MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சாலைகளில் தொழுகைக்கு தடை: உ.பி.யில் காவடி யாத்திரைக்காக சாலைகள் மூடல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சாலைகளில் தொழுகைக்கு தடை: உ.பி.யில் காவடி யாத்திரைக்காக சாலைகள் மூடல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - சாலைகளில் தொழுகைக்கு தடை: உ.பி.யில் காவடி யாத்திரைக்காக சாலைகள் மூடல்

இந்தியா

சாலைகளில் தொழுகைக்கு தடை: உ.பி.யில் காவடி யாத்திரைக்காக சாலைகள் மூடல்

Admin
Last updated: மே 28, 2026 12:56 மணி
Admin
Share
SHARE

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தொழுகைக்காக சாலைகளைப் பயன்படுத்துவதற்கு பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில், சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை என்றும், மத வழிபாட்டுத் தலங்களில் மட்டுமே தொழுகை நடத்த வேண்டும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். அதிக எண்ணிக்கையில் வருவோரை சமாளிக்க சுழற்சி முறையில் தொழுகை நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு விதிமுறைகளை மீறி சாலைகளில் தொழுகை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிரோன்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் முராதாபாத் தொகுதி எம்.பி. எஸ்.டி.ஹசன், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வழிபாடுகள் குறித்த சட்டங்கள் அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்றும், பக்ரீத் தொடர்பான அறிவிப்புகள் இந்து சகோதரர்களின் வாக்குகளைப் பிரிக்கும் நோக்கிலேயே வெளியிடப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

முராதாபாத் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சாலைகளில் தொழுகை நடத்தப்படுவதில்லை என்றும், ஈத்கா வளாகத்திற்குள்ளேயே சுழற்சி முறையில் தொழுகை நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு மணி நேரம் மட்டுமே நடைபெறும் சிறப்பு தொழுகைக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களின் போக்குவரத்துக்காக சாலைகள் பயன்பட வேண்டும் என்றும், ஆனால் மக்கள் சாலைகளிலேயே தங்கள் வாழ்வாதாரத்திற்கான தொழில்களைச் செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன டயர்களுக்கு பஞ்சர் ஒட்டுபவர்கள் முதல் ஏழை எளிய மக்கள் வரை, தங்கள் பொருட்களை சாலைகளிலேயே வைத்து பிழைப்பு நடத்துவதாகவும், அதுவே அவர்களின் வாழ்வாதாரமாக இருப்பதால், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது முறையல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 'காவடி யாத்திரை' போன்ற நிகழ்வுகளுக்காக சாலைகள் மாதக்கணக்கில் மூடப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும், சட்டங்கள் இயற்றப்பட்டால் அவை குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் பொருந்தக் கூடியதாக இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:UP Politicsஉத்தரப் பிரதேசம்காவடி யாத்திரைசாலைகள்தொழுகைபக்ரீத்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆரணி ஆதி அரியாத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
Next Article சித்தராமையா ராஜினாமா: டி.கே. சிவக்குமார் முதல்வராகிறார்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

இந்தியா

புதிய கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு: விஜய்க்கு போட்டியாக பினராயி விஜயனை சந்தித்தாரா?

கேரளாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ள வி.டி. சதீசன், முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்க உள்ளதாக தகவல்.

1 Min Read
இந்தியா

தலைமை நீதிபதி விளக்கம்: இளைஞர்களை கரப்பான் பூச்சி என்றதில்லை!

போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி நுழைந்தவர்களை 'ஒட்டுண்ணிகள்' என்றேன்; இளைஞர்களை அல்ல - தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கம்.

1 Min Read
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல்
இந்தியா

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.26 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் ஒரே நாளில் ரூ.4 கோடியே 26 லட்சம் ரூபாய் காணிக்கையாக வசூலாகியுள்ளது. இது பக்தர்களின் பேராதரவை காட்டுகிறது.

2 Min Read
இந்தியா

கர்நாடகாவில் அதிரடி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா!

கர்நாடக முதல்வர் சித்தராமையா, தனது பதவியை ராஜினாமா செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். இன்று ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளார். இது குறித்த அறிவிப்பை காங்கிரஸ்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?