MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆட்சியை கலைக்க வேண்டுமா? மக்களே கலைப்பார்கள் – உதயநிதி ஸ்டாலின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆட்சியை கலைக்க வேண்டுமா? மக்களே கலைப்பார்கள் – உதயநிதி ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆட்சியை கலைக்க வேண்டுமா? மக்களே கலைப்பார்கள் – உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு

ஆட்சியை கலைக்க வேண்டுமா? மக்களே கலைப்பார்கள் – உதயநிதி ஸ்டாலின்

Admin
Last updated: ஜூலை 6, 2026 7:51 காலை
Admin
Share
திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்
திமுக நிர்வாகிகளுக்கான பாராட்டு விழாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
SHARE

சென்னை அடையாறு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் மன்றம் கலையரங்கத்தில், சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் மாதம் முழுவதும் கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திய திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 'தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அண்ணா அறிவாலயத்திலும், எனது இல்லத்திலும் கழக நிர்வாகிகளை தினமும் காலை, மாலை சந்தித்து வருகிறேன். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நான் கலந்து கொள்ளும் முதல் கட்சிக் கூட்டம் இதுதான். நாம் அனைவரும் கலைஞரின் உடன்பிறப்புகள். நாம் என்றைக்கும் மக்களோடு இருப்போம். வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும் வீதிக்கு வந்து மக்களுக்காக போராடுபவர்கள்தான் கலைஞரின் தொண்டர்கள். வெற்றி பெற்றபோது தலைக்கனம் அடைந்ததும் இல்லை, தோல்வி அடைந்தபோது வீட்டுக்குள் முடங்கியதும் இல்லை. என்றும் மக்கள் பணிக்கே முக்கியத்துவம் கொடுப்போம். அதைத்தான் கலைஞர் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

நாம் பார்க்காத வெற்றியும் இல்லை பார்க்காத தோல்வியும் இல்லை. அதிமுகவை பாதியாக உடைத்துவிட்டார்கள். ஆனால் எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது. சோபா மாடல் ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ளன. ஆளுங்கட்சியைவிட திமுக எதிர்க்கட்சியாகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவை தொட முடிகிறது. ஆனால் திமுகவை மட்டும் தொட முடியவில்லை என்பதால் ஆளுங்கட்சியினர் பொய் வழக்குகள் போடுகின்றனர்.

'ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்துவிட்டோம். ரீல்ஸ் மூலமே ஆட்சியை நடத்தலாம் என்று நினைக்கிறார்கள். தமிழக வெற்றி கழகத் தலைவர் எதற்கெடுத்தாலும் ரீல்ஸ்தான் வெளியிட்டு வருகிறார். அவர்கள் எந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்களோ, அந்தத் தொகுதிக்குக்கூட செல்லாமல் வேறு தொகுதிக்குச் சென்று நன்றி தெரிவிக்கிறார்கள். தற்போது நடப்பது ரீல்ஸ் ஆட்சிதான். எங்கு பார்த்தாலும் மின்வெட்டு. எங்கு பார்த்தாலும் பாலியல் குற்றச்சாட்டுகள்.

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் சேப்பாக்கம் மைதானத்தில் மாத்திரையை பொடியாக்கி பயன்படுத்துகிறார். அது என்ன என்று கேட்டால், குழந்தைக்கான மாத்திரை என்று கூறுகிறார். அந்த அமைச்சர் எதை பொடியாக்கினார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் கண்கூடாக பார்த்துள்ளனர். தினமும் காலையில் எழுந்தவுடன் திமுக ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள். நாங்கள் ஏன் ஆட்சியைக் கலைக்க வேண்டும்? மக்களே கலைத்து விடுவார்கள்.

சட்டப்பேரவையில் ஊழல் செய்தவர்களை விடமாட்டோம் என்று கூறிய முதலமைச்சரே, தற்போது ஊழல் செய்தவர்களைத் தனது கட்சிக்குள் அழைத்துக் கொண்டிருக்கிறார். சட்டப்பேரவையில் அவர் பேசும்போது, நாம் சட்டப்பேரவையில் இருக்கிறோமா? இல்லை திரையரங்கில் முதல் காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறோமா என்றே தெரியவில்லை. கடந்த தேர்தலில் யார் நமது உண்மையான எதிரி என்பது தெரியாமல் போய்விட்டது. ஆனால் இப்போது தெரிந்துவிட்டது. தேர்தலின் போது சாலையில் சென்று வாக்கு கேட்டோம்; ஆனால் வீட்டுக்குள் சென்று வாக்கு கேட்கத் தவறிவிட்டோம்.

நமது கூட்டணியில் இருந்தவர்கள் நமது வாக்குகளைப் பெற்று அமைச்சர்களாகிவிட்டனர். சோபாவை பிடுங்கிவிடுவார்கள் என்ற பயத்தால் அவர்கள் பேசாமல் இருக்கிறார்கள். நாங்கள் மிசாவையும், அவசரநிலையையும் பார்த்தவர்கள். திமுக தொண்டர்கள் எதற்கும் பயப்பட மாட்டார்கள். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். தோளோடு தோளாக நிற்பேன். சோபா மாடல் ஆட்சி செய்யும் தவறுகளை மக்களிடம் எடுத்துச் செல்வோம். தமிழ்நாட்டில் மீண்டும் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும்' என்று அவர் உரையாற்றினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKMK StalinOpposition LeaderTamil Nadu GovernmentUdhayanidhi Stalinஅதிமுகஉதயநிதி ஸ்டாலின்எதிர்க்கட்சி தலைவர்தமிழக அரசுதிமுகமு.க. ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வங்கி மேலாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதைக் குறிக்கும் செய்திப் படம் தனியார் வங்கியில் ரூ.80 லட்சம் மோசடி: வங்கி மேலாளர் உட்பட 7 பேர் கைது
Next Article ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் சிவ்தாஸ் மீனா ராஜினாமா: பரபரப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

அரசியல்

ஸ்டாலின் சொன்னதற்கும் திமுகவினர் பேசுவதற்கும் தொடர்பில்லை – பெ.சண்முகம்

தேர்தல் முடிவுகள் வெளியான மே 4 அன்று மு.க.ஸ்டாலின் சொன்னதற்கும், இன்று திமுக தலைவர்கள் பேசுவதற்கும் தொடர்பில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

3 Min Read
தமிழ்நாடு

5 ஆண்டு சட்டப்படிப்பு: விண்ணப்ப தேதிகள் வெளியீடு!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூன் 5 வரை ஆன்லைனில் பெறப்படும்.

1 Min Read
தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு பா.ஜ.க. மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி இரங்கல்

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு பா.ஜ.க. மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி இரங்கல். சிறு வயதில் 'பாக்யா' வார இதழை வாங்கிய அனுபவத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

1 Min Read
தமிழ்நாடு

அம்மோனியா கசிவு: உயிரிழந்தவர் உயிருடன்! ஆதார் மோசடி அம்பலம்

திருவள்ளூரில் அம்மோனியா கசிவு விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட பெண் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது ஆதார் அட்டை மூலம் போலியாக வேலைக்குச் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?