MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய்யின் பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி: அற்ப அரசியல் ஆதாயம் தேடவில்லை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய்யின் பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி: அற்ப அரசியல் ஆதாயம் தேடவில்லை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய்யின் பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி: அற்ப அரசியல் ஆதாயம் தேடவில்லை

தமிழ்நாடு

விஜய்யின் பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி: அற்ப அரசியல் ஆதாயம் தேடவில்லை

Fernandez
Last updated: செப்டம்பர் 26, 2026 6:23 காலை
Fernandez
Share
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகிறார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
SHARE

கரூர் உயிரிழப்புகள் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடவில்லை என தமிழக முதல்வர் விஜய் பேசியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய், திமுக மற்றும் அதிமுக இணைந்த ஆட்சி அமைக்கும் முயற்சி, ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாய் திறக்காதது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், 'ஸ்டாலின் சார் வாயைத் திறங்க' என்றும் அவர் சவால் விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், 'படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டதாகக் கூறிவிட்டு, மக்கள் முன் தொடர்ந்து நடிக்கும் முதல்வர் விஜய் அவர்களே, மதுராந்தகத்தில் உங்கள் 'டயலாக் டெலிவரி'யைப் பார்த்தேன். உங்களுக்கு சில கேள்விகள் உள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.

'அதிமுகவிலிருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தியுள்ள மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டு, 'தவெக தூய சக்தி, திமுக தீய சக்தி' என எப்படி உங்களால் கூச்சமின்றிப் பேச முடிகிறது? வாக்களித்த மை விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே, NDA கூட்டணி எம்.எல்.ஏ-க்களைத் தூக்குவதுதான் தூய சக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்து, 'தவெகவிடம் எவ்வளவு வாங்குனீங்க?' என்று மக்களே கேட்டு விரட்டி அடிப்பது கூடத் தெரியாதவரா நீங்கள்?' என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திமுகவும் பாஜகவும் வேறு வேறில்லை என விஜய் பேசியது குறித்தும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 'சட்டமன்றத்தில் 'பாஜக' என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராக இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பிலிருந்து நீக்குவது யாரென நேரலையில் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா? கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனைப் போராட்டங்கள் நடத்தியிருக்கிறீர்கள்? பாஜகவை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

'திமுக மாதிரி படிப்படியாக, தகுதி வாய்ந்தவர்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கிறேன்' என அந்நியன் போலப் பேசியவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் 'கஜானா காலி' என அம்பி மோடில் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் லட்சணமா? உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே! நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம், வெற்றி அரிவாள் வெட்டு திட்டம், வெற்றி விலைவாசி உயர்வு திட்டம், வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம், வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம் இவ்வளவுதான்!' என ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.

பெண்களை திமுகவினர் அவதூறாகப் பேசுகிறார்கள் என்ற பொய்யை நீங்கள் பேசும்போது, உங்கள் 'Virtual Abuser'-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள். 'ஜெம் வீரமணி வழக்கைப் பற்றி வாயைத் திறங்க ஸ்டாலின் சார்' என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்… பேப்பர் படித்திருந்தால் தெரிந்திருக்கும்!

இந்த வழக்கை அரசியல் ஆக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை? கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, 'எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்' என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ திமுகவோ முயலவில்லை. ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள். அதனால், 'முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?' என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir' என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்கரூர்தமிழக வெற்றிக் கழகம்திமுகதேர்தல் பிரச்சாரம்மதுராந்தகம்மு.க. ஸ்டாலின்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தெற்கு ரயில்வே அறிவிப்பு பலகை சென்னை – சூலூர்பேட்டை மின்சார ரயில் சேவை பகுதி ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
Next Article பிறப்பு சான்றிதழ் வழங்கும் அரசு அலுவலகம் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் உரையாற்றுகிறார்

இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடு தேவை: காங்கிரஸ்

இந்தியாவின் மூலதனச் சந்தைகளில் வெளிப்படைத்தன்மைக்கு பதிலாக வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகளுக்கு மத்திய அரசு…

நவம்பர் 22, 2026

ராஜஸ்தானில் பயங்கரம்: லாரி மீது மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த…

நவம்பர் 22, 2026

ராஜஸ்தானில் பயங்கர விபத்து: 9 பக்தர்கள் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் லாரி…

நவம்பர் 22, 2026

மணிப்பூரில் கள்ளச்சாராயம்: 11 பேர் பலி, 180 பேர் மருத்துவமனையில்

மணிப்பூர் மாநிலம் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில்…

நவம்பர் 21, 2026

40 ஆண்டுகள் தனிமை: சென்னைப் பெண் மரணம் – உருக்கமான பதிவு வைரல்

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து…

நவம்பர் 20, 2026

You Might Also Like

மதுரையில் முதல்வர் விஜயை மீனாட்சி அம்மன் வேடத்தில் வரவேற்கும் சிறுமி
தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் வேடமிட்ட சிறுமியுடன் முதல்வர் விஜய்: நெகிழ்ச்சி தருணம்!

மதுரை வந்த முதல்வர் விஜயை, மீனாட்சி அம்மன் வேடமிட்ட சிறுமி வரவேற்றார். முதல்வர் அந்த சிறுமியை தூக்கி கிரீடம் அணிவித்து மகிழ்ந்தார். மேலும், 'தாய்மாமன் தங்க மோதிரம்'…

1 Min Read
தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

நெல் கொள்முதல் குறைபாடுகள்: வாட்ஸ்அப் மூலம் புகார் – தமிழக அரசு

டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் ஏற்பட்டால், வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 20,196 விவசாயிகளிடமிருந்து 1.17 லட்சம்…

2 Min Read
வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்கள்
தமிழ்நாடு

மானை வேட்டையாடிய கும்பல் மீது துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி, கிராம மக்கள் மறியல்

கர்நாடக காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் மானை வேட்டையாடிய கும்பல் மீது வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை…

1 Min Read
முதலமைச்சர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
தமிழ்நாடு

குழந்தைகளை பயன்படுத்தவில்லை: முதல்வர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என முதலமைச்சர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 31-ஆம் தேதி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?