MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இளைஞர்களின் எழுச்சி மோடி அரசின் ஆணவ அரசியலுக்கு முடிவுரை: ஜவாஹிருல்லா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இளைஞர்களின் எழுச்சி மோடி அரசின் ஆணவ அரசியலுக்கு முடிவுரை: ஜவாஹிருல்லா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இளைஞர்களின் எழுச்சி மோடி அரசின் ஆணவ அரசியலுக்கு முடிவுரை: ஜவாஹிருல்லா

தமிழ்நாடு

இளைஞர்களின் எழுச்சி மோடி அரசின் ஆணவ அரசியலுக்கு முடிவுரை: ஜவாஹிருல்லா

Fernandez
Last updated: ஜூலை 26, 2026 11:55 காலை
Fernandez
Share
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா
SHARE

இளைஞர்களின் எழுச்சி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆணவ அரசியலுக்கு முடிவுரை எழுதத் தொடங்கியுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல், மக்களின் ஒற்றுமையான போராட்டம் அதிகார ஆணவத்தை வீழ்த்த முடியும் என்பதற்கு ஒரு வரலாற்றுச் சான்றாக அமைந்துள்ளது. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக 'மோடி அரசு ஒருபோதும் பின்வாங்காது' என்ற பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டாலும், வரலாறு வேறு கதைகளையே சொல்கிறது.

முன்னதாக, 2015-இல் நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தை மக்கள் எதிர்ப்பால் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. 2018-இல் #MeToo இயக்கத்தின் எழுச்சியால் அமைச்சர் எம்.ஜே. அக்பர் பதவி விலகினார். மேலும், ஒரு ஆண்டுக்கும் மேலாகப் போராடிய விவசாயிகளின் உறுதியால் 2021-இல் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன. தற்போது தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளது. அதிகாரத்தின் அகந்தையை உடைக்கக்கூடிய மிகப் பெரிய சக்தி மக்களின் ஒற்றுமையான ஜனநாயகப் போராட்டமே என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

இந்தப் போராட்டத்தின் அரசியல் முக்கியத்துவத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு உணர வேண்டும். இன்று தெருக்களில் நின்றவர்கள் இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் புதிய தலைமுறை. இந்தத் தலைமுறையினர் 2014-க்கு முந்தைய அரசுகளை நினைவில் வைத்திருப்பவர்கள் அல்ல. அவர்களுக்குத் தெரிந்த ஒரே ஆட்சி மோடி அரசுதான். எனவே, கடந்த கால அரசுகளைக் குறை கூறி தப்பிக்க முடியாது. வேலைவாய்ப்பின்மை ஏன் அதிகரித்தது? கல்வி ஏன் வணிகமயமாக்கப்பட்டது? தேர்வுகள் ஏன் மீண்டும் மீண்டும் கசிகின்றன? இளைஞர்களின் எதிர்காலம் ஏன் நிச்சயமற்றதாக மாறியுள்ளது? போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது தற்போதைய அரசின் கடமையாகும்.

கடந்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் நடைபெற்ற NEET, CUET, UGC-NET, JEE உள்ளிட்ட பல்வேறு தேசியத் தேர்வுகளில் ஏற்பட்ட கசிவுகள், தேர்வு ரத்துகள், நிர்வாகக் குழப்பங்கள் ஆகியவை மாணவர்களின் நம்பிக்கையை கடுமையாகப் பாதித்துள்ளன. கல்வி அமைச்சகம் இந்தப் பிரச்சினைகளில் பொறுப்பேற்காமல், விமர்சனங்களை மறுப்பதிலேயே அதிக அக்கறை காட்டியது. அமைச்சர் மாறினாலும், இந்தத் தோல்விகளுக்குக் காரணமான நிர்வாக அணுகுமுறை மாறாவிட்டால் மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது.

புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியை மையப்படுத்தும் முயற்சி, மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகள், தமிழ்நாட்டின் சமூகநீதிக் கொள்கைக்கு எதிரான நீட் திணிப்பு, இந்தி மற்றும் சமஸ்கிருத ஆதிக்கத்தை ஊக்குவிக்கும் போக்கு, பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமனங்களில் மத்திய அரசின் அதிகரித்த தலையீடு ஆகியவை மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

மாணவர்கள் அமைதியாகக் கேள்வி கேட்டால் அவர்களை தேசவிரோதிகளாகச் சித்தரிப்பதும், போராட்டம் நடத்தினால் காவல்துறையை ஏவுவதும், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தால் வழக்கு பதிவு செய்வதும் ஜனநாயக ஆட்சியின் அடையாளமல்ல. கருத்து வேறுபாட்டை குற்றமாகக் கருதும் அரசுகள், வரலாற்றில் ஒருபோதும் நீண்ட காலம் நிலைத்ததில்லை.

தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் ஒரு முடிவு அல்ல; அது ஒரு தொடக்கம். இன்று மாணவர்கள் எழுப்பிய குரல் நாளை வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் குரலாக மாறும்; விவசாயிகளின் குரலாக மாறும்; தொழிலாளர்களின் குரலாக மாறும்; மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் மக்களின் குரலாக மாறும். ஜனநாயகத்தின் அடிப்படை உண்மையை மோடி அரசு புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் ஒப்புதலோடு கிடைத்த அதிகாரம், மக்களின் எதிர்ப்புக்கு முன் நிரந்தரமாக நிலைத்திருக்க முடியாது.

தமிழ்நாடு தொடர்ந்து சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம், மொழி உரிமை, மாநில சுயாட்சி மற்றும் கல்வி உரிமைக்காகப் போராடி வருகிறது. மாணவர்களின் இந்த எழுச்சி அந்தப் போராட்டத்தின் தேசிய வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. மத்திய அரசு தனது ஆணவ அரசியலைக் கைவிட்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், கல்வி நிர்வாகத்தில் முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். 2024 தேர்தல் பாஜகவிற்கு அரசியல் எச்சரிக்கையாக இருந்தது என்றால், இளைஞர்களின் இந்த எழுச்சி எதிர்கால அரசியல் மாற்றத்திற்கான முன்னுரையாக அமையும்” என்று ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இளைஞர் எழுச்சிகல்வி அமைச்சர்தமிழ்நாடுதர்மேந்திர பிரதான்நீட் தேர்வுமாணவர் போராட்டம்மோடி அரசுஜவாஹிருல்லா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் திருப்பதி: டோக்கன் இன்றி 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
Next Article ஏர் ஃப்ரையரை சுத்தம் செய்யும் முறை பற்றிய குறிப்பு வினிகர் ட்ரிக்: ஏர் ஃப்ரையரை புதுசு போல் மாற்றலாம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி வளர்ச்சி குறித்து பேசுகிறார்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா புதிய உச்சம்: பிரதமர் மோடி பெருமிதம்

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பிரதமர்…

ஜூலை 26, 2026

டெல்லி போராட்டம் அரசுக்கு சவால் – உத்தவ் தாக்கரே

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம்,…

ஜூலை 26, 2026

மாணவர்கள் மீது தாக்குதல்: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்

ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட…

ஜூலை 26, 2026

மாணவர் போராட்டங்களுக்கான காரணம்: ஜெயராம் ரமேஷ் விளக்கம்

கல்விக்காக மக்கள் அதிகம் செலவிடுவதும், அதில் சீர்திருத்தங்கள்…

ஜூலை 26, 2026

கார்கில் வெற்றி தினம்: வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, தேசத்திற்காக போராடிய…

ஜூலை 26, 2026

You Might Also Like

பழனி தண்டாயுதபாணி ஆண்டி கோலத்தில் காட்சி அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

பழனி ஆண்டி கோல முருகனை வணங்கினால் என்ன பலன்?

பழனி தண்டாயுதபாணி ஆண்டி கோலத்தில் தரிசிப்பதால் கர்ம வினைகள் நீங்கி, தடைகள் விலகி, மன அமைதி கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஜோதிட ரீதியாகவும் இந்த தரிசனம் பலன்…

2 Min Read
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வருகிறார்
தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்பு விசாரணை: எ.வ.வேலுவின் அதிரடி பேட்டி!

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் பேட்டியளித்த அவர், 'அவர்கள் வெறும் அம்பு தான், எய்தவர்கள்…

2 Min Read
தமிழ்நாடு

காவிரி விவகாரம்: புதிய நடுவர் மன்றம் அவசியம் – தங்கம் தென்னரசு

மேகதாது அணை தொடர்பான அரசு தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கு அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி பிரச்சனைக்கு புதிய நடுவர்…

1 Min Read
தமிழ்நாடு

திமுகவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் எச்சரிக்கை!

முதலமைச்சர் விஜயைப் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதிலடி கொடுத்துள்ளார். திமுகவின் போலி பிரச்சாரங்களுக்கு பதில் சொல்வோம் என்றும், கடந்த திமுக…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?