MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வீரமணி POCSO வழக்கு: திமுகவை தவெக கடுமையாக விமர்சித்தது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வீரமணி POCSO வழக்கு: திமுகவை தவெக கடுமையாக விமர்சித்தது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வீரமணி POCSO வழக்கு: திமுகவை தவெக கடுமையாக விமர்சித்தது

தமிழ்நாடு

வீரமணி POCSO வழக்கு: திமுகவை தவெக கடுமையாக விமர்சித்தது

Fernandez
Last updated: செப்டம்பர் 21, 2026 5:56 மணி
Fernandez
Share
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஐடி பிரிவு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஐடி பிரிவு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது
SHARE

2025 அக்டோபரில் வீரமணி மீது போக்சோ (POCSO) வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வெறும் 5 மாதங்களுக்குள், அதாவது 2026 பிப்ரவரிக்குள், காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் இந்த வழக்கின் விசாரணையை முடிக்க முயன்றதை அறிந்திருந்தாரா? அவரது இரும்புக்கரம் வலுவிழந்திருந்ததா? என்று திமுகவை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதன் ஐடி பிரிவு மூலம் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக தவெக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பொள்ளாச்சி வழக்கிற்காகப் பொங்கி எழுந்து குரல் கொடுத்த கொத்தடிமைகளும், அவர்களின் பண்ணையாரும் தற்போது ஏன் அமைதி காக்கிறார்கள்? மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்ற அண்ணனும் தங்கையும் இப்போது ஏன் கமுக்கமாக இருக்கிறார்கள்? என்று வினவியுள்ளது. அப்போது அவர்கள் பொங்கியது தேர்தல் ஆதாயத்திற்காகவா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், யார் இவ்வழக்கை முடிக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது? பாட்டியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்த பண்ணையார், வீரமணி மீதான போக்சோ வழக்கைப் பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்? என்றும் தவெக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

உரிமைகளுக்காகப் போராடிய தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாயிகள் போன்றோர் மீது காவல்துறையை ஏவல்துறையாக்கி அதிகார அத்துமீறலில் ஈடுபட்டவருக்கு, வீரமணி வழக்கின் விசாரணையை முடுக்கிவிட வக்கில்லையா? என்றும் தவெக கேள்வி எழுப்பியுள்ளது.

'அனைவரும் தன்னை அப்பா என்று அழைக்கிறார்கள்' என்று படப்பிடிப்பு நடத்தி, தன்னை 'அப்பா' என்று திணித்துக் கொண்ட போலி அப்பாவிற்கு, பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்பது தெரியாதா? அல்லது அக்கறை இல்லையா? சட்டம் ஒழுங்கைக் காக்கும் துறையைத் தன் கையில் வைத்திருந்தவர், யாரைக் காப்பாற்ற வாயை மூடிக் கொண்டிருக்கிறார்? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ? என்றும் தவெக விமர்சித்துள்ளது.

'அப்பா' என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டவரின் ஆட்சியில் முடிக்கப் பார்த்ததாகக் கூறப்படும் வழக்கை, தற்போது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் தமிழக இளைஞர்களின் அண்ணன், வெற்றித் தலைவர்! மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் தீர்ப்பு, கள்ளமௌனம் காப்பவர்களைக் கதிகலங்கச் செய்யப் போவது உறுதி என்றும் தவெக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKPOCSOTVEKதமிழக வெற்றிக் கழகம்தவெகதிமுகபொள்ளாச்சி வழக்குவீரமணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களை சந்தித்தார் வீரமணி வழக்கை திசை திருப்புகிறார் நிர்மல்குமார்: என்.ஆர். இளங்கோ குற்றச்சாட்டு
Next Article மும்பை ஐஐடி கல்வி நிறுவனம் மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை: பேராசிரியர் பதவியில் இருந்து நீக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது செய்யப்பட்டார்

ஆயுள் தண்டனை கைதி விடுதலை: கர்நாடக டிஐஜி கைது

உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த வழக்கில்…

அக்டோபர் 8, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக…

அக்டோபர் 8, 2026

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

You Might Also Like

நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

நடிகை ராதா புகார்: அக்கா அம்பிகா மீது ரூ.46 கோடி மோசடி?

80களின் முன்னணி நடிகைகளான அம்பிகா, ராதா இடையே ரூ.46 கோடி பண மோசடி சர்ச்சை. அக்கா அம்பிகா மீது ராதா புகார்.

2 Min Read
கோவையில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை
தமிழ்நாடு

கோவையில் அதிரடி சோதனை: 28 பேர் கைது, போதைப்பொருள் பறிமுதல்

கோவை மாநகரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 டன் புகையிலை, 10 கிலோ கஞ்சா, 50 கஞ்சா சாக்லேட், 300 போதை மாத்திரைகள் பறிமுதல். 28…

2 Min Read
ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
தமிழ்நாடு

மீசைய முறுக்கு 2: வெளியாகும் தேதி அறிவிப்பு!

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2 Min Read
தேனி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதி கார்த்திக்
தமிழ்நாடு

தேனி: போலீஸ் காவலில் இருந்து தப்பியோடிய கைதி – பரபரப்பு

தேனி நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து கைதி கார்த்திக் சுவரேறி குதித்து தப்பிச் சென்றார். அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?