MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ – உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ – உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ – உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

தமிழ்நாடு

‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ – உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

Admin
Last updated: மே 12, 2026 5:16 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தனது முதல் உரையை சபையில் நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில், '17வது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நான் ஆற்றும் முதல் உரை இது. இந்த தருணத்தில், எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த 1.54 கோடி தமிழ்நாட்டு மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இருவருக்கும் எனது வாழ்த்துகள்' என்று பேசினார்.

'தமிழ்நாடு சட்டப்பேரவையில் திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் எதிர்க்கட்சியாக இல்லாமல், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகவே செயல்படும். நாங்கள் எப்போதும் ஒரு ஆக்க சக்தியாகவே இருப்போம்' என அவர் வலியுறுத்தினார்.

'முதலமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் இல்லத்திற்கும், மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் இல்லத்திற்கும் சென்று வாழ்த்துப் பெற்றார். அந்த அரசியல் நாகரிகம் சட்டப்பேரவையிலும் தொடர வேண்டும் என்பது எங்கள் எண்ணமும் எதிர்பார்ப்பும் ஆகும்' என்றார்.

'முதலமைச்சர் விஜய்யும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஆனால், அரசை நடத்துவதில் தி.மு.க.வே மூத்த கட்சி. அந்த அடிப்படையில், எங்களுடைய அறிவையும், அனுபவத்தையும் உங்களுடன் (த.வெ.க. அரசு) பகிர்ந்துகொள்ள நாங்கள் (தி.மு.க.) தயாராக இருக்கிறோம். அதைப் பெற்றுக்கொள்ள நீங்களும் தயாராக இருங்கள். ஏனெனில், தமிழ்நாட்டு மக்களின் நலனே நமக்கு எப்போதும் முக்கியம்' என்று குறிப்பிட்டார்.

'சபாநாயகர் அவர்கள் எங்கள் இரு தரப்பினரையும் கைகோத்து அரவணைத்துச் செல்ல வேண்டும். அவைத் தலைவரை கோபப்படுத்தும் வகையில் நாங்கள் ஒருபோதும் செயல்பட மாட்டோம்' என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.

'சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி காதுகளாகவும், எதிர்க்கட்சிகள் குரலாகவும் இருக்க வேண்டும். அதில்தான் இந்தச் சபையின் பெருமை அடங்கியுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், மாநில வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒரே வரிசையில் நிற்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு இணையாகவே எதிர்க்கட்சி வரிசையும் அமைந்துள்ளது' என்றார்.

'அரசின் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

'மேற்கு வங்கத்தில் 'வந்தே மாதரம்' முதலில் ஒலிக்கிறது. ஆனால், இங்கே தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் பின்னுக்குத் தள்ளப்பட்டது? முன்பு மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது, இதுபோன்ற ஒரு முயற்சியைத் தடுத்து நிறுத்திய வரலாறு எங்களுக்கு உண்டு. இனிவரும் காலங்களில், குறிப்பாக ஆளுநர் உரை நிகழ்த்தும்போது, இதுபோன்ற மரபுகள் மீறப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமையையும், மரபையும் காக்க நாங்கள் என்றும் உறுதியுடன் இருப்போம்' என எச்சரித்தார்.

இறுதியாக, 'வெல்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு! மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்!' என்று முழக்கமிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘மணி ஹெய்ஸ்ட்’ மீண்டும் வருகிறது!
Next Article அசாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா இரண்டாவது முறையாக பதவியேற்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் பேசுகிறார்

E20 பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பில்லை – நிதின் கட்கரி

E20 எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பில்லை என மத்திய அமைச்சர்…

ஜூலை 30, 2026

டெல்லி மாணவர் போராட்டம்: வெடிமருந்து பதிவேட்டை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பேரணியில் பயன்படுத்தப்பட்ட…

ஜூலை 30, 2026

புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் அக்னிவீர் ராணுவ முகாம்

புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 1…

ஜூலை 30, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…

ஜூலை 30, 2026

அமித் ஷா நாடாளுமன்றம் வராதது ஏன்? கார்கே கேள்வி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) பேரணியில் போலீசார்…

ஜூலை 30, 2026

You Might Also Like

திருப்பூர் சாலை விபத்து நடந்த பகுதி
தமிழ்நாடு

திருப்பூரில் லாரி மோதி கணவன்-மனைவி பலி: போலீசார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அதிவேக கனரக லாரி ஸ்கூட்டர் மீது மோதியதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 Min Read
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தும் பெற்றோர்கள்
தமிழ்நாடு

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 22ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் 2004ல் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 22ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. பெற்றோர்கள் கண்ணீர் மல்க…

2 Min Read
தமிழ்நாடு

பைக் டாக்சி சேவை: விதிகள் எப்போது? மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

மாநிலம் முழுவதும் கட்டுப்பாடின்றி இயங்கும் பைக் டாக்சி சேவையை ஒழுங்குபடுத்தும் விதிகள் எப்போது அமல்படுத்தப்படும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: அரசு பஸ் மீது லாரி மோதி 5 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?