MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விஜய் 20 ஆண்டுகள் முதலமைச்சர் – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > விஜய் 20 ஆண்டுகள் முதலமைச்சர் – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடி!
லைஃப் ஸ்டைல்

விஜய் 20 ஆண்டுகள் முதலமைச்சர் – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடி!

Admin
Last updated: June 14, 2026 7:22 am
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் கலந்துகொண்டார். இந்த விழாவில், அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, இளவரசன், முன்னாள் அமைச்சர் பச்சைமால், திருநெல்வேலி முன்னாள் மேயர் விஜயலட்சுமி, அதிமுக சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி ஜான் மகேந்திரன், ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தவசி, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி உள்ளிட்டோர் தங்களை தவெக-வில் இணைத்துக் கொண்டனர். அவர்களை அமைச்சர் என்.ஆனந்த் கட்சித் துண்டு அணிவித்து வரவேற்றார். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, விஜய் தமிழன் பார்த்திபன், ராஜ்மோகன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், 'தவெக-வில் இணையும் அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். உங்களுக்குரிய பதவிகள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து உங்களுக்கு என்னென்ன பதவிகளைத் தர வேண்டும் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார். எந்தவொரு அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ தவறு செய்தால், அடுத்த வினாடியே பதவியில் நீக்கப்படுவார்கள். அதுதான் தமிழ்நாடு முதலமைச்சர். தொகுதியில் மக்கள் பிரச்சனைகளைக் கூறினால் உடனடியாகத் தீர்வு காணப்படும். உங்களுடன் எப்போதும் இருப்போம்' என்று உறுதியளித்தார். மேலும், 'நாம் அனைவரும் இணைந்து வருகிற உள்ளாட்சித் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறுவோம்' என சபதம் ஏற்போம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

'இன்னும் 20 ஆண்டுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக இருப்பார். இதனால், மற்றவர்களுக்கு ஒரே பயம். இப்படியே விட்டுவிட்டால் அவ்வளவு தான் போச்சு என்று நினைக்கிறார்கள். ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்களும் உங்கள் மாதிரி சாதாரண தொண்டன் தான். நாங்கள் பாகுபாடு பார்க்க மாட்டோம். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் எங்களை அப்படித்தான் வழிநடத்துகிறார். மக்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கூறினால் அதற்கு தீர்வுக் காண தயாராக இருக்கிறோம்' என்றும் அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தவெக-வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி, 'தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவும், நேர்மையான ஆட்சியைத் தரவும் தவெக செயல்படுகிறது. போதை கலாச்சாரத்தை ஒழிக்கவும், பெண்களின் பாதுகாப்பை உயர்த்தவும் விஜய் சிறந்த தலைவராக விளங்குகிறார். இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியாவை வழிநடத்தும் முக்கிய இடத்தில் தலைவர் விஜய் இருப்பார்' என உறுதியாகத் தெரிவித்தார். நகைச்சுவை நடிகர் சீனிவாசன், 'தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி இனி தமிழ்நாட்டில் தொடரும். தமிழ்நாடு சிங்கப்பூராக விரைவில் ஆக்கப்படும்' என்றார். ஆல் இந்தியா சிந்தாரிக் பெந்தோகஸ் சபைகளின் தலைவர் பேராயர் ஜோஸ்வா இமானுவேல், திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், மாற்றுப்பாதை தேவை என்றும் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu PoliticsVIJAYஅமைச்சர் என். ஆனந்த்அரசியல்தமிழக வெற்றிக் கழகம்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மகரம்: 14 ஜூன் 2026 இன்றைய ராசிபலன்
Next Article காலையில் கீரை சாப்பிடலாமா? முக்கிய நன்மைகள் இதோ!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராஜஸ்தானில் பயங்கர மணல் புயல்: ரெட் அலர்ட் அறிவிப்பு

ராஜஸ்தான் மற்றும் டெல்லியை புரட்டிப் போட்ட பயங்கர மணல் புயல். மணிக்கு 92…

June 15, 2026

அமெரிக்கா – ஈரான் மோதல் முடிவுக்கு வருவதை வரவேற்கிறேன் – பிரதமர் மோடி

அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதல்…

June 15, 2026

அயோத்தி ராமர் கோயில்: பிரதமர் நட்ட மரம் காணாமல் போனது சர்ச்சை!

அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் மோடி நட்ட…

June 15, 2026

ரயிலில் தீ விபத்து வதந்தி: தண்டவாளத்தில் குதித்து 4 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக…

June 15, 2026

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம்…

May 29, 2026

You Might Also Like

அரசியல்

தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தேர்தல் நேரத்தில் திமுகவினரை தாக்கிய வழக்கில் தவெகவைச் சேர்ந்த 8 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ.10 ஆயிரம் ஜாமீன், வாராந்திர கையெழுத்து…

2 Min Read
அரசியல்

திமுகவுடன் காங்கிரஸ் உறவு முறிவு? விஜய்-காங்கிரஸ் கூட்டணிக்கு அடித்தளம்?

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகியதாகக் கூறப்படும் நிலையில், நடிகர் விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தேசிய அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துமா?

2 Min Read
லைஃப் ஸ்டைல்

டாஸ்மாக் கடைகள்: முதல்வர் விஜய்க்கு நடிகர் பார்த்திபன் அசத்தல் யோசனை!

டாஸ்மாக் கடைகள் செயல்படும் விதம் குறித்து முதல்வர் விஜய்க்கு நடிகர் பார்த்திபன் ஒரு புதுமையான யோசனையை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'நான் முதல்வரிடம் ஒரு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மகளிர் டி20 உலக கோப்பை: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா

மகளிர் டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இது அணிக்கு பெரும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?