MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கருணாநிதியின் பேரன் நான்; எதற்கும் பயப்பட மாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கருணாநிதியின் பேரன் நான்; எதற்கும் பயப்பட மாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கருணாநிதியின் பேரன் நான்; எதற்கும் பயப்பட மாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு

கருணாநிதியின் பேரன் நான்; எதற்கும் பயப்பட மாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 5, 2026 6:54 காலை
Fernandez
Share
உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகிறார்.
SHARE

முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, தஞ்சை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், விடுதலையான பிறகு ஆவேசமாகப் பேசியுள்ளார். சென்னையில் கைது செய்யப்பட்டு, சாலை மார்க்கமாக தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சுமார் ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். பின்னர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

'திமுக ஆட்சியின்போது மேட்டூர் அணையில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் இதுவரை டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கர்நாடக அரசிடம் காவிரி நீரைப் பெற்றுக்கொள்ளும் தைரியம் தவெக அரசுக்கு இல்லை. தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் நான் பேசாத ஒரு விஷயத்தை எடிட் செய்து, சில விஷயங்களை அதில் சேர்த்துள்ளனர். நான் யாரையும் தவறாகப் பேசவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு ஆதரவாகவே பேசினேன். தவறான எண்ணத்தில் யாரையும் புண்படுத்தும் விதமாகவோ, தாழ்த்திப் பேசவோ எனக்கு எண்ணம் இல்லை. என்னுடைய பெற்றோர், குடும்பம் என்னை அப்படி வளர்க்கவில்லை. எனக்கு மனைவியும், பெண் குழந்தையும், தங்கையும் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தையும் எனது தாய், தந்தையாகப் பாவித்து பேசுகிறேன்.

இன்று சட்டமன்றம் கூடுகிறது. அங்கு மேகதாது அணை விவகாரம் குறித்து பேசுவார்கள் எனத் தெரிந்தும், நான் பேசாத விஷயத்தை பேசிவிட்டேன் என தேசிய ஊடகங்கள் வரை பேசி, பெரிய விஷயமாக ஆக்கியுள்ளனர். காவல்துறையினர் வந்து என்னைக் கைது செய்தனர். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். 'நான் கருணாநிதியின் பேரன், யாருக்கும் பயப்பட மாட்டேன்' என்று அவர்களிடம் கூறினேன். ஆனால், நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறினர். ஒரு தேசவிரோதியைக் கூட்டிச் செல்வது போல சென்னையிலிருந்து என்னை அழைத்து வந்தனர். தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் செங்கிப்பட்டியில் வைத்து, விசாரணை என்ற பெயரில் பல கேள்விகளைக் கேட்டுவிட்டு என்னை அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன். பொய் வழக்கு போட்டு என்னை அச்சுறுத்தலாம் என நினைத்தார்கள்.

என்னுடைய கைதை கண்டித்து திமுக தொண்டர்கள், உடன்பிறப்புகள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும் பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். நான் பேசியதை முழுமையாகக் கேட்காமல், ஆராயாமல் தவறாகப் பேசிவிட்டேன் என சில தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அது எனக்கு வருத்தமாக உள்ளது. நான் தவறாகப் பேசவில்லை; விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக இந்த தரம்கெட்ட அரசு என்னை கைது செய்துள்ளது. நான் மீண்டும் சொல்கிறேன். இந்த கைதுக்கு நான் கூச்சப்பட மாட்டேன். நான் மீண்டும் 100 முறை பேசுவேன்.

இரட்டை அர்த்தத்தில் பேசி உள்ளேன் என்று கூறுகிறார்கள். நான் இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை. ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன். இந்த முதல்வருக்கு தமிழ்நாடு வரலாறு, திமுக வரலாறு தெரியவில்லை. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நிச்சயம் பதில் தருவார்கள். நாங்கள் நாளை சட்டமன்றம் செல்கிறோம். எங்கள் தலைவர் எங்களுக்கு உரிய அறிவுரையை கூறுவார்' என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:உதயநிதி ஸ்டாலின்கருணாநிதிகாவிரி நீர்தஞ்சைதிமுகத்ரிஷாமேட்டூர் அணைவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தமிழக அரசு அதிகாரிகள் பொது இடங்களில் புகைப்பிடித்தல் குறித்த சட்டத்தை பரிசீலிக்கும் கூட்டம் பொது இடங்களில் புகைப்பிடித்தால் சிறை: தமிழக அரசு பரிசீலனை
Next Article பல்வேறு நோய்களை குணப்படுத்தும் கொத்தமல்லி குடிநீர் கொத்தமல்லி குடிநீர்: பல்வேறு நோய்களை குணப்படுத்தும் அற்புத பானம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகள்

கேரளா வெள்ளம்: 26 பேர் உயிரிழப்பு, அரசு அறிவித்த நிவாரணம்

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 26 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு…

ஆகஸ்ட் 5, 2026

13 ஆண்டுகளுக்குப் பிறகு திருடிய பெண் கைது: நகை, பணம் பறிமுதல்

13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நகை, பணத்…

ஆகஸ்ட் 5, 2026

மும்பையில் கனமழை: மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

மும்பையில் கனமழையைத் தொடர்ந்து கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளது.…

ஆகஸ்ட் 5, 2026

ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவி சிவபக்தர்களை வரவேற்கும் உ.பி. அரசு

உத்தர பிரதேசத்தில் ஆகஸ்ட் 9, 10 தேதிகளில்…

ஆகஸ்ட் 5, 2026

பிரசாந்த் கிஷோருக்கு ரூ.198 கோடி சொத்து

பிஹார் மாநிலம் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்…

ஆகஸ்ட் 5, 2026

You Might Also Like

சென்னையில் சதுப்பு நிலத்தில் கவிழ்ந்து கிடக்கும் அரசு பேருந்து
தமிழ்நாடு

சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பயணிகள் காயம்

சென்னையில் அடையாறில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சதுப்பு நிலத்தில் கவிழ்ந்ததில் 15 பயணிகள் காயமடைந்தனர். செம்மஞ்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு…

2 Min Read
தமிழ்நாடு

மீண்டும் 2 அணிகளாக உடைந்த அதிமுக: இபிஎஸ்க்கு 17… வேலுமணிக்கு 30 – விரைவில் விஜய்யுடன் சந்திப்பு?

நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், எடப்பாடி தலைமை மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டது. இதன் விளைவாக…

1 Min Read
தமிழ்நாடு

மாற்றங்கள் அதிரடி! தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் இடமாற்றம் – முக்கிய நியமனங்கள்!

தமிழகத்தில் 17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையராக டாக்டர் ஜி.எஸ். சமீரன் நியமனம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

1 Min Read
திமுக துணைப் பொதுச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

திமுக எம்எல்ஏக்கள் கைது: தவெக அரசு மீது உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக சட்டமன்ற உறுப்பினர்களை குறிவைத்து கைது செய்வதையே தவெக அரசு தனது முக்கியப் பணியாகக் கொண்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகக்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?