MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பள்ளி நிர்வாக அலட்சியம்: மாணவி ஸ்ரீநதி உயிரிழப்பு – அதிர்ச்சியில் தேனி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பள்ளி நிர்வாக அலட்சியம்: மாணவி ஸ்ரீநதி உயிரிழப்பு – அதிர்ச்சியில் தேனி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - பள்ளி நிர்வாக அலட்சியம்: மாணவி ஸ்ரீநதி உயிரிழப்பு – அதிர்ச்சியில் தேனி

லைஃப் ஸ்டைல்

பள்ளி நிர்வாக அலட்சியம்: மாணவி ஸ்ரீநதி உயிரிழப்பு – அதிர்ச்சியில் தேனி

Admin
Last updated: ஜூன் 12, 2026 9:29 மணி
Admin
Share
SHARE

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீநதி, பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு வந்த மாணவி மயக்கமடைந்த நிலையில், ஆசிரியரின் அலட்சியத்தால் அவரது உயிர் பறிபோனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வடகரை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி-முருகேஸ்வரி தம்பதியரின் மகள் ஸ்ரீநதி, நேற்று பள்ளிக்கு வந்தபோது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்துள்ளார். சக மாணவிகள் மற்றும் வகுப்பு ஆசிரியரின் உதவியுடன் வகுப்பறை மேசையில் அமர வைக்கப்பட்டார். 'மூச்சு இருக்கிறது, ஒன்றும் செய்ய வேண்டாம்' என்று ஆசிரியர் கூறியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. வலிப்பு ஏற்பட்ட மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கக்கூட பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது.

சக மாணவிகளின் கண்முன்னே ஸ்ரீநதி அவதிப்பட்ட நிலையில், அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கூலி வேலைக்குச் சென்றிருந்த பெற்றோர் பள்ளிக்கு வருவதற்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகியுள்ளன. அதுவரை மாணவி வலிப்பு நிலையிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மாணவி பள்ளியிலேயே மயக்கமடைந்துள்ளார். மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்ததும், பேச்சு மூச்சின்றி இருந்த மகளை ஆட்டோவில் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி ஸ்ரீநதி உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.

மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தலைமை ஆசிரியர் இல்லாதது, ஆசிரியர்கள் முதலுதவி அளிக்க முன்வராதது, பள்ளி வளாகத்தில் முதலுதவி வசதி இல்லாதது, மாணவிக்கு பிரச்சனை ஏற்பட்டபோது உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாதது, அவசர ஊர்தியான 108க்கு தகவல் தெரிவிக்க காலதாமதம் செய்தது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:School NegligenceStudent DeathTheniதேனிபள்ளி அலட்சியம்மாணவி உயிரிழப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹபீபி: காதல் Vs சமூக கட்டுப்பாடு – விமர்சனம்
Next Article பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்: உலகெங்கும் பயனர்கள் தவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

AI பிழை: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம், வீட்டுமனை பட்டா விரைவில்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்ட விளக்க வீடியோவில் எழுத்துப் பிழைகள் ஏ.ஐ. பிழை என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம். பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா விரைவில் வரும் என…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?- எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

மம்மூட்டிக்கு பத்ம பூஷண், மாதவனுக்கு பத்மஸ்ரீ: மத்திய அரசு அறிவிப்பு

நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருதும், மாதவன், சதீஷ் ஷா, கட்டே பாபு ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

30 நாட்களில் பட்டா மாற்றம்: இனி தாலுகா அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்!

தமிழகத்தில் சொத்து வாங்குவோருக்கு இனி பட்டா மாற்றம் எளிதாகிவிட்டது. பொதுமக்கள் இனி தாலுகா அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை. 'இ-சேவை' மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தால், 30 நாட்களுக்குள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?