MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 15 வயது சிறுவன் பவுலர்களை அவமானப்படுத்துவதா? – கிரெக் சாப்பல் ஆவேசம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 15 வயது சிறுவன் பவுலர்களை அவமானப்படுத்துவதா? – கிரெக் சாப்பல் ஆவேசம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - 15 வயது சிறுவன் பவுலர்களை அவமானப்படுத்துவதா? – கிரெக் சாப்பல் ஆவேசம்

விளையாட்டு

15 வயது சிறுவன் பவுலர்களை அவமானப்படுத்துவதா? – கிரெக் சாப்பல் ஆவேசம்

Admin
Last updated: ஜூன் 11, 2026 9:51 காலை
Admin
Share
SHARE

2026 ஐபிஎல் தொடரில் 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக விளையாடி பல சாதனைகளை படைத்த நிலையில், இது டி20 கிரிக்கெட்டின் அதீத சாதகத்தை காட்டுவதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரெக் சாப்பல் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் 16 இன்னிங்ஸ்களில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, 64 பவுண்டரிகள் மற்றும் 72 சிக்சர்களை அடித்து, 237.31 ஸ்ட்ரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பியை வென்றார். ஜஸ்பிரித் பும்ரா, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் போன்ற உலகின் தலைசிறந்த பவுலர்களை அவர் எளிதாக எதிர்கொண்டார். இவரது ஆட்டத்திற்காக இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது.

கிரெக் சாப்பல், வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை பாராட்டிய அதேசமயம், தற்போதைய டி20 கிரிக்கெட் விதிகளால் பவுலர்களின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளதாக எச்சரித்துள்ளார். 'உடல் ரீதியாக முழுமையான வளர்ச்சி கூட அடையாத ஒரு 15 வயது சிறுவனால், சர்வதேச அரங்கில் உலகின் தலைசிறந்த பவுலர்களை மிக எளிதாக அவமானப்படுத்த முடிகிறது என்றால், அது இந்த விளையாட்டில் உள்ள பெரிய குறைபாட்டையே காட்டுகிறது' என அவர் கூறினார். மேலும், நவீன பேட்கள், சிறிய பவுண்டரி எல்லைகள், தட்டையான ஆடுகளங்கள் ஆகியவை கிரிக்கெட்டை பேட்ஸ்மேன்களின் கைகளுக்கு ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டன என்றும் விமர்சித்தார்.

தற்போதைய டி20 போட்டிகள் பவுண்டரி, சிக்சர்களை அடிக்கும் இயந்திரத்தனமான விளையாட்டாக மாறிவிட்டதாக சாப்பல் வேதனை தெரிவித்தார். சவால்கள் இல்லாத விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்காது என்றும், கேப்டன், பவுலர், பேட்ஸ்மேன்களுக்கு இடையிலான திட்டமிடல் காணாமல் போய்விட்டதாகவும், விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன் எடுக்கும் வழக்கமே அழிந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான சமநிலையை மீண்டும் கொண்டு வர, ஒரு டி20 இன்னிங்ஸில் பேட்டிங் அணி அதிகபட்சம் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழக்க அனுமதிக்க வேண்டும், அனைத்து டி20 ஆடுகளங்களிலும் குறைந்தது 3 மிமீ அளவுக்கு புற்கள் இருக்க வேண்டும், ஆடுகளத்தின் ஒரு பகுதி வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், மறுபகுதி சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக வறண்டு இருக்க வேண்டும் போன்ற விதிமுறை மாற்றங்களை சாப்பல் முன்மொழிந்துள்ளார். எல்பிடபிள்யூ விதியிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும், பந்து எங்கு பிட்ச் ஆனாலும் நேராக சென்று ஸ்டம்பில் பட்டால் பேட்ஸ்மேனுக்கு அவுட் வழங்க வேண்டும் என்றும், இதுபோன்ற மாற்றங்களால் இளம் திறமையாளர்களின் உண்மையான திறமை மேலும் மெருகேறும் என்றும் அவர் வித்தியாசமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketGreg ChappellIPLஐபிஎல்கிரிக்கெட்கிரெக் சாப்பல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article துலாம் ராசி: 11 ஜூன் 2026 இன்றைய ராசிபலன்
Next Article பனையூரில் இன்று தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட ஐடி ஊழியரின் மனைவி மற்றும் உறவினர்கள்

ஐடி ஊழியர் கொலை: மனைவியும் உறவினர்களும் கைது

டெல்லியில் ஐடி ஊழியர் வினய் குப்தா கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி…

ஆகஸ்ட் 23, 2026

48 ஆண்டுகளுக்குப் பிறகு புரி ஜெகந்நாதர் கோயில் கருவூல கணக்கெடுப்பு

ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில்,…

ஆகஸ்ட் 23, 2026

சர்வதேச பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்: செப். 1 முதல் புதிய நடைமுறை

செப்டம்பர் 1 முதல் சர்வதேச விமான பயணிகளுக்கு…

ஆகஸ்ட் 23, 2026

டாஸ்மாக் முறைகேடு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்…

ஆகஸ்ட் 23, 2026

பவன் கல்யாண் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா பயணம்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், வலது…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

ரோஹித் சர்மா சதம் அடித்த பேட் ஷர்துல் தாக்குருடையது
விளையாட்டு

ரோஹித் சதம் அடித்த பேட் ஷர்துல் தாக்குருடையது: நெகிழ்ந்த வீரர்

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்த ரோஹித் சர்மா, சக வீரர் ஷர்துல் தாக்குரின் பேட்டைப் பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஷர்துல் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

3 Min Read
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
விளையாட்டு

இந்திய மண்ணில் வெளிநாட்டு அணியாக இந்தியா: ஆப்கானிஸ்தானுடன் டி20 தொடர்

இந்திய அணி சொந்த மண்ணிலேயே வெளிநாட்டு அணியாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இது செப்டம்பர் 13, 15, 17…

2 Min Read
ஐபிஎல் 2026விளையாட்டு

குஜராத்திற்கு எதிரான மேட்ச்சில் ராஜஸ்தான் படு தோல்வி.. தரவரிசையில் 2 ஆம் இடத்திற்கு டைட்டன்ஸ் முன்னேற்றம்

குஜராத்திற்கு எதிரான மேட்ச்சில் ராஜஸ்தான் படு தோல்வி.. தரவரிசையில் 2 ஆம் இடத்திற்கு டைட்டன்ஸ் முன்னேற்றம்Published by:Last Updated:May 09, 2026 11:48 PM ISTரஷித் கான்…

2 Min Read
விளையாட்டு

விராட் கோலிக்கு பதில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது சரியே: ஆகாஷ் சோப்ரா

விராட் கோலிக்கு மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படாதது சரியான முடிவே என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். மிடில் ஆர்டரில் வாய்ப்பு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?