் 25, 2026

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த சிறப்பு ரயில் சேவை தொடக்கம்

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு…

ஆகஸ்ட் 25, 2026

பாஜகவை அரசியலில் இருந்து அகற்றும் வரை ஓயமாட்டேன் – மம்தா பானர்ஜி

பாஜகவை இந்திய அரசியலில் இருந்து முற்றிலுமாக அகற்றும்…

ஆகஸ்ட் 25, 2026

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரள மாணவிக்கு மகுடம்; தமிழக வைஷ்ணவி 2ஆம் இடம்

கேரள சட்ட மாணவி கஸியாலிஸ் மெஜோ 'மிஸ்…

ஆகஸ்ட் 25, 2026

You Might Also Like

கோவை அன்னூர் பகுதியில் கொசு மருந்து தெளிக்கும் வாகனம்
தமிழ்நாடு

கோவை: கொசு மருந்து அடித்ததில் மூச்சுத்திணறி இருவர் உயிரிழப்பு!

கோவை அன்னூர் பகுதியில் வீட்டினுள் கொசு மருந்து அடித்ததில் மூச்சுத்திணறி மோகன் (65) மற்றும் ராணி (75) உயிரிழந்தனர். Pyrephrum மருந்து அளவுக்கு அதிகமாக இருந்ததாக குற்றச்சாட்டு…

1 Min Read
தமிழ்நாடு

பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: தமிழிசை கண்டனம்

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யின் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மான விவாதம் இன்று தொடங்கியது. இந்த விவாதத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர்…

1 Min Read
நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு
தமிழ்நாடு

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு: 11.21 லட்சம் பேர் தேர்ச்சி!

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு: 11.21 லட்சம் பேர் தேர்ச்சி! 58% மாணவிகள் தேர்ச்சி. முதலிடம் பிடித்த மாணவர்கள் விவரம். மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்வது எப்படி?…

2 Min Read
தமிழ்நாடு

திருமண வீட்டில் ஒப்பாரி அழலாமா? – தவெக கேள்வி

திருமண நிகழ்ச்சியில் ஒப்பாரி வைத்து அழுவது போல் அரசியல் பேசுவது சரியல்ல என தவெக கட்சி விமர்சித்துள்ளது. சட்டப்பேரவையை சினிமா படப்பிடிப்பு தளம் போல மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?