சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'கலையரங்கம், நூல் வெளியீட்டுக்கூடம், மாநாட்டுக்கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவற்றின் வாடகைக் கட்டணத்தில், இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எந்தக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதற்கு முன்னர், த.வெ.க அரசு மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி, ரூ. 5 லட்சமாக உயர்த்தியதாகவும், இதற்குப் பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்து வருவதாகவும் கலைஞர் செய்திகள் பதிவிட்டிருந்தது. ஆனால், இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை எனத் தற்போது தெரியவந்துள்ளது. திமுக அரசு, தவெக அரசு மீது வீண் பழி சுமத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
You Might Also Like
இன்றைய ராசிபலன்: 23-07-2026 – குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள், திருமணப் பேச்சுவார்த்தை வெற்றி!
23-07-2026 இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான பலன்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள், திருமணப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறும்.
4 Min Read
பால் விலை உயர்வு: போராட்டம் கைவிட பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு அரசு கடிதம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராட்டம் அறிவித்திருந்த நிலையில், அதை கைவிடுமாறு தமிழக அரசு பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு…
2 Min Read
ஊட்டியில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி இயக்குனர் கைது
கோவையில் தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணிபுரியும் குமரேசன், சக பேராசிரியைக்கு ஊட்டி சுற்றுலா அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் திருமணம் செய்ய மறுத்ததால்,…
1 Min Read
அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கை வீழ்ச்சி: அன்புமணி ராமதாஸ் கவலை
தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 30% குறைந்துள்ளது. கல்வித்தரம் வீழ்ச்சியே காரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
1 Min Read
