MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நோ பால் என வாதம்: உஸ்மான் தாரிக் பந்துவீச்சை எதிர்த்த டிம் டேவிட்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நோ பால் என வாதம்: உஸ்மான் தாரிக் பந்துவீச்சை எதிர்த்த டிம் டேவிட்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - நோ பால் என வாதம்: உஸ்மான் தாரிக் பந்துவீச்சை எதிர்த்த டிம் டேவிட்

விளையாட்டு

நோ பால் என வாதம்: உஸ்மான் தாரிக் பந்துவீச்சை எதிர்த்த டிம் டேவிட்

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 26, 2026 8:23 காலை
Sri Prem Kumar R
Share
கிரிக்கெட் வீரர் டிம் டேவிட் கள நடுவரிடம் முறையிடும் காட்சி
பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு பாணி குறித்து நடுவரிடம் முறையிடும் டிம் டேவிட்
SHARE

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் டி20 கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு பாணி விதிமீறல் என ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டிம் டேவிட் நடுவரிடம் முறையிட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் டிரென்ட் ராக்கெட்ஸ் மற்றும் பிர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் டிரென்ட் ராக்கெட்ஸ் அணிக்காக விளையாடிய டிம் டேவிட், வெறும் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பிர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான் தாரிக், ஓடிவந்து திடீரென சற்று நின்று, கையை பக்கவாட்டில் திருப்பி பந்துவீசும் ஒரு வித்தியாசமான பாணியைக் கொண்டவர். அவர் வீசிய பந்தில் ஆட்டமிழந்த டிம் டேவிட், உஸ்மான் தாரிக் பந்தை முறையாக வீசவில்லை என்றும், அதை நோ-பால் என அறிவிக்க வேண்டும் என்றும் உடனடியாக கள நடுவரிடம் புகார் அளித்தார்.

மேலும், நடுவரின் முடிவை எதிர்த்து ரிவ்யூ கேட்கவும் டிம் டேவிட் முயன்றார். ஆனால் அவரது கோரிக்கையை நடுவர் ஏற்கவில்லை. இதனால் மிகுந்த அதிருப்தியுடன் டிம் டேவிட் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே இருவேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர், உஸ்மான் தாரிக் தனது கையை அளவுக்கு அதிகமாக மடித்து பந்தை எறிவதாகவும், நடுவர்கள் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மறுபுறம், பேட்டிங் செய்யும்போது திணறும் வீரர்கள், பந்துவீச்சாளரின் பாணியைக் குறை கூறுவது வழக்கமாகிவிட்டதாகக் கூறி, உஸ்மான் தாரிக்கிற்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் விதிமுறை 21.2 இன் படி, பந்துவீச்சாளர் கையை வீசும்போது முழங்கை மூட்டை அளவுக்கு அதிகமாக நிமிர்த்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், உஸ்மான் தாரிக்கின் இந்த பந்துவீச்சு முறையை பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகாடமி ஏற்கனவே இரண்டு முறை சோதனை செய்து, அவர் விதிகளுக்கு உட்பட்டே பந்து வீசுவதாக உறுதி செய்துள்ளது. ஐசிசி விதிப்படி 15 டிகிரி வரை கையை மடக்கலாம் என்றும், உஸ்மான் தாரிக் அதற்கு உள்ளேயே கையை மடக்குகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் இதற்கு முன்னர் உஸ்மான் தாரிக்கிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketThe HundredTim DavidUsman Tariqஉஸ்மான் தாரிக்கிரிக்கெட்டிம் டேவிட்தி ஹண்ட்ரட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரியங்கா காந்தி காங்கிரஸ் எம்.பி. மத்திய அமைச்சர் பதவி விலகல் இளைஞர்களுக்கு கிடைத்த வெற்றி: பிரியங்கா காந்தி
Next Article டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்ற காட்சி ஜந்தர் மந்தரில் கல்வீச்சு: 3 போலீஸ் அதிகாரிகள் காயம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு இல்லை: பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என…

நவம்பர் 14, 2026

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின்…

நவம்பர் 13, 2026

மோடியுடன் விவாதிக்க தயார் – ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர்…

நவம்பர் 13, 2026

வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெற…

நவம்பர் 13, 2026

பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா

இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம்…

நவம்பர் 13, 2026

You Might Also Like

விளையாட்டு

MLC 2026: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி.. முதலிடம் பிடித்தது TSK!

எம்எல்சி 2026 தொடரில், எம்ஐ நியூயார்க் அணியை வீழ்த்தி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. குறைந்த ரன்களில் முடிந்த போட்டி.

2 Min Read
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பந்துவீசும் காட்சி
விளையாட்டு

இந்தியாவின் அதிரடி பந்துவீச்சு: ஜிம்பாப்வே 125 ரன்களில் சுருண்டது!

ஹராரேவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்: ஜிம்பாப்வே 125 ரன்களில் சுருண்டது. இந்திய அணி வெற்றி பெற 126 ரன்கள் இலக்கு.

2 Min Read
விளையாட்டு

IPL 2026: தனித்துவமான பேட்டர்ஸ் பட்டியலில் இணைந்த லக்னோ வீரர் மிட்செல் மார்ஷ்.. அண்ணனை போல் தம்பி

சென்னை: ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ்,முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார்.…

2 Min Read
தமிழக கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர்
விளையாட்டு

இங்கிலாந்து கவுண்டி தொடரில் தமிழக வீரர் சாய் கிஷோர் ஒப்பந்தம்

தமிழக வீரர் சாய் கிஷோர், இங்கிலாந்தின் குளோஸ்டர்ஷையர் கவுண்டி கிரிக்கெட் அணியுடன் ஆறு போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார். ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக வாய்ப்பு கிடைக்காத…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?