அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் சேர்வது தொடர்பாக அறப்போர் இயக்கம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் தளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், 'அதிமுக ஆட்சியில் குட்கா முதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் திருட்டுத்தனமாக குட்கா விற்க அனுமதி கொடுத்ததாக புகார் கூறப்பட்ட அன்றைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அன்றைய டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் மீது அதிமுக மற்றும் திமுக ஆட்சிக்காலங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
You Might Also Like
தென்காசி: நாளை பராமரிப்பு பணி – மின்தடை அறிவிப்பு
தென்காசி மாவட்டம் கடைநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மின்சார வாரியம் கேட்டுள்ளது.
1 Min Read
வேலைக்கு செல்லாத மகன்: தந்தையை மகன் கொடூரமாக தாக்கிய சம்பவம்!
மதுபோதைக்கு அடிமையான மகன், வேலைக்குச் செல்லாதது குறித்து கண்டித்த தந்தையை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 Min Read
மசினகுடி சாலையில் சுற்றுலா வாகனங்களுக்கு தடை: நீலகிரி நிர்வாகம்
நீலகிரி மாவட்டம், மசினகுடி, மாயார், சிங்காரா, விபூதி மலை சாலைகளில் இன்று முதல் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 Min Read
கேரள மழைதான் காரணம்: காவிரி நீர் திறப்பு குறித்து சௌமியா அன்புமணி விமர்சனம்
கேரளாவில் பெய்த கனமழையால் கபினி அணை நிரம்பி உபரிநீர் தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட்டது என்றும், கர்நாடகா அரசு தீர்ப்புகளை மதிக்கவில்லை என்றும் பாமக சௌமியா அன்புமணி விமர்சித்துள்ளார்.
2 Min Read
