MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பஞ்சாப்-ஜம்மு சாலையில் உளவு பார்த்த இளைஞர் கைது: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பஞ்சாப்-ஜம்மு சாலையில் உளவு பார்த்த இளைஞர் கைது: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பஞ்சாப்-ஜம்மு சாலையில் உளவு பார்த்த இளைஞர் கைது: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி

இந்தியா

பஞ்சாப்-ஜம்மு சாலையில் உளவு பார்த்த இளைஞர் கைது: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி

Admin
Last updated: மே 23, 2026 2:39 மணி
Admin
Share
SHARE

சண்டிகர்: பஞ்சாப் மற்றும் ஜம்முவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 44-ல் அதிநவீன சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டின் மிக நீளமான நெடுஞ்சாலையான NH44, காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்கிறது. குறிப்பாக, பஞ்சாப் முதல் காஷ்மீர் வரையிலான இந்த சாலையில் ராணுவ வாகனப் போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும்.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புகள், பஞ்சாப் எல்லையில் உள்ள NH44 நெடுஞ்சாலையில் அதிநவீன சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, பாகிஸ்தான் ராணுவத்திற்கு நேரலையாக காட்சிகளை அனுப்பி வருவதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து, பஞ்சாப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இரு வாரங்களுக்கு முன்பு மாநில எல்லைக்குட்பட்ட NH44 நெடுஞ்சாலையில் சில சிசிடிவி கேமராக்களைக் கண்டுபிடித்தனர். இவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை, சூரிய ஒளியில் இயங்கக்கூடியவை என்பது தெரியவந்தது.

இந்த கேமராக்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவ வாகனங்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகளின் வாகனங்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளது. குறிப்பாக, சாலையின் பாலங்கள், முக்கிய சந்திப்புகள், சில கடைகளில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டு, புதியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் சுமார் 7 மாதங்கள் வரை உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது.

இது தொடர்பாக, பஞ்சாபின் பதான் கோட் அருகே உள்ள சக் தார்வால் கிராமத்தைச் சேர்ந்த பல்ஜித் சிங் (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், துபாயை சேர்ந்த சிலரின் உத்தரவின் பேரில் கேமராக்களைப் பொருத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது கூட்டாளிகளான விக்ரம்ஜித் சிங், பல்வீந்தர் சிங், தரன்ப்ரீத் சிங் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர். கைதான பல்ஜித் சிங்குக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடனும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:National HighwayNH44Pakistan ISIPunjabபஞ்சாப்பாகிஸ்தான் உளவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி: சீமான் கண்டனம்!
Next Article திமுக கூட்டணியை காக்க எனக்கு வலிமை இல்லை – திருமாவளவன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தேசிய மாநாட்டில் உரையாற்றுகிறார்

டெல்லியில் மாநில நீர்வளத்துறை செயலாளர்கள் தேசிய மாநாடு

புதுடெல்லியில் இன்று மாநில நீர்வளத்துறை செயலாளர்களுக்கான தேசிய மாநாடு நடைபெறுகிறது. மத்திய ஜல்…

ஜூலை 13, 2026

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

You Might Also Like

இந்தியா

எஸ்பிஐ வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தவிருந்த எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம், நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படாது.

1 Min Read
இந்தியா

வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்.. பிரதமரின் தற்சார்பு முயற்சி..

2026 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத்தில் சுமார் ₹9,400 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைத்…

1 Min Read
இந்தியா

மேற்கு வங்க மாநில தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

மேற்கு வங்க மாநில தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

1 Min Read
இந்தியா

51,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் பிரதமர் மோடி

மத்திய அரசுப் பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். 'ரோஜ்கர் மேளா'…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?