MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பேரவையில் பதுங்கும் முதல்வர் விஜய் – திமுக கடும் விமர்சனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பேரவையில் பதுங்கும் முதல்வர் விஜய் – திமுக கடும் விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பேரவையில் பதுங்கும் முதல்வர் விஜய் – திமுக கடும் விமர்சனம்

தமிழ்நாடு

பேரவையில் பதுங்கும் முதல்வர் விஜய் – திமுக கடும் விமர்சனம்

Admin
Last updated: ஜூன் 19, 2026 6:41 மணி
Admin
Share
SHARE

சட்டப்பேரவையில் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது குறித்தும், அமைச்சர்கள் பதிலளிக்காதது குறித்தும் திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. முதலமைச்சர் விஜய் வெளியே வீராவேசமாக பேசினாலும், பேரவையில் பதுங்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் நேற்று வீரவசனமாக பேசி 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பாகவே நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மேலும், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள், பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பியபோதும், சமூகநலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோர் பதிலளிக்கவில்லை என்றும், இது குறித்து முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்காமல் அமைதியாக அமர்ந்திருப்பது ஏன் என்றும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

‘பதில் தெரியாதவன் கிட்ட கேள்வி கேட்டா, தேடிப்பிடித்து தப்பாவாவது பதில் சொல்லுவான், எனக்கு கேள்வியே தெரியாதே’ என்ற கமல்ஹாசனின் வசனத்தை மேற்கோள் காட்டி, முதலமைச்சர் விஜய் ஒரு ‘DUMMY CM’ என மக்களுக்குத் தெரியக்கூடாது என்ற பயத்தில் நேரலையை நிறுத்தியதாகவும், மக்களின் முன் அம்பலப்பட்டு நிற்பதாகவும் திமுக விமர்சித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்தமிழ்நாடு சட்டமன்றம்திமுகவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மோடி மேற்கு வங்கம், ஒடிசா பயணம்: யோகா, நிதி, புதிய கப்பல்கள்
Next Article இஸ்ரேல் மீது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அதிருப்தி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு

மேகதாது அணைக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழக அரசு…

ஆகஸ்ட் 3, 2026

பிரிஜ் பூஷன் விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு: வினேஷ் போகத் அறிவிப்பு

மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில்…

ஆகஸ்ட் 3, 2026

ராஞ்சியில் மாணவர் போராட்டம்: தொலைதூர நகரங்களில் இருந்து ஆன்லைன் உணவு டெலிவரி!

ராஞ்சியில் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து போராடும் மாணவர்களுக்கு…

ஆகஸ்ட் 3, 2026

பீகாரில் 40 ஆண்டு பாஜக கோட்டை வீழ்ந்தது: பிரசாந்த் கிஷோர் மகத்தான வெற்றி

பீகாரில் 40 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்த…

ஆகஸ்ட் 3, 2026

பிஹார் பங்கிபூர் இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோரின் அமோக வெற்றி!

பிஹார் மாநிலம் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலில்…

ஆகஸ்ட் 3, 2026

You Might Also Like

தமிழ்நாடு

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: மறுபரிசீலனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தமிழக…

1 Min Read
தமிழ்நாடு

கரூர் விவகாரத்தில் எதிர்ப்பு: அஸ்ரா கர்க் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமனம்!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் சூழலில், வடக்கு…

1 Min Read
தமிழ்நாடு

சேலம் மாணவர் கொலை: போதைப் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செய்லாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சேலம் அருகே மதுபோதையால் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குத்திக் கொலை…

1 Min Read
தமிழ்நாடு

திருச்செந்தூரில் திடீரென 100 அடி உள்வாங்கிய கடல்: பாறைகள் வெளியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று காலை திடீரென கடல் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியது. இதனால், வழக்கமாக கடலுக்கு அடியில் இருக்கும் பாசி படர்ந்த பாறைகள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?