MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் ரத்து: முக்கிய அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் ரத்து: முக்கிய அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் ரத்து: முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு

மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் ரத்து: முக்கிய அறிவிப்பு

Fernandez
Last updated: ஜூலை 27, 2026 11:31 காலை
Fernandez
Share
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது
மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் ரத்து
SHARE

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் நாளை (28.07.2026) நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், 'நீட்' மற்றும் 'நெக்ஸ்ட்' தேர்வுகளில் இருந்து மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ மற்றும் பல்மருத்துவ இடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள 100 விழுக்காடு மருத்துவ இடங்களுக்கான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், ஏழை மாணவர்களின் கல்வி, விடுதி, உணவு கட்டணங்களை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்றும், வட்டியில்லா கல்விக் கடன்களை எந்த நிபந்தனையுமின்றி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ – பல்மருத்துவ இடங்களில் உள் ஒதுக்கீட்டை வழங்க NMC Act மற்றும் NDC Act-ல் திருத்தம் செய்ய வேண்டும் என்றும், தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களிலும் கம்யூனிட்டி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மாப் அப் மற்றும் ஸ்ட்ரே கவுன்சிலிங்கை ரத்து செய்ய வேண்டும், கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தை கடுமையாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும், கட்டாய நன்கொடை மற்றும் கூடுதல் கட்டணங்களை வசூல் செய்யும் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களை எந்த இழப்பீடும் இன்றி அரசுடமையாக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மருத்துவக்கல்வி மற்றும் அரசு மருத்துவமனைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டும், மாவட்ட அரசு மருத்துவமனைகளை தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கி, பொது தனியார் பங்களிப்பு முறையில் (PPP model) மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி, விடுதி மற்றும் உணவுக் கட்டணத்திற்கான நிதியை, இன்றைய விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு தமிழ்நாடு அரசு உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், மாணவர்கள் நல வாரியம், பாதுகாப்பு குழு, மாணவர் மன்றங்களை அமைத்திட வேண்டும். ICC உட்புகார் குழுக்களையும் (விஷாகா கமிட்டிகளை) அமைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து எட்டு மணி நேரத்திற்கு மேல் பணி வழங்கக் கூடாது என்றும், அவர்களின் பயிற்சி கால உதவி ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் கோரப்பட்டது. சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக ஒரு கல்லூரி பேருந்தை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Medical CollegeNEETProtest Cancelledஆர்ப்பாட்டம் ரத்துதமிழ்நாடு அரசுநீட் தேர்வுமருத்துவக் கல்லூரிமாணவர் நலன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சென்னை ஐ.ஐ.டி வளாகம் சென்னை ஐ.ஐ.டி-யில் வேலைவாய்ப்பு: 6 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
Next Article சென்னையில் தங்கம் விலை உயர்வு குறித்த செய்தி சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்வு: வெள்ளி விலை மாறாமல் உள்ளது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்குவாஷ் வீரர் அபய் சிங்கிற்கு வாழ்த்து தெரிவிக்கும் படம்
தமிழ்நாடு

ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற அபய் சிங்கிற்கு ரூ.50 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற ஸ்குவாஷ் வீரர் அபய் சிங்கிற்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1 Min Read
தமிழக அரசு டாஸ்மாக் பார்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

பார்களில் மது விற்பனைக்கு தமிழக அரசு கட்டுப்பாடு

தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் மதுபான பார்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பார்களில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

திருநெல்வேலி: நாளை மறுநாள் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில், சீதபற்பநல்லூர் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளுக்காக வரும் திங்கள்கிழமை (18.5.2026) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை குறிப்பிட்ட…

1 Min Read
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மனைவி சென்னம்மா அவர்களின் புகைப்படம்
தமிழ்நாடு

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மனைவி சென்னம்மா காலமானார்

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மனைவியும், 87 வயதான சென்னம்மா அவர்கள் இன்று (ஜூலை 18) காலமானார். சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?