MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 8.7 கோடி இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 8.7 கோடி இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 8.7 கோடி இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

8.7 கோடி இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

Fernandez
Last updated: செப்டம்பர் 19, 2026 4:24 மணி
Fernandez
Share
மாணிக்கம் தாகூர் எம்.பி.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.
SHARE

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி என எவ்விதமான வாய்ப்புகளும் இன்றி 8 கோடியே 70 லட்சம் இளைஞர்கள் முடங்கிக் கிடப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2014 முதல் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு, ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்குவதாக வெற்று வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2026-ல் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையின்படி, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது தொழிற்பயிற்சி எதிலும் ஈடுபடாமல் முடங்கியுள்ளதாகவும், மேலும் 79.6 கோடி பேர் உழைக்கும் சந்தைக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது.

படித்த பட்டதாரிகளில் வெறும் 8.25 சதவீதம் பேருக்கு மட்டுமே அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவலையும், பட்டம் பெற்ற பெண்களிடையே 20.4 சதவீதம் வேலையின்மை நிலவுவதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இது மோடி அரசின் விளம்பர அரசியலின் உண்மை முகத்தைக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

'ஒருபுறம் மருத்துவக் கனவைச் சிதைக்கும் மருத்துவ நீட் தேர்வு என்றால், மறுபுறம் இளைஞர்களை வேலைக்கே செல்லவிடாமல் நடுத்தெருவில் நிறுத்தும் சமூக-பொருளாதார நீட் நெருக்கடி நிலவுகிறது' என மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது செப்டம்பர் 2026-ல் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ள மாவட்ட அளவிலான PLFS அறிக்கை, இந்த அவல நிலையை உள்ளூர் அளவிலும் தோலுரித்துக் காட்டியுள்ளது. நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் கல்வி அல்லது வேலைவாய்ப்பின்றி முடங்கிக் கிடக்கின்றனர். மொத்தமாக ஆய்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் கிட்டத்தட்ட 23.7 சதவீதம் பகுதிகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் எவ்வித எதிர்காலமும் இன்றி தவிக்கின்றனர்.

குறிப்பாக, உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களின் பெரும்பாலான மாவட்டங்கள் வேலையின்மையால் தத்தளிப்பதுடன், 75 சதவீதம் மாவட்டங்களில் இளம்பெண்களின் வேலையின்மை விகிதம் 25 சதவீதத்தை தாண்டியுள்ளது.

மோடி அரசின் இந்த நிர்வாகத் தோல்வியும், புறக்கணிப்பும் தமிழ்நாட்டிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தென் தமிழ்நாட்டின் முக்கிய நகரமான மதுரையில் வேலையின்மை விகிதம் 7.0 சதவீதமாக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் 24.9 சதவீதம், திருச்சியில் 23.9 சதவீதம், மதுரையில் 23.8 சதவீதம், சென்னையில் 22.4 சதவீதம் என இளைஞர்கள் முறையான வாழ்வாதார வழியின்றி முடங்கியுள்ளனர்.

மேலும், கிராமப்புற தமிழ்நாட்டில் நிலையான ஊதிய வேலைகள் கிடைக்காததால், 30.4 சதவீதம் குடும்பங்கள் முறைசாரா தினக்கூலி வேலைகளையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சியை வழங்குவதாகக் கூறி புதிய கல்விக் கொள்கையை (NEP) திணிக்கும் மத்திய அரசு, களத்தில் அவர்களுக்குக் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டது என்று அவர் விமர்சித்துள்ளார்.

தேசிய அளவில் 8.7 கோடி இளைஞர்களின் வாழ்வைச் சூறையாடியதோடு, மாவட்ட வாரியாகப் பல கோடி இளைஞர்களின் உழைப்பையும் ஆற்றலையும் வீணடித்து நடுத்தெருவில் நிறுத்தியுள்ள மோடி அரசின் பொருளாதாரத் துரோகங்களுக்கு, தங்களின் எதிர்காலத்தை இழந்து தவிக்கும் இந்த இளைய தலைமுறை ஒருபோதும் துணை நிற்காது என்றும் மாணிக்கம் தாகூர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:India unemploymentMoSPIஇளைஞர் வேலையின்மைதமிழ்நாடு காங்கிரஸ்நிதி ஆயோக்மாணிக்கம் தாகூர்மோடி அரசுவேலையின்மை விகிதம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article 2026 ஆசிய போட்டிகள் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்லும் மனு பாக்கர் மற்றும் பவன் செராவத் 2026 ஆசிய போட்டிகள் தொடக்கம்: இந்திய கொடியை ஏந்திய மனு பாக்கர், பவன் செராவத்
Next Article வீட்டு சுவரில் கறைகளை சுத்தம் செய்யும் நபர் வீட்டு சுவரில் பிடிவாத கறையா? பெயிண்டர் கூப்பிடாமலே சுத்தம் செய்யலாம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள்
தமிழ்நாடு

திருநெல்வேலியில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி: மின்தடை அறிவிப்பு

திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி, புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்தடை செய்யப்படுகிறது.

1 Min Read
கோவையில் கைது செய்யப்பட்ட லாட்டரி விற்பனையாளர்கள்
தமிழ்நாடு

கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை: 6 பேர் கைது

கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 6 பேர் கைது. வாட்ஸ்அப் மூலம் புகைப்படங்களை அனுப்பி விற்பனை செய்தது அம்பலம்.

1 Min Read
அரசு பள்ளி குடிநீர் தொட்டி ஆய்வு செய்யும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தமிழ்நாடு

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு: அதிர்ச்சியில் மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விவரங்களை வெளியிடலாம்: ஐகோர்ட்

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விவரங்களை வெளியிடலாமே என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பள்ளிகள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?