MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதலமைச்சர் பதவிக்கு இது அழகல்ல! – ஸ்டாலினை விமர்சித்த விஜய், சீறிய திருமாவளவன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதலமைச்சர் பதவிக்கு இது அழகல்ல! – ஸ்டாலினை விமர்சித்த விஜய், சீறிய திருமாவளவன்

தமிழ்நாடு

முதலமைச்சர் பதவிக்கு இது அழகல்ல! – ஸ்டாலினை விமர்சித்த விஜய், சீறிய திருமாவளவன்

Admin
Last updated: ஜூன் 25, 2026 8:04 காலை
Admin
Share
SHARE

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்கு பதிலாக, அந்த நிதியை உயரிய வசதிகளுடன் கூடிய பிரசவ வார்டுகள் அமைக்க பயன்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும், சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முதல்வர் விஜய் ஏளனம் செய்து பேசியதையும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட திருமாவளவன், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் ஓரிரு மண்டலங்களில் மட்டும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, அதனை எதிர்த்து விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடின. பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. தமது உயிரைப் பணயம் வைத்து இந்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும்" என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்திற்கே 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும், சிசேரியன் பிரசவத்திற்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கின்றனர். ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.

இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு, அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப் போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும் என திருமாவளவன் தெரிவித்தார். மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்குப் போடப்படும் தங்க மோதிரம் சில மாதங்களிலேயே கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும் என்பதால், தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென முதலமைச்சரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சட்டமன்றம்தமிழக அரசுதிருமாவளவன்விஜய்ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்
Next Article போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

125 நாள் திட்டம் காந்தி பெயரில் தொடர வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய்

மகாத்மா காந்தியின் பெயரிலேயே 125 நாள் திட்டம் தொடர வேண்டும் என்றும், நிதிப் பகிர்வில் தளர்வுகள் வேண்டும் என்றும் முதல்வர் விஜய் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

02-07-2026 ராசி பலன்: நண்பர்களிடம் பகை, அனுசரித்து செல்வது நலம்!

02-07-2026 இன்றைய ராசி பலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான பலன்கள். நண்பர்களிடம் பகை ஏற்படலாம், அனுசரித்து செல்வது நன்மை தரும்.

4 Min Read
தமிழ்நாடு

திமுகவின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அடுத்த 100 ஆண்டுகளுக்கான கட்சியின் மாஸ்டர் பிளான் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கிளை முதல் தலைமை வரை அதிரடி மறுசீரமைப்புக்கு 'கழக மறுசீரமைப்பு…

2 Min Read
தமிழ்நாடு

த.வெ.க.வில் இணைந்தனர் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

முன்னாள் அதிமுக அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று த.வெ.க. கட்சியில் இணைந்துள்ளனர். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழி இது குறித்து கேள்வி…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?