மேஷ ராசி அன்பர்களே, இன்று குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகள் தீரும். உற்சாகத்துடனும், புத்தி கூர்மையுடனும் செயல்படுவீர்கள். முன்னோர்களை வணங்கி வந்தால், செயல்களில் வேகம் உண்டாகி எதிலும் வெற்றி நிச்சயம். சக ஊழியர்களிடம் பழகும்போது மட்டும் கவனம் தேவை.
ரிஷப ராசிக்கு, இன்று எதைச் செய்வது என்ற மனத்தடுமாற்றம் நீங்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதமானாலும், பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். திடீர் சோர்வு ஏற்படலாம் என்பதால், அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
மிதுன ராசிக்கு, இன்று புகழ் மற்றும் அந்தஸ்து உயரும். அக்கம் பக்கத்தினருடன் அன்பு வளரும். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நிலை காணப்படும். பிள்ளைகள் குடும்பத்தின் பெருமையைக் காக்கும் வகையில் நற்செயல்களைச் செய்வர்.
கடக ராசிக்கு, படிப்பில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பில் கவுரவமான நிலையை அடைவீர்கள். பூர்வீக சொத்து வருமானம் உயரும். உடல்நலம் சிறந்து, புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நிர்பந்தம் தரும் கடன்களை பெருமளவில் சரிசெய்வீர்கள்.
சிம்ம ராசிக்கு, புதிய பதவிகளும், அளப்பரிய நற்பலன்களும் எளிதாக வந்து சேரும். தம்பதியர் ஒற்றுமையுடன் செயல்பட்டு, குடும்ப வாழ்வை சிறக்க பாடுபடுவர். வாழ்க்கைத் துணையுடன் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது.
கன்னி ராசிக்கு, இன்று உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வாகனம், இயந்திரங்கள், நீர்நிலைகளில் கவனம் தேவை. தந்தையாருடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும், சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.
துலாம் ராசிக்கு, லாபகரமான முதலீடுகளில் தகுதியானவர்களின் ஆலோசனையுடன் முதலீடு செய்யவும். நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
விருச்சிக ராசிக்கு, உபரி வருமானம் உண்டு. இளம் வயதினருக்கு திருமண முயற்சிகள் நிறைவேறும். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி அதிகரித்து தொழிலில் சிறப்பு ஏற்படும்.
தனுசு ராசிக்கு, மங்கல நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிப்பீர்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டு. வெளிநாட்டு சுற்றுலா பயண வாய்ப்பு நிறைவேறும். புதிதாக தொழில் துவங்க முயற்சிப்பவர்கள் அளவான மூலதனத்துடன் துவங்கலாம்.
மகர ராசிக்கு, வியாபார சங்கங்களில் கவுரவமான பதவி வரும். உத்தியோகஸ்தர்கள் திறமையாகச் செயல்பட்டு, பதவி உயர்வு, புதிய பொறுப்பு, சலுகைகளைப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கும்ப ராசிக்கு, சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். தொழில்நுட்பங்களை ஆர்வமுடன் கற்றுக்கொள்வீர்கள். பணிபுரியும் பெண்கள் திறமையைப் பயன்படுத்தி பணிக்கு பெருமை சேர்த்திடுவர். எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும்.
மீன ராசிக்கு, குடும்பச் செலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனையில் வியத்தகு இலக்கை அடைவர்.