MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கருத்து வேறுபாடுதான், பிளவு இல்லை – எஸ்.பி.வேலுமணி விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கருத்து வேறுபாடுதான், பிளவு இல்லை – எஸ்.பி.வேலுமணி விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - கருத்து வேறுபாடுதான், பிளவு இல்லை – எஸ்.பி.வேலுமணி விளக்கம்

அரசியல்

கருத்து வேறுபாடுதான், பிளவு இல்லை – எஸ்.பி.வேலுமணி விளக்கம்

Admin
Last updated: மே 27, 2026 4:56 மணி
Admin
Share
SHARE

அதிமுகவில் தனியாக செயல்பட்டு வந்த எஸ்.பி.வேலுமணி அணி, மீண்டும் பழனிசாமி அணியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், 'எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு இல்லை. அந்த கருத்து வேறுபாடுகள் இப்போது நீங்கிவிட்டன. இனி ஒற்றுமையாக அதிமுக வலுவாக செயல்படும்' என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அனைவரும் கூட்டாக பழனிசாமியை அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாகவும் நியமிக்க கோரி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கடிதம் அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, 'கருத்து வேறுபாடு காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவளித்தோம். அப்போது இரு தரப்பிலும் தகுதி நீக்க மனுக்களை அளித்தோம், இப்போது எங்கள் இரு தரப்பில் கொடுக்கப்பட்ட மனுக்களையும் வாபஸ் பெற்றுவிட்டோம். எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், அப்போதும் எங்கள் பொதுச்செயலாளர் பழனிசாமி தான் எனத் தெரிவித்திருந்தோம்' என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், 'ஒரு கட்சிக்கு வெற்றி, தோல்விகள் சகஜம். ஆனால், ஜெயலலிதா சொன்னதுபோல அதிமுக நூறாண்டுகள் இருக்க வேண்டுமானால், தோல்வி குறித்து ஆராய்வதற்கு பொதுக்குழுவை கூட்ட வேண்டும், குழு அமைக்க வேண்டும் என கோரிக்கைகளை வைத்திருந்தோம். அந்த கோரிக்கைகளை எல்லாம் பரிசீலித்து ஒவ்வொன்றாக செய்வதாக பொதுச்செயலாளர் கூறியுள்ளார். எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு இல்லை. இப்போது எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கிவிட்டது. இனி ஒற்றுமையாக அதிமுக வலுவாக செயல்படும். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என பழனிசாமி எங்களிடம் கோரிக்கை விடுத்தார்' என தெரிவித்தார்.

'அதிமுக பொன்விழா கண்ட கட்சி, 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்தது. நாங்கள் பதவிக்காக தவெகவை ஆதரிக்கவில்லை, இதனை ஆளுங்கட்சியும் தெளிவுப்படுத்தியது. தோல்விக்கு பின்னர் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை வைத்தோம். சி.வி.சண்முகமும் எங்களுடன் தான் இருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்' என்றும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஅரசியல்எஸ்.பி.வேலுமணிபழனிசாமி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article துணைவேந்தர் நியமனம்: விரைந்து நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்
Next Article 4 தொகுதிகளிலும் பொது வேட்பாளர்: அன்புமணி எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிபிஎஸ்இ லோகோ அல்லது பள்ளி வகுப்பறை காட்சி

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழிக்கான உள் மதிப்பீட்டுத்…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கூட்டணியை உடைக்க என்னை பயன்படுத்த முயன்றனர்: திருமாவளவன்

திமுக கூட்டணியை உடைக்க என்னை பயன்படுத்த முயன்றனர். ஆனால், அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. கூட்டணி வலுவாக உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆளுநர் உரைக்கு வைகோ பாராட்டு: ‘வெற்றி தமிழகம்’ திட்டம் சிறப்பு!

தமிழக ஆளுநர் உரையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார். 'வெற்றி தமிழகம்' என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை அவர் புகழ்ந்துள்ளார்.

1 Min Read
அரசியல்

குண்டர் சட்ட உத்தரவு அக்கிரமம்: ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு உயர் நீதிமன்றம் விளக்கம்

கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா மீது பாய்ந்த குண்டர் சட்ட உத்தரவு அக்கிரமமானது என்பதை தெளிவுபடுத்தவே ஐபிஎஸ் அதிகாரி அருணை ஆஜராக உத்தரவிட்டதாக சென்னை உயர்…

2 Min Read
தமிழ்நாடு

பாக்யராஜ் மறைவுக்கு இ.பி.எஸ். ஆழ்ந்த இரங்கல்

பிரபல திரைக்கதை ஆசிரியர் பாக்யராஜின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகிற்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?