MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மின்சார வாரிய தேர்வில் அநீதி – அண்ணாமலை கண்டனம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மின்சார வாரிய தேர்வில் அநீதி – அண்ணாமலை கண்டனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மின்சார வாரிய தேர்வில் அநீதி – அண்ணாமலை கண்டனம்!

தமிழ்நாடு

மின்சார வாரிய தேர்வில் அநீதி – அண்ணாமலை கண்டனம்!

Admin
Last updated: ஜூன் 29, 2026 2:34 மணி
Admin
Share
SHARE

கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உதவி மின் பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் 2022 ஆம் ஆண்டு நிர்வாகக் காரணங்களைக் கூறி தேர்வு ரத்து செய்யப்பட்டதாக TANGEDCO அறிவித்தது. TN Act No. 14 of 2022, TNPSC (Additional Functions) சட்டத்தின்படி TNPSC மூலம் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், மின்பகிர்மானக் கழக உதவி மின்பொறியாளர் பணி நியமனம் தொடர்பாக 2025 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், கடந்த 26.07.2024 அன்று பொதுப்பணித்துறை (PWD) உதவி மின் பொறியாளர் காலிப் பணியிட நியமனங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ரத்து செய்யப்பட்ட TNPDCL உதவி மின்பொறியாளர் காலிப் பணியிடங்களில் 195 இடங்கள் பொதுப்பணித்துறை சார்பாக நடைபெற்ற தேர்வு முடிவுகள் மூலம் நிரப்பப்படும் என திடீரென அறிவிக்கப்பட்டது. இதற்கு வயது வரம்பும் 32 என நிர்ணயிக்கப்பட்டது. இது 2020 முதல் காத்திருந்த இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என 'வீ த லீடர்ஸ்' நிறுவனர் அண்ணாமலை தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் நிர்வாகக் குளறுபடியால் தகுதியான இளைஞர்களுக்கு வயது வரம்பில் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 13.09.2021 அன்று வெளியான அரசாணை எண் 91-ன் படி, கொரோனா பெருந்தொற்றால் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானால் வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் தளர்த்தப்படும். ஆனால், மின்பகிர்மானக் கழகத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது 04.07.2022 அன்றுதான். ஏற்கனவே 2020 முதல் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், வெறும் இரண்டு ஆண்டுகள் தளர்வு எப்படிப் பொருத்தமானதாக அமையும்? வயது வரம்பில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மின்பகிர்மான கழக உதவி மின்பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான TNPSC தேர்வு முடிவுகள் 23.01.2026 அன்று வெளியாகின. பணி நியமனங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் முன்பாக, வயது வரம்பைக் காரணம் காட்டி நல்ல மதிப்பெண்கள் பெற்ற இளைஞர்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோது பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசாணை எண் 231 மூலம் தமிழக அரசு சிறப்புத் தளர்வு வழங்கியுள்ளது. அதேபோல, 2013 ஆம் ஆண்டு இதே போன்று நீண்ட கால பணியிட நியமனங்கள் நடைபெறாத நிலையில், விதி 91(h) மூலம் ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை தமிழக மின்சார வாரியம் வழங்கியிருந்தது. தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கும் இதேபோன்று வயது வரம்பில் தளர்வு கொடுத்திருக்க வேண்டும். நிர்வாகத் தவறுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நிவாரணம் மறுப்பது நியாயமல்ல. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, TNPDCL மற்றும் TNPSC நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். நிர்வாகத் தாமதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒருமுறை சிறப்பு வயதுத் தளர்வு வழங்க வேண்டும். தேர்வு நடைமுறை தொடங்கிய பிறகு கூடுதல் அறிவிப்பு என்ற பெயரில் பணியிடங்களையோ, விதிகளையோ மாற்றும் முறைகேடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:TNPDCLTNPSCஅண்ணாமலைமின்சார வாரியம்வயது வரம்புவேலைவாய்ப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பென் ஸ்டோக்ஸ் ஓய்வு: சர்வதேச கிரிக்கெட்டில் அவர் செய்த 3 மாஸ் சம்பவங்கள்!
Next Article புனே சிறுமி கொலை: 55 நாட்களில் தூக்கு தண்டனை – விரைந்த நீதி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதி!

உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மீது சாலை அமைக்காமலே பணம் எடுத்ததாக புகார் எழுந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகாத நிலையில்…

1 Min Read
தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை கடற்கரை தூய்மைப் பணியை தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு

கடற்கரை தூய்மைப் பணியை தொடங்கி வைத்த அண்ணாமலை

‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் சார்பாக கடற்கரை தூய்மைப் பணி தொடங்கப்பட்டது. தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் இந்த முன்னெடுப்பை தொடங்கி வைத்தார்.

2 Min Read
சேலம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம்
கல்வி & வேலைவாய்ப்பு

சேலம் சமூக நலத்துறை வேலைவாய்ப்பு: 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

சேலம் மாவட்ட சமூக நலத்துறையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 4 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

1 Min Read
நடிகரும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய்
தமிழ்நாடு

அப்பா செய்த வரலாற்று புரட்சி – ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி

நடிகரும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது தந்தை விஜய் முதலமைச்சர் ஆனது ஒரு வரலாற்றுப் புரட்சி என்றும், அது தனக்கும் குடும்பத்தினருக்கும் கூடுதல் பொறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?