MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வி.சி.க.வின் ஆதரவு யாருக்கு..? என்ன முடிவெடுக்க போகிறார் திருமாவளவன் – இன்று அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வி.சி.க.வின் ஆதரவு யாருக்கு..? என்ன முடிவெடுக்க போகிறார் திருமாவளவன் – இன்று அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - வி.சி.க.வின் ஆதரவு யாருக்கு..? என்ன முடிவெடுக்க போகிறார் திருமாவளவன் – இன்று அறிவிப்பு

லைஃப் ஸ்டைல்

வி.சி.க.வின் ஆதரவு யாருக்கு..? என்ன முடிவெடுக்க போகிறார் திருமாவளவன் – இன்று அறிவிப்பு

Admin
Last updated: மே 9, 2026 6:25 காலை
Admin
Share
SHARE

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில், திண்டிவனம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றது. தற்போது த.வெ.க. ஆட்சி அமைவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை விஜய் கோரினார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பெரும்பாலான நிர்வாகிகள் விஜய்க்கு நிபந்தனையுடன் ஆதரவு கொடுக்கலாம் என்று குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுள்ளார். இதில் அவர் ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவே வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவ்வாறு ராஜினாமா செய்யும் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட வேண்டும். பின்னர், துணை முதல்-அமைச்சர் பதவி மற்றும் ஒரு அமைச்சர் பதவி ஆகியவற்றை வழங்கிட நிபந்தனை விதிக்க வேண்டும்.

சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக திருமாவளவன் இருக்கிறார். அவர் சட்டமன்றத் தேர்தலில் போடியிட்டு வெற்றி பெறும்போது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார். எனவே, வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் சிதம்பரம் தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கிட வேண்டும். த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தவெக ஆதரவு கேட்ட நிலையில், விசிக ஆதரவு கடிதம் வழங்காததால் ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலவி வரும்நிலையில், உயர்நிலை குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவிக்கிறார். திருமாவளவன் என்ன முடிவெடுக்க போகிறார் என்பது தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

இதற்கிடையே த.வெ.க.வுக்கு நிபந்தனையுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று (சனிக்கிழமை) ஆதரவு வழங்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. வன்னி அரசு நேற்று தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு. இது திருமா காலம்’ எனப் பதிவிட்டிருந்தார்.

த.வெ.க.வுக்கு நிபந்தனை விதித்துள்ள நிலையில், விஜய்யை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் கடுமையாக விமர்சித்து பதிவு வெளியிட்டிருந்தார்.

அதில், தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில் த.வெ.க. தலைவர் விஜய் தடுமாறிப்போய் இருக்கிறாரா அல்லது அவருடன் இருக்கும் இரண்டாம் கட்டத்தலைவர்கள் அவரை தவறாக வழி நடத்துகிறார்களா? என கேள்வி எழுகிறது. ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை தனக்கு கிடைக்காத சூழலில் மிக கவனமாக த.வெ.க. செயல்பட்டிருக்க வேண்டும். உடனே தான் ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித்தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா?

இரண்டாம் கட்டத்தலைவர்களின் பிடியில் தான் இல்லை என்பதையும், கவர்னர் வழியாக பா.ஜனதா தமிழகத்திற்குள் நுழைய முயற்சிப்பதை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மனம்விட்டு கலந்துரையாடி இருக்க வேண்டாமா?

வாட்ஸ்-அப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது? வெற்றிபெற்ற பின் தேர்தலுக்கு முந்தைய முரண்பாடுகளை கூர் தீட்டாமல், அனைத்து தலைவர்களின் நன்மதிப்பை பெரும் வகையில் தி.மு.க.வை ஒழித்துக்கட்டப்பட்ட மன்னராட்சி என பேசிவிட்டு தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றிகண்டுள்ள இடதுசாரிகள் மற்றும் வி.சி.க.விடம் கூசாமல் ஆதரவு கேட்டு அழைப்பதில் என்னவகை தர்க்க நியாயம் உள்ளது.? என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: சிஎஸ்கே பிளே-ஆஃப் போவதில் என்ன பிரச்சனை? இன்னும் 4 போட்டிகளில் எத்தனை புள்ளிகள் தேவை?
Next Article சூப்பர் ரேபிட் செஸ்: குகேஷ் 4-வது இடம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஓடும் ரயிலில் பெண் பயணியை தாக்கிய வாலிபர் கைது

ஓடும் ரயிலில் பெண் பயணியை தாக்கிய வாலிபர் கைது

சென்னையிலிருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணி மீது வாலிபர்…

ஆகஸ்ட் 9, 2026

கிராமப்புற சேவை கட்டாயம்: தனியார் மருத்துவ மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம்

தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்களும் ஓராண்டு கிராமப்புறங்களில்…

ஆகஸ்ட் 9, 2026

டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி மோசடி: பெண் கைது

உத்தர பிரதேசத்தில் டேட்டிங் செயலி மூலம் 6…

ஆகஸ்ட் 9, 2026

ஆந்திர வனப்பகுதிகளில் 905 கி.மீ. சாலை: துணை முதல்வர் தகவல்

ஆந்திர வனப்பகுதிகளில் பழங்குடியினரின் வசதிக்காக 905 கி.மீ.…

ஆகஸ்ட் 9, 2026

பாகிஸ்தானுக்கு ரகசியம் கசியவிட்ட விமானப்படை அதிகாரி கைது

பாகிஸ்தான் உளவுத்துறையின் 'ஹனி டிராப்' வலையில் சிக்கி,…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் வெள்ளை வினிகர் பாட்டில் மற்றும் ஒரு துணி
லைஃப் ஸ்டைல்

தரை சுத்தம் செய்ய வினிகர்: நன்மைகள் மற்றும் எச்சரிக்கைகள்

வீட்டு உபயோகப் பொருட்களில் ஒன்றான வெள்ளை வினிகர், தரைகளை சுத்தம் செய்வதில் ஒரு சிறந்த மற்றும் சிக்கனமான தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது. டைல்ஸ் மற்றும் செராமிக் போன்ற தரை…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

இஞ்சி-தேன் கலவை: நோய்களை விரட்டும் அற்புத பானம்!

இஞ்சி மற்றும் தேன் கலந்த பானம் செரிமானத்தை மேம்படுத்தி, இதயத்தை பலப்படுத்தி, இருமலைக் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா, சர்க்கரை நோய் கட்டுப்பாடு மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.

1 Min Read

இதயம் காக்கும் பீட்ரூட்: ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்!

இதயம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பீட்ரூட், மறதியைக் குறைப்பது முதல் எலும்புகளை வலுப்படுத்துவது வரை பல நன்மைகளை வழங்குகிறது. பூண்டு, தேநீர், பழங்கள், மற்றும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்: இபிஎஸ்ஸுக்கு அடுத்த ஷாக்!

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அமமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளனர். இது அரசியல் களத்தில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?