MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விசாரணை பெயரில் விஜயனை அச்சுறுத்துவது கண்டனத்திற்குரியது: சீமான்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விசாரணை பெயரில் விஜயனை அச்சுறுத்துவது கண்டனத்திற்குரியது: சீமான்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விசாரணை பெயரில் விஜயனை அச்சுறுத்துவது கண்டனத்திற்குரியது: சீமான்

தமிழ்நாடு

விசாரணை பெயரில் விஜயனை அச்சுறுத்துவது கண்டனத்திற்குரியது: சீமான்

Fernandez
Last updated: ஜூலை 16, 2026 9:08 மணி
Fernandez
Share
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிடுகிறார்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
SHARE

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகவியலாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் தமிழக காவல்துறை அச்சுறுத்துவதாகவும், அவரது கைபேசியைப் பறிமுதல் செய்து மோசமாக நடத்தியதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அரசியல் விவாதங்களையும், நேர்காணல்களையும் திறம்பட நடத்தி வரும் ஊடகவியலாளர் விஜயனை, விசாரணை என்ற பெயரில் தமிழக அரசின் காவல்துறை அலைக்கழிப்பதும், அச்சுறுத்துவதும் அதிர்ச்சியளிக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்டவரை நேர்காணல் செய்ததற்காக விஜயனைக் காவல்நிலையத்திற்கு அழைத்து, அவரது கைபேசியைப் பறிமுதல் செய்து, கண்ணியக்குறைவாக நடத்தியது கண்டிக்கத்தக்கது.

நாடறியப்பட்ட ஊடகவியலாளர் விஜயன் மீது விசாரணை என்ற பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஒடுக்குமுறை, மற்ற ஊடகவியலாளர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டலாகும். 60 நாட்களிலேயே தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேடு வெளிச்சமாகி, கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், அதை விவாதிக்கும் ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்படுவதும், அரசின் தொலைக்காட்சியிலிருந்து பிற காட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதும் கருத்துரிமை மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.

திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு மாற்றாக தனது ஆட்சியை அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் விஜய், இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவது தமிழ்நாடு இதுவரை கண்டிராத பேரவலமாகும். பெருந்தலைவர் காமராசர், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா போன்ற ஆளுமைகளின் பெயர்களைச் சொல்லிக்கொண்டு, நிர்வாகத்தின் மீதான விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவமின்றி, காட்டாட்சியை ஏவிவிடுவது பாசிச வெறியாட்டமாகும்.

தமிழக அரசின் இந்த கொடுங்கோல் போக்கை உடனடியாக மாற்றிக்கொள்ளாவிட்டால், ஜனநாயக சக்திகள் மூலம் பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எனவே, விஜயனுக்கு காவல்துறையின் மூலம் விசாரணை என்ற பெயரில் எந்த நெருக்கடியும் தராமல், உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்," என்று சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7ஊடகவியலாளர்சீமான்தமிழக அரசுநாம் தமிழர் கட்சிபுதிய தலைமுறைவிசாரணைவிஜயன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார் விமான நிலைய விரிவாக்கம்: முதல்வர் தலையிட வேண்டும் – எஸ்.பி.வேலுமணி
Next Article ஈரோடு-செங்கோட்டை ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதைக் குறிக்கும் படம் ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவை மாற்றம்: பராமரிப்பு பணி அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தொகுதி மறுவரையறை: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மோடிக்கு கார்கே கடிதம்

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர்…

ஜூலை 16, 2026

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் நெரிசல்: ஒருவர் பலி, 120 பேர் பாதிப்பு

ஒடிசா புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் ஏற்பட்ட…

ஜூலை 16, 2026

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் நெரிசல்: ஒருவர் பலி, பலர் காயம்

ஒடிசா பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட…

ஜூலை 16, 2026

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் விரைவில்: சுர்ஜேவாலா தகவல்

கர்நாடக அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என…

ஜூலை 16, 2026

தொகுதி மறுவரையறை மசோதா: மோடிக்கு கார்கே அவசரக் கடிதம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், தொகுதி…

ஜூலை 16, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னை மெட்ரோ: பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய வசதி அறிமுகம்!

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், 'இழுபடுதலைத் தடுக்கும் வசதி' (Anti-Drag Feature) பொருத்தப்பட்ட முதல் ரயில் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

தமிழக வக்பு சொத்துகளுக்கு ஆபத்து: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

தமிழகத்தில் உமீத் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்படாத 30,000 வக்பு சொத்துக்களை உடனடியாகப் பதிவு செய்ய தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ…

1 Min Read
கரூர் மாவட்டத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக கோரிக்கை விடுத்த ஜோதிமணி எம்பி
தமிழ்நாடு

கரூர்: விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த ஜோதிமணி எம்பி கோரிக்கை

கரூர் மாவட்டத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் ஜோதிமணி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். இது விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு இடையூறாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

1 Min Read
தமிழ்நாடு

80 முன்னோடி திட்டங்கள்: பள்ளிக்கல்வித்துறை சாதனை – அன்பில் மகேஷ்

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் சுமார் 80 முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாற்றங்கள் வளர்ச்சியை நோக்கியே இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?