MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பள்ளி நிர்வாக அலட்சியம்: மாணவி ஸ்ரீநதி உயிரிழப்பு – அதிர்ச்சியில் தேனி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பள்ளி நிர்வாக அலட்சியம்: மாணவி ஸ்ரீநதி உயிரிழப்பு – அதிர்ச்சியில் தேனி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - பள்ளி நிர்வாக அலட்சியம்: மாணவி ஸ்ரீநதி உயிரிழப்பு – அதிர்ச்சியில் தேனி

லைஃப் ஸ்டைல்

பள்ளி நிர்வாக அலட்சியம்: மாணவி ஸ்ரீநதி உயிரிழப்பு – அதிர்ச்சியில் தேனி

Admin
Last updated: ஜூன் 12, 2026 9:29 மணி
Admin
Share
SHARE

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீநதி, பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு வந்த மாணவி மயக்கமடைந்த நிலையில், ஆசிரியரின் அலட்சியத்தால் அவரது உயிர் பறிபோனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வடகரை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி-முருகேஸ்வரி தம்பதியரின் மகள் ஸ்ரீநதி, நேற்று பள்ளிக்கு வந்தபோது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்துள்ளார். சக மாணவிகள் மற்றும் வகுப்பு ஆசிரியரின் உதவியுடன் வகுப்பறை மேசையில் அமர வைக்கப்பட்டார். 'மூச்சு இருக்கிறது, ஒன்றும் செய்ய வேண்டாம்' என்று ஆசிரியர் கூறியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. வலிப்பு ஏற்பட்ட மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கக்கூட பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது.

சக மாணவிகளின் கண்முன்னே ஸ்ரீநதி அவதிப்பட்ட நிலையில், அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கூலி வேலைக்குச் சென்றிருந்த பெற்றோர் பள்ளிக்கு வருவதற்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகியுள்ளன. அதுவரை மாணவி வலிப்பு நிலையிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மாணவி பள்ளியிலேயே மயக்கமடைந்துள்ளார். மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்ததும், பேச்சு மூச்சின்றி இருந்த மகளை ஆட்டோவில் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி ஸ்ரீநதி உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.

மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தலைமை ஆசிரியர் இல்லாதது, ஆசிரியர்கள் முதலுதவி அளிக்க முன்வராதது, பள்ளி வளாகத்தில் முதலுதவி வசதி இல்லாதது, மாணவிக்கு பிரச்சனை ஏற்பட்டபோது உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாதது, அவசர ஊர்தியான 108க்கு தகவல் தெரிவிக்க காலதாமதம் செய்தது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:School NegligenceStudent DeathTheniதேனிபள்ளி அலட்சியம்மாணவி உயிரிழப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹபீபி: காதல் Vs சமூக கட்டுப்பாடு – விமர்சனம்
Next Article பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்: உலகெங்கும் பயனர்கள் தவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

அஞ்சறைப் பெட்டியில் உள்ள பல்வேறு மசாலாப் பொருட்கள்
லைஃப் ஸ்டைல்

அஞ்சறைப் பெட்டி: ஆரோக்கிய ரகசியங்கள் நிறைந்த வீட்டு மருத்துவம்

அஞ்சறைப் பெட்டியில் உள்ள இஞ்சி, மிளகு, சீரகம் போன்ற பொருட்கள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இவை சிறு உடல்நலக் கோளாறுகளுக்கு நிவாரணம் அளித்தாலும், கடுமையான நோய்களுக்கு…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

அசாம்: விமானப்படை விமானம் விபத்து – 5 அதிகாரிகள் உயிரிழப்பு

அசாம் மாநிலம் ஜோர்க்கட் விமான தளத்தில் இந்திய விமானப்படை ஏ.என்.32 விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்து வெடித்ததில் 5 அதிகாரிகள் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நான் முதல்வன்: UPSC தேர்வுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை அறிவிப்பு

UPSC குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

1 Min Read
ஆரோக்கியமான பிஸ்தா பருப்புகள்
லைஃப் ஸ்டைல்

பிஸ்தா பருப்பு: இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் அற்புத உணவு!

மன அழுத்தம் மற்றும் இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் பிஸ்தா பருப்பின் அற்புத நன்மைகள்! நார்ச்சத்து, வைட்டமின்கள், துத்தநாகம் நிறைந்த பிஸ்தா, செரிமானம், நோயெதிர்ப்பு சக்தி, நினைவாற்றல் ஆகியவற்றை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?