MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது: டி.ஆர்.பி. ராஜா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது: டி.ஆர்.பி. ராஜா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது: டி.ஆர்.பி. ராஜா

அரசியல்

முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது: டி.ஆர்.பி. ராஜா

Admin
Last updated: ஜூன் 23, 2026 7:11 மணி
Admin
Share
SHARE

முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது என்பதில் எங்கள் தலைவர் தலைமையிலான அரசும், அதில் அமைச்சராக இருந்த நானும் உறுதியாக இருந்தோம் என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: ‘த.வெ.க. அரசு பச்சையாகப் பொய் சொல்கிறது. தொழில் முதலீடுகள் என்றால் என்ன என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு பேசலாம். தி.மு.க. ஆட்சி மீது பழிபோடுவதாக நினைத்து, மாநிலத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க த.வெ.க. அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால் தொழில் துறையினர் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர். முந்தைய ஆட்சிக் காலத்தில் ரூ.3 லட்சம் கோடி முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு சிறுபிள்ளைத்தனமான, பொருளாதாரம் மற்றும் தொழில் முதலீடு ஊக்குவிப்பு குறித்த அடிப்படைப் புரிதல் இல்லாத பச்சைப் பொய். செமிகண்டக்டர் நிறுவன முதலீடுகள் தமிழ்நாட்டிலிருந்து பறிக்கப்பட்டவை என்பதை முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார மேடையிலேயே பகிரங்கமாகக் குற்றச்சாட்டாக வைத்தார்.’

மேலும் அவர், ‘டொயோட்டா வாகனத் துறை நிறுவனம் ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்துள்ளது. ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலீடு செய்யும் தங்களது இறுதி முடிவை தற்போதைய தவெக ஆட்சி அமைந்த பிறகுதான் அறிவித்துள்ளது. என்னால் இவர்கள் சொல்லும் எல்லா பொய்களுக்கும் புள்ளிவிவரங்களோடு பதில் அளிக்க முடியும். முதலீட்டு ஊக்குவிப்பைச் சுற்றியுள்ள அற்ப அரசியல் தாக்குதல்கள் மாநிலத்திற்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். எனது பதவிக் காலம் முழுவதும் முதலீடுகள் தொடர்பாக பல தரப்பிலிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டேன். ஆனால் எந்த முதலீட்டாளரையும் சிரமமான நிலைக்குத் தள்ளாதிருப்பதில் எப்போதும் கவனமாக இருந்தேன். நேற்று முதல், பல தொழில் துறையினர் எனக்கு தொலைபேசி மூலமாகப் பேசி, இந்த புதிய அரசின் பிரதிநிதிகள் விமர்சனங்களை கையாளும் விதமும், பொதுவெளியில் சேறு வாரி இறைக்கும் விதமும் குறித்து அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். உலகளாவிய முதலீட்டாளர்களின் முன்னிலையில் தமிழ்நாடு அவமானப்படுத்தப்படுகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.

‘மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநிலத்தை விட்டு முதலீடுகள் வெளியேறுவது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், முதலீடுகள் வெளியேறாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை விளக்க வேண்டியதே புதிய அரசின் கடமை. அதற்கு பதிலாக, முந்தைய அரசின் கடின உழைப்பின் மீது தங்களது பெயர் ஒட்டும் செயலில் அவர்கள் ஈடுபடக் கூடாது. 12.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மூலமாக 30 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவானது மாண்புமிகு திராவிட நாயகர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்பது உலகம் அறிந்த உண்மை. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பல இதர காரணங்களினால் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் லிஸ்டை வைத்துக்கொண்டு 3 லட்சம் கோடி இழப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டு. முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 3 லட்சம் கோடிக்கும் குறைவாகவே முதலீடுகள் வந்துள்ள நிலையில் எங்கள் ஆட்சிக் காலத்தில் ரூ.12.6 லட்சம் கோடி முதலீட்டு உறுதிமொழிகளையும், 36 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. இது 2016-21 காலகட்டத்தைவிட 5 மடங்காகும். திராவிடர் மாடல் அரசு தொடர்ந்திருந்தால் இம்முறை குறைந்தபட்சம் 25 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கும். இன்று இந்த அரசு சிறுபிள்ளைத்தனமான பேச்சுகளை குறைத்து தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த சாதனையை திராணியிருந்தால் முறியடித்து காட்டட்டும் பார்போம்.’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்டிஆர்பி ராஜாதமிழ்நாடு அரசுதிமுகமுதலீடுகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் முதல்வராவதை ஆதரித்தீர்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி
Next Article திருமணத்திற்கு முன்பே கொடூரம்: காதலனுடன் சேர்ந்து தொழிலதிபரை கொன்ற வருங்கால மனைவி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் பேசுகிறார்

அமித் ஷா பெயரை கேட்டாலே தீவிரவாதிகள் நடுங்குவர்: கிரண் ரிஜிஜு

மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின்…

ஆகஸ்ட் 8, 2026

கொண்டைக்கடலையில் பூச்சிமருந்து: தூக்கத்திலேயே இறந்த 2 மகள்கள்

விவசாயி மல்லேஷ் அறுவடை செய்த கொண்டைக்கடலையில் பூச்சிமருந்து…

ஆகஸ்ட் 8, 2026

வேலூர் விமான நிலையம் 6 மாதங்களில் திறப்பு: மத்திய மந்திரி உறுதி

வேலூர் விமான நிலையம் அடுத்த 6 மாதங்களில்…

ஆகஸ்ட் 8, 2026

அமித் ஷாவின் பெயரை கேட்டால் பயங்கரவாதிகளே நடுங்குவர்: கிரண் ரிஜிஜூ

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, 'அமித் ஷாவின்…

ஆகஸ்ட் 8, 2026

உயரமான மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த வாலிபர்

சென்னையில், உயரமான மின்கம்பத்தில் ஏறி இளைஞர் ஒருவர்…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

அரசியல்

மேகேதாட்டு அணை: சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவு

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையும் விவசாயிகளின் நலனையும் பாதுகாக்க சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சீராய்வு…

1 Min Read
திமுக அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கவுன்சிலர் பாபு
தமிழ்நாடு

திமுக அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கவுன்சிலர் பாபு!

கோவை மாநகராட்சி 22-வது வார்டு திமுக கவுன்சிலர் பாபு, இளைஞர்களுக்கும் சாமானியர்களுக்கும் இடமில்லை எனக் கூறி அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

2 Min Read
அரசியல்

வெளிநாட்டு வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் விசாரணை – திமுக எம்பி தகவல்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. திமுக எம்பி வில்சன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

1 Min Read
அரசியல்

பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை: ஸ்டாலின் கண்டனம்

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் மத்திய அரசின்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?