சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'கலையரங்கம், நூல் வெளியீட்டுக்கூடம், மாநாட்டுக்கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவற்றின் வாடகைக் கட்டணத்தில், இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எந்தக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதற்கு முன்னர், த.வெ.க அரசு மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி, ரூ. 5 லட்சமாக உயர்த்தியதாகவும், இதற்குப் பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்து வருவதாகவும் கலைஞர் செய்திகள் பதிவிட்டிருந்தது. ஆனால், இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை எனத் தற்போது தெரியவந்துள்ளது. திமுக அரசு, தவெக அரசு மீது வீண் பழி சுமத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
You Might Also Like
விஜய் முதலமைச்சரானதை அடுத்து திருச்செந்தூரில் த.வெ.க. நிர்வாகி நேர்த்திக்கடன்
த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் முதல்-அமைச்சரானதைக் கொண்டாடும் வகையில், தூத்துக்குடி புறநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் மகேந்திரன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முடி காணிக்கை…
தீரன் சின்னமலைக்கு டிடிவி தினகரன் அஞ்சலி
தீரன் சின்னமலையின் 221-வது நினைவுதினம் அனுசரிக்கப்படும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினார்.
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகவும், உட்கட்சிப் பூசல்களுக்கு நடவடிக்கை எடுக்காததாலும், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.
விஜய் பட வெற்றிக்கு மண்சோறு நேர்த்திக்கடன்: நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வெற்றிக்கு அம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செய்த ரசிகர்கள். இந்த செயல் ஆரோக்கியத்திற்கு கேடு என்றும், நாகரிகமற்றது என்றும் நெட்டிசன்கள்…

