MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்: 5 முக்கிய கோரிக்கைகள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்: 5 முக்கிய கோரிக்கைகள்!
தமிழ்நாடு

பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்: 5 முக்கிய கோரிக்கைகள்!

Admin
Last updated: July 2, 2026 7:13 am
Admin
Share
SHARE

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் ஒரு முக்கிய கடிதம் எழுதியுள்ளார். அதில், 'விக்சித் பாரத்—ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமிண்) [VB-GRAMG]' திட்டத்தின் செயலாக்கம் குறித்து தனது கவலைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இத்திட்டம் 01.07.2026 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் நிதிப் பகிர்வு முறை மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள், மாநில அரசுக்கு 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கூடுதல் நிதிச் சுமையையும், செயல்பாட்டுரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்தும் என முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார். எனவே, ‘VBGRAMG சட்டம், 2025’-இன் சில விதிகளில் முக்கிய மாற்றங்களும் தளர்வுகளும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்யாவிடில், இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சார்ந்துள்ள மக்களை இது கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதிப்பகிர்வு முறையைப் பொறுத்தவரை, தற்போதைய வழிகாட்டுதல்களின்படி ஊதியம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் நிர்வாகச் செலவுகள் ஆகிய அனைத்திற்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற விகிதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) கடந்த இரண்டு தசாப்தங்களாக வேறுபட்ட கட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், இந்த திடீர் மாற்றம் மாநில கருவூலத்திற்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். இதன் காரணமாக ஊதியம் மற்றும் வேலை நாட்கள் குறைய வாய்ப்புள்ளதுடன், பிற அத்தியாவசிய நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறையக்கூடும். எனவே, ஊதிய மற்றும் நிர்வாகச் செலவுகளைப் பொறுத்தவரையில் ஒன்றிய அரசின் 100% நிதியுதவியைத் தொடர வேண்டும் என்றும், கட்டுமானப் பொருட்கள் கூறுகளை ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கோரியுள்ளார்.

மேலும், இந்த திட்டத்தில் கிராம ஊராட்சிகளை வகைப்படுத்துவதற்கும், மாநில அளவிலான நிதி ஒதுக்கீட்டை பகிர்ந்தளிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ள ஒன்றிய அளவிலான வழிமுறைகள், மிக நுட்பமான நிர்வாக மேலாண்மையைக் கொண்டுவருவதாகவும், நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான கணக்கீடு அடிப்படையிலான அணுகுமுறை என்பது மாநிலத்தின் சமூகப் பொருளாதார பன்முகத் தன்மையைக் கணக்கில் கொள்ளத் தவறும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது சமச்சீரற்ற நிதியொதுக்கீட்டிற்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால், உள்ளூர் மற்றும் கள அளவிலான தேவைகளின் அடிப்படையில், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வுக்கென தனிப்பட்ட வழிமுறையை உருவாக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். முக்கிய வேளாண் பருவங்களை அறிவிப்பதிலும், கள அளவில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை தேவைப்படுவதால், ஒவ்வொரு நிதியாண்டிலும் முதன்மை விதைப்பு மற்றும் அறுவடைக் காலங்களை உள்ளடக்கிய 60 நாட்களை மாநில அரசு நிலையானதாக அறிவிக்க வேண்டும் என்றும், அக்காலகட்டத்தில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இச்சட்டம் ஒன்றிய அரசின் ஊரக வீட்டு வசதித் திட்டங்களுடன் ஒருங்கிணைக்க அனுமதிக்கும் அதே வேளையில், மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படும் வீட்டுவசதித் திட்டங்களை விலக்கி வைப்பதாக உள்ளது. பின்தங்கிய கிராமப்புற மற்றும் பழங்குடியின சமூகங்கள் கண்ணியத்துடன் வாழ்வதை நோக்கமாக கொண்டு, 'அனைவருக்கும் வீடு' என்பதை தமிழ்நாடு அரசு ஒரு முதன்மை நோக்கமாக கொண்டுள்ளதால், VB-GRAMG கட்டமைப்பின் கீழ் மாநில வீட்டு வசதித் திட்டங்களையும் சேர்த்து, இந்நலத்திட்ட இலக்குகளை கணிசமாக விரைவுபடுத்தி, அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்ய உதவ வேண்டும் என முதல்வர் விஜய் கோரியுள்ளார். ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது என்றும், இந்த முக்கிய மாற்றங்களுடன், இத்திட்டத்தை மேலும் சிறப்பாக தொலைநோக்குடன், அதிகளவு உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையிலும், கிராமப்புற மேம்பாட்டில் தீவிரக் கவனத்துடனும் செயல்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே இந்த முன்மொழிவுகளை பிரதமர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:VB-GRAMGகிராமப்புற வேலைவாய்ப்புதமிழ்நாடு அரசுபிரதமர் மோடிமுதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் ரூ.2500 எப்போது? முதலமைச்சர் விஜய்க்கு வானதி சீனிவாசன் கேள்வி
Next Article 02-07-2026 ராசி பலன்: நண்பர்களிடம் பகை, அனுசரித்து செல்வது நலம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இடைத்தேர்தல் நடத்தக்கூடாது: தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் அதிமுக…

July 2, 2026

திருமண நாள் கொண்டாடிய 2 நாட்களில் இளம்பெண் தற்கொலை: கணவன் கைது

திருமண நாளைக் கொண்டாடிய 2 நாட்களிலேயே, கணவனின்…

July 2, 2026

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.96 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் மட்டும்…

July 2, 2026

கொச்சியில் போதைப்பொருள் விற்ற இருவர் கைது: திரைத்துறையினர் இலக்கு

கேரள மாநிலம் கொச்சியில், திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு போதைப்பொருள்…

July 2, 2026

அமர்நாத் யாத்திரை நாளை தொடக்கம்: உச்சகட்ட பாதுகாப்புடன் பக்தர்கள் புறப்பட்டனர்

புனித அமர்நாத் யாத்திரை நாளை தொடங்குகிறது. துணை…

July 2, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தூத்துக்குடி மர அறுவை ஆலையில் பயங்கர தீ விபத்து: கோடிக்கணக்கான மரங்கள் சேதம்

தூத்துக்குடியில் உள்ள மர அறுவை ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்…

1 Min Read

மனித உரிமைகள் குறும்பட போட்டி: ரூ.2 லட்சம் பரிசு – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் அறிவிப்பு

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) நடத்தும் 2026 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் குறும்பட போட்டியில், சிறந்த படங்களுக்கு ரூ.2 லட்சம் வரை பரிசு வழங்கப்படவுள்ளதாக…

1 Min Read
தமிழ்நாடு

கோவை அருகே காட்டுப்பகுதியில் இளம்பெண் சடலம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?

கோவை அருகே காட்டுப்பகுதியில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீஸ்…

1 Min Read
தமிழ்நாடு

திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆனது

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் சிகிச்சை பெற்று…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?