MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுகவை அழிவில் நிறுத்திய எடப்பாடி பழனிசாமியின் முடிவு – விஜயபாஸ்கர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > அதிமுகவை அழிவில் நிறுத்திய எடப்பாடி பழனிசாமியின் முடிவு – விஜயபாஸ்கர்
தமிழ்நாடு

அதிமுகவை அழிவில் நிறுத்திய எடப்பாடி பழனிசாமியின் முடிவு – விஜயபாஸ்கர்

Admin
Last updated: June 30, 2026 3:13 pm
Admin
Share
SHARE

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் அரசியல் பயணத்தைத் தொடங்கியவன் நான். பதவிக்காகவோ, சுயநலத்திற்காகவோ இந்த இயக்கத்திற்குள் வரவில்லை. இரத்தமும் சதையுமாக இந்த இயக்கத்தை என் மூச்சாகக் கருதி வாழ்ந்தவன். அம்மா அவர்களின் மறைவுக்குப் பின், இயக்கம் சந்தித்த சோதனைகள் அத்தனையும் நீங்கள் அறிவீர்கள். அத்தனை நெருக்கடி நேரங்களிலும், ஒற்றைத் தலைமையாக அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் பின்னால் உறுதியாக நின்றவன் இந்த விஜயபாஸ்கர்.

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில், கரூரில் நாம் சந்தித்தது அரசியல் மட்டுமல்ல, அப்பட்டமான அதிகார அடக்குமுறையும், நம் தொண்டர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்ட துயரங்களும் தான். அதன் விளைவாக என் மீது 43 பொய் வழக்குகள் சுமத்தப்பட்டன. என் இரத்தத்தின் இரத்தமான கழக உடன்பிறப்புகள் மற்றும் என் குடும்பத்தினர் மீது 100-க்கும் மேற்பட்ட கொடூரமான வழக்குகள் பாய்ந்தன. என் கழக உடன்பிறப்புகள் வாழ்வு சிதைக்கப்பட்டது. என் குடும்பத்தின் நிம்மதி குலைக்கப்பட்டது. அத்தனை அராஜகங்களையும் தூள்தூளாக்கி, செந்தில் பாலாஜியின் அதிகார மமதையை வீழ்த்தி, அதிகார பலத்தோடும் பண பலத்தோடும், கீழ்மட்ட அரசியலின் உச்சகட்டமாக விளங்கிய செந்தில் பாலாஜியை எதிர்த்து பல்வேறு சட்டப் போராட்டம் நடத்தி, எத்தனையோ துரோகங்களைத் தாங்கி, நெஞ்சுயர்த்தி கரூரில் மீண்டும் அதிமுக கொடியை ஏற்றியவன் நானும் என்னுடன் துணை நின்ற கழக உடன்பிறப்புகளும் என்பது நாடறியும்.

ஆனால், இத்தனை தியாகங்களுக்கும், நான் சுமந்த வேதனைகளுக்கும் இன்று எனக்குப் பரிசாகக் கிடைத்திருப்பது நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டி மட்டுமே. இத்தனை ஆண்டுகள் நாம் யாரை எதிர்த்து, யாருடைய மக்கள் விரோத, அராஜக ஆட்சியை வீழ்த்த இத்தனை வழக்குகளையும் ரணங்களையும் நம் உடம்பில் ஏந்தினோமோ, இன்று அதே தீய சக்திகளுடன் கைகோர்த்து, அவர்கள் தயவோடு ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதைக் கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவி அம்மாவும் ஈன்றெடுத்த அரசியல் வாரிசுகள் நாம், நமக்குப் போய் இப்படியொரு எண்ணம் வரலாமா? தீய சக்தி என்று அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திமுக-வுடன், இந்த அண்ணா திமுக எப்படி கைகோர்க்க முடியும்?

அண்ணன் எடப்பாடியார் அவர்களே, நீங்கள் முன்மொழிந்த அந்தச் சமரச முடிவுக்குத்தான் எங்களைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர, உங்களின் தலைமைக்கு ஒருபோதும் நாங்கள் எதிராக நின்றதில்லை. உங்களைத்தான் இந்த இயக்கத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக நாங்களெல்லாம் உயிரைக் கொடுத்து முன்னிறுத்தினோம். ஆனால், எங்களின் அத்தனை எதிர்ப்புகளையும், தொண்டர்களின் தார்மீக உணர்வுகளையும் துச்சமாக மதித்து, நீங்கள் எடுத்த அந்தத் தன்னிச்சையான முடிவுதான் இன்று ஒட்டுமொத்த இயக்கத்தையும் அழிவிலும் வேதனையிலும் நிறுத்தியுள்ளது. உங்களின் இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாக, எத்தனையோ ரணங்களைச் சுமந்த இந்த விஜயபாஸ்கரும் என்னுடன் பயணித்த கழக தோழர்களும் தயாராக இல்லை. என் உடன்பிறவா கழகத் தொண்டர்களே, இந்த இயக்கத்திற்காக என் உழைப்பையும், என் வாழ்நாளின் பெரும் பகுதியையும் கொடுத்துவிட்டேன். இன்று, இந்த இயக்கத்திலிருந்து மீளா கண்ணீருடனும் மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன். என் உயிரினும் மேலான கரூர் தொகுதி பொதுமக்களே உங்களின் சேவகனாக என் மக்கள் பயணம் என்றும் தொடரும். நன்றி… வணக்கம்..! எனக் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKஅதிமுகஅரசியல்எடப்பாடி பழனிசாமிஎம்.ஆர்.விஜயபாஸ்கர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article துணை பொதுச்செயலாளர் பதவி ஏற்க மறுப்பு: வேலுமணி அறிவிப்பு
Next Article போலியோ சொட்டு மருந்து ரீல்ஸ்: த.வெ.க. ஒன்றிய செயலாளர் தற்காலிக நீக்கம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்ததில் 11 வயது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை

நாளை முதல் ஆதார் மின்னஞ்சல் முகவரி இலவச…

June 30, 2026

ஆந்திராவில் பழங்குடியினர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விசாகப்பட்டினம் பழங்குடியினர்…

June 30, 2026

ஏர் இந்தியா: டெல்லி-மெல்போர்ன் விமான சேவை நாளை முதல் தொடக்கம்

ஏர் இந்தியா, டெல்லி-மெல்போர்ன் இடையே மேம்படுத்தப்பட்ட Boeing…

June 30, 2026

You Might Also Like

அரசியல்

அதிமுகவினரே ஒன்று திரளுங்கள்! இபிஎஸ் அழைப்பு – எதிரிகளுக்கு எச்சரிக்கை

அதிமுகவின் ஒற்றுமையை வலியுறுத்தி, தொண்டர்களை ஒன்றிணையுமாறு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். 'விட்டில் பூச்சிகளாக வீழ்ந்துவிடாதீர்கள்' என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

2 Min Read
தமிழ்நாடு

11 வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தாய் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி சத்யா. இவர்களது மகள் வர்ஷினி (வயது 11). இவர் கண்டாச்சிபுரம் பகுதியில்…

2 Min Read
தமிழ்நாடு

இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து முதல் முறை சாதனை!

இந்தியாவை முதல் முறையாக டி20 போட்டியில் வீழ்த்தி அயர்லாந்து அணி சாதனை படைத்துள்ளது. 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

1 Min Read
அரசியல்

சீமானின் வீட்டிற்கு சீர்வரிசையுடன் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க, பழக்கூடைகளுடன் சீர்வரிசையை எடுத்துக்கொண்டு சீமானின்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?