த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை 2 கோடியை தாண்டியது!

நடிகர் விஜய் கடந்த 2024-ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியதன் பேரில், நவீன செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கை 2 கோடியை கடந்துள்ளது.

தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட கட்சிகளிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதல் கட்சியாக த.வெ.க. உருவெடுத்துள்ளது. நடிகர் விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி த.வெ.க. கட்சியை தொடங்கினார்.

கடந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட த.வெ.க., 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 34.92 சதவீத வாக்குகளைப் பெற்று தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பாரம்பரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த மே 10-ந்தேதி விஜய் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில், த.வெ.க.வின் உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 2 கோடியை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version