MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தமிழ்நாடு

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Fernandez
Last updated: ஜூலை 23, 2026 11:24 காலை
Fernandez
Share
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்
SHARE

தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரணைக்கு எடுத்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் தேதி இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார். சட்டசபையில் முதல்வரின் எலும்பு உடைக்கப்படும் என்றும் அவர் அப்போது கருத்து தெரிவித்தார்.

இந்த பேச்சு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி போலீசார் மார்க்கண்டேயனை கைது செய்தனர். முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, மார்க்கண்டேயனின் வழக்கறிஞர் காசிராஜன், அவரை விடுவிக்கக் கோரி தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் மனு தாக்கல் செய்தார். அதே சமயம், குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் தரப்பில், மார்க்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஸ்ரீதேவி, 'கூட்டத்தில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் மார்க்கண்டேயன் முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினாரா என்பது குறித்து விசாரிக்க இரண்டு நாள் போலீஸ் காவல் வழங்க வேண்டும்' என வாதிட்டார்.

இருப்பினும், காவல்துறையினரின் காவல் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். மேலும், மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில், மார்க்கண்டேயன் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த விசாரணையின் முடிவில் மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது வழக்கு ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai High CourtDMKMarkandeyanVIJAYVilathikulamசென்னை உயர்நீதிமன்றம்திமுகமார்க்கண்டேயன்விளாத்திகுளம்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார் நீட் எதிர்ப்பு போராட்டம் அரசியல் கேலிக்கூத்து – டிடிவி தினகரன்
Next Article பிரதமர் நரேந்திர மோடி வினாத்தாள் கசிவு: விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனை – பிரதமர் மோடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத் திட்டத்துக்கான நிர்வாகச் செயலாளர் சைமன் ஸ்டீல்

சூரிய மின் உற்பத்தியில் இந்தியா முதலிடம்: ஐ.நா. தலைவர் தகவல்

ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத் திட்டத்துக்கான நிர்வாகச் செயலாளர் சைமன் ஸ்டீல்,…

ஜூலை 23, 2026

வினாத்தாள் கசிவு: விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனை – பிரதமர் மோடி

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மௌனம் கலைத்த பிரதமர்…

ஜூலை 23, 2026

ஏஐ மூலம் போலி வங்கி செயலி: 18 வயது இளைஞர் கைது

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான வங்கி செயலிகளை…

ஜூலை 23, 2026

சிக்கிம் சுரங்கப் பாதை விபத்து: உயிரிழப்பு 20 ஆக உயர்வு

சிக்கிம் மாநிலத்தில் நீர்மின்சார திட்ட சுரங்கப் பாதை…

ஜூலை 23, 2026

பசுமை பட்டாசு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக்…

ஜூலை 23, 2026

You Might Also Like

சட்டமன்ற உறுப்பினர் பல்லவி ஆய்வு செய்யும் காட்சி
தமிழ்நாடு

கழிவுநீர் கலந்த குடிநீர்: எம்.எல்.ஏ பல்லவியிடம் மக்கள் வாக்குவாதம்

சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் 10 நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார். எம்.எல்.ஏ பல்லவி ஆய்வு செய்ய வந்தபோது மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

2 Min Read
பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

காவல்துறை கண்ணியம் தவறக்கூடாது – நயினார் நாகேந்திரன்

காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக பத்திரிகையாளர்களிடம் ஒருமையில் பேசி அவர்களின் மனதைப் புண்படுத்தக்கூடாது என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்…

1 Min Read
நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்மார்ட் வாட்ச் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு

நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்மார்ட் வாட்ச் அணிவதற்கு தடை

நாடாளுமன்ற வளாகத்திற்குள் உறுப்பினர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகள் வெளியே கசிவதைத் தடுக்க இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2 Min Read
குட்கா முறைகேடு வழக்கு தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவு
தமிழ்நாடு

குட்கா வழக்கு: சி.விஜயபாஸ்கர் மீதான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான விசாரணையை 12 வாரங்களுக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?