இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ், தனது புகழ்பெற்ற Apache RR 310 மற்றும் Apache RTR 310 பைக்குகளின் புதிய 'Black Diamond Editions' மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பதிப்புகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RTR 310 Black Diamond Edition பைக்கின் விலை ரூபாய் 2.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், RR 310 பைக்கின் விலை ரூபாய் 2.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இந்த இரண்டு பைக்குகளும் அதிநவீன எலக்ட்ரானிக்ஸ் வசதிகளுடன் வருகின்றன. ரைடர் அய்ட்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், ட்ராக்ஷன் கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல் மற்றும் ட்ராக் டார்க் கன்ட்ரோல் போன்ற வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், 5 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மூலம் அனைத்து தகவல்களையும் எளிதாக அறியலாம்.
Apache RR 310 பைக்கில் 312.2 சிசி லிக்யூட் கூல்ட், ரிவர்ஸ் இன்சிலிண்ட் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 38 பிஎஸ் ஆற்றலையும், 9800 ஆர்பிஎம்-ல் 29 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இதில் 6 கியர்பாக்ஸ் வசதி உள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 164 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. வெறும் 2.82 வினாடிகளில் 0-60 கி.மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
Apache RTR 310 பைக்கில் 312.12 சிசி லிக்யூட் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், எலக்ட்ரானிக் த்ரோட்டல் கன்ட்ரோல் வசதியுடன் வருகிறது. இது 35.6 பிஎஸ் ஆற்றலையும், 9700 ஆர்பிஎம்-ல் 28.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த பைக் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. 0-60 கி.மீட்டர் வேகத்தை 2.81 வினாடிகளில் எட்டும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 810 மி.மீட்டர் ஆகும்.
RR 310 பைக்கில் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், இதன் எடை 174 கிலோ ஆகும். 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இதில் உள்ளது. RTR 310 பைக்கிலும் 17 இன்ச் சக்கரங்கள் உள்ளன. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மி.மீட்டர் மற்றும் எடை 169 கிலோ ஆகும். டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் இரு பைக்குகளிலும் வழங்கப்பட்டுள்ளது. இருக்கை உயரம் 800 மி.மீட்டர் ஆகும்.
தொடர்ந்து வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலும், போட்டி நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையிலும் புதிய மாடல்களையும், சிறப்பு எடிஷன்களையும் டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. ஸ்போர்ட்டியான மற்றும் வசீகரமான தோற்றத்தில் வந்துள்ள இந்த புதிய Apache Black Diamond Editions பைக்குகள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என டிவிஎஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.