MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பொறுப்பு கவர்னருக்கு பொறுப்பு வேண்டாமா? – அமைச்சர் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பொறுப்பு கவர்னருக்கு பொறுப்பு வேண்டாமா? – அமைச்சர் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பொறுப்பு கவர்னருக்கு பொறுப்பு வேண்டாமா? – அமைச்சர் கேள்வி

தமிழ்நாடு

பொறுப்பு கவர்னருக்கு பொறுப்பு வேண்டாமா? – அமைச்சர் கேள்வி

Admin
Last updated: ஜூலை 3, 2026 11:10 காலை
Admin
Share
SHARE

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பொறுப்பு கவர்னர் ஆர்.என்.ரவி, 'மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன். ஆறு உள்ளது, ஆனால் நீர் இல்லை. துப்பாக்கி எடுத்து போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப்பற்றுதான். வைகையை மீட்க இளைஞர்கள் முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், கவர்னர் மாளிகையே களமிறங்கும்' என்று பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டமும் நடத்தினார்.

கேரளாவின் கவர்னராகவும் உள்ள ஆர்.என்.ரவி, கடந்த மார்ச் 12-ம் தேதி தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக பதவியேற்றார். பொறுப்பு கவர்னருக்கு பொறுப்பு இருக்க வேண்டாமா என்று தமிழ்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பும் வகையில் அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பு, தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் சனாதன கருத்தியலை கொண்ட புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றால் மட்டுமே, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, கூட்டாட்சி தத்துவத்தை ஒழிக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு கொண்ட பொறுப்பு கவர்னர் இது குறித்து வாய் திறப்பாரா? தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரி ஆற்றை தடுத்து நிறுத்தி, எமது உரிமையை பறிக்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு மறைமுகமாக தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இசைவு இல்லாமல், கடும் எதிர்ப்பை மீறி மேகதாது அணை திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் இத்திட்டத்தை எதிர்த்து பொறுப்பு கவர்னர் வாய் திறப்பாரா?

தமிழ்நாட்டின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து எதுவும் பேசாத கவர்னர் ஆர்.என்.ரவி, அவருக்கு முன்பு இருந்த கவர்னர் ஆர்.என்.ரவி போலவே தமிழர்களுக்கு தொடர்பில்லாத, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான கருத்துகளை கூறி வருகிறார். கடந்த ஜூலை 1-ம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் நலன்கள் குறித்து உள்துறை அமைச்சரிடம் ஏதேனும் கோரிக்கை வைத்தாரா? அல்லது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயல்பட வேண்டும் என 'ஆலோசனை' பெற்று வந்தாரா என்று கேள்வி எழுகிறது. 2014-ல் மத்திய பாஜக ஆட்சி அமைந்ததும், தூய்மை கங்கை திட்டத்தை கொண்டு வந்தனர். நீர்வளத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 2014 முதல் 2026 வரை செலவிடப்பட்ட மொத்த தொகை 26,824.86 கோடி ரூபாயாகும். 26 ஆயிரம் கோடியை கொட்டிய பின்பும் கங்கை ஆற்றின் நிலை என்ன? மனித பிணங்களும், ஆலை கழிவுகளும் தானே அதன் அடையாளமாக இன்றும் உள்ளது. இது குறித்து வாய் திறப்பாரா பொறுப்பு கவர்னர்?

காவிரி உரிமையை பாதுகாப்பது, வைகையை மீட்பது, தாமிரபரணியை போற்றுவது ஆகிய கடமைகளை தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ளும். எமது முதல்வர் ஜோசப் விஜய் அதற்கான திட்டங்களையும் உத்திகளையும் மேற்கொள்வார். கவர்னர் முதல்வருக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லலாம். அதை விடுத்து, அதிகாரிகளை வரவழைத்து ஆய்வுக்கூட்டங்களை நடத்த முயற்சிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை அவமதிப்பது மட்டுமல்ல; ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும். தமிழ் வளர்த்த மதுரையில் 'வசுதைவ குடும்பகம்' என்று தமிழர்களுக்கு தேச பக்தி குறித்து பாடம் எடுத்துள்ளார் பொறுப்பு கவர்னர் ஆர்.என்.ரவி. புறநானூறு சொல்லும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என எல்லோரையும் நேசிக்கும் தமிழர்களுக்கு தேச பக்தி குறித்து பாடம் எடுக்க தேவையில்லை. தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆளுமையுள்ள புதிய முதல்வர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்து வருகிறார். தமிழ்நாட்டின் இறையாண்மைக்குள் நிர்வாகத்துக்குள் கவர்னர் தலையிடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் வன்னி அரசுஆர்.என். ரவிதமிழ்நாடு அரசுபொறுப்பு கவர்னர்வைகை நதி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 2 நாட்களில் தங்கம் விலை ₹3,600 உயர்வு: ராக்கெட் வேகம்!
Next Article 40 ஆண்டுகால வரலாற்றை மாற்றியமைக்கும் மோடியின் நியூசிலாந்து பயணம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

காஞ்சீபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில்
தமிழ்நாடு

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தங்கத்தேரோட்டம்: 12-ல் கோலாகலம்!

காஞ்சீபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் வருகின்ற 12-ஆம் தேதி அன்று தங்கத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 Min Read
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தமிழ்நாடு

திருவாரூரில் சட்டவிரோத மண் எடுப்பு: தினகரன் வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்கவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும், இளைஞர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

பெண்களை அவமதித்தால் கைது: ஆதவ் அர்ஜூனா எச்சரிக்கை!

பெண்களை அவமதித்தால் எதிர்க்கட்சித் தலைவரானாலும் கைது செய்யப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எச்சரித்துள்ளார். சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் குறித்தும் அவர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

1 Min Read
தமிழ்நாடு

திமுக மீது பழிவாங்கும் நடவடிக்கையா? – அப்பாவு கேள்வி

முன்னாள் சபாநாயகர் அப்பாவு, திமுக மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது நியாயமா என்றும், ஆர்.எஸ்.பாரதி புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்ய ஏன் தயக்கம் காட்டப்படுகிறது என்றும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?