MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மின்வெட்டு புகார்: மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டுக்கு தொ.மு.ச. மறுப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மின்வெட்டு புகார்: மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டுக்கு தொ.மு.ச. மறுப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மின்வெட்டு புகார்: மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டுக்கு தொ.மு.ச. மறுப்பு

தமிழ்நாடு

மின்வெட்டு புகார்: மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டுக்கு தொ.மு.ச. மறுப்பு

Admin
Last updated: மே 26, 2026 8:08 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாடு மின்சார வாரிய தொ.மு.ச. பொதுச்செயலாளர் பா.மணிமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகால கழக ஆட்சியில் மின்சார வாரியத்திற்கு பல நன்மைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சியின் கீழ், சுமார் 3 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரம் நுகர்வோர்களின் உச்சபட்ச மின் தேவையாக 27,307 மெகாவாட் மின்சாரத்தை எவ்வித தடையும் இன்றி வழங்கி, தமிழ்நாட்டு மக்களின் மின்தேவையை முழுமையாக பூர்த்தி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகால தி.மு.கழக ஆட்சியில், தேவைக்கேற்ப துணைமின்நிலையங்கள் அதிகரிக்கப்பட்டும், மின்விநியோகக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டும், புதிய மின்மாற்றிகள் மற்றும் HT, LT லைன்கள் நிறுவப்பட்டும் மின்நுகர்வோருக்கு எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாதவாறு சிறந்த நிர்வாகத் திறமையுடன் கையாளப்பட்டதே தடையில்லா மின்சாரம் வழங்க காரணமென அவர் கூறியுள்ளார். மேலும், 2021-ல் 'மின்னகம்' என்ற பிரிவை ஏற்படுத்தி, பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து, புதிய மின்இணைப்பு, பெயர்மாற்றம் போன்ற சேவைகளை சிறப்பாக வழங்கியதை, ஏதோ இந்த அரசு வந்த பிறகுதான் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது போல ஒரு அமைச்சர் பேசுவது வடிகட்டிய பொய் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்போதைய சூழலில், கடந்த 29.04.2026 அன்று தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவை 21,307 மெகாவாட் ஆகவும், உச்சபட்ச மின் நுகர்வு 471.456 மில்லியன் யூனிட் ஆகவும் பதிவாகியுள்ளது. கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கம் 108 டிகிரி வரை இருந்ததால் மின் நுகர்வு உயர்ந்து, மின்விநியோகத்தில் கடும் இடர்பாடுகள் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வீதிக்கு வந்து கண்டனங்களை தெரிவித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் இதுபோன்று மின்விநியோகத்தில் இடர்பாடுகள் ஏற்படும்போது, அனைத்து மின்தொழிற்சங்க நிர்வாகிகளையும் கலந்து ஆலோசித்து தீர்வு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோடை காலத்தில் தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை எங்கிருந்து பெறுவது என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகளுடனும், தொழிற்சங்கங்களுடனும் விவாதித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய மின்சாரத்துறை அமைச்சர், கடந்த கால தி.மு.க ஆட்சியின் மீது பழிபோட்டு தப்பிக்க முயற்சிப்பதாக பா.மணிமாறன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஏற்பட போகும் கூடுதல் மின் தேவைக்காக எவ்வித முன்நடவடிக்கை எடுக்காமல், துறைரீதியாக போதுமான புரிதல் பெறாத அமைச்சரின் கீழ் இயங்கும் மின்வாரியம் இவ்வளவு மோசமாக முன்னெப்போதும் இருந்ததில்லை என்றும், இந்த மின்வெட்டு அமைச்சரின் தகுதியின்மையை காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தி.மு.க ஆட்சியின் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு, இனிமேலாவது துறைரீதியாக அதிகாரிகளுடனும், தொழிற்சங்கங்களுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தி, விவாதித்து மின் தட்டுப்பாட்டை நீக்கி மக்களை காப்பாற்ற இந்த அரசு முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:power cutTamil Nadu Electricity Boardதமிழ்நாடு மின்சார வாரியம்தி.மு.கதொ.மு.ச.மின்துறை அமைச்சர்மின்வெட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெக ஆட்சி திமுகவின் நீட்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
Next Article 13 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிபிஎஸ்இ லோகோ அல்லது பள்ளி வகுப்பறை காட்சி

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழிக்கான உள் மதிப்பீட்டுத்…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

டாஸ்மாக்: பாட்டில் கூடுதல் விலைக்கு வழக்குப்பதிவு – அமைச்சர் அதிரடி!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதல் விலை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்றும் அமைச்சர் க.…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் 3 மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னையில் குழாய் இணைப்புப் பணிகளுக்காக, இன்று 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்புக்கு குடிநீர் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

காவிரி நதி இரு மாநில மக்களின் வாழ்வாதாரம்: செல்வப்பெருந்தகை

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு புதிய அணைகளைக் கட்டுவதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்துள்ளார். இது இரு மாநில மக்களின் வாழ்வாதார நதி என்றும்,…

1 Min Read
தமிழ்நாடு

இயற்கை உபாதைக்காக பஸ் ஜன்னலை உடைத்த பெண்: போக்குவரத்து கழகத்திற்கு ரூ.28,000 இழப்பீடு!

கேரளாவில் அரசு பேருந்தில் பயணம் செய்த பெண், இயற்கை உபாதை காரணமாக பேருந்தை நிறுத்தக் கோரியபோது மறுக்கப்பட்டதால், ஜன்னல் கண்ணாடியை சுத்தியலால் உடைத்து ரூ.28,000 இழப்பீடு செலுத்தினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?