MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது

Admin
Last updated: மே 12, 2026 11:52 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளரான சந்திரநாத் ரத் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர்.

பிஹார் மாநிலம் பக்சர் பகுதியில் மயங்க் ராஜ் மிஸ்ரா, விக்கி மௌரியா ஆகிய இருவரும், உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் ராஜ் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டனர். கைதான ராஜ் சிங் மீது ஏற்கெனவே 15-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் விமானப் படை வீரரும், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளருமான சந்திரநாத் ரத், கடந்த மே 6-ஆம் தேதி இரவு தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மத்தியம்கிராம் பகுதியில் மர்ம நபர்களால் வழிமறித்துச் சுடப்பட்டார். சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் துரத்தி வரப்பட்ட அவரது காரை வழிமறித்த அந்தக் கும்பல், அவர் மீது ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டது.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்திரநாத் ரத்தின் காரை ஓட்டி வந்த புத்ததேவ் பேரா, மூன்று குண்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து பாஜக வெற்றி பெற்ற இரண்டே நாட்களில் இந்தக் கொலை சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனது உதவியாளர் என்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவர் கொல்லப்பட்டதாக சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டினார். பாஜக தலைவர்கள் இந்த கொலைக்கு திரிணமூல் காங்கிரஸே காரணம் என்று கூறி வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் திங்கள்கிழமை பாராசாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 13 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவர்கள் மூவரும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவர்களை ஏவிவிட்ட முக்கியக் குற்றவாளிகள் யார், கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்துத் தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு
Next Article நடிகை ரவீணா ரவிக்கு மலையாள இயக்குநருடன் திருமணம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகிறார்

உத்தவ் தாக்கரேவை விமர்சித்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

சொந்தக் கட்சிக்குள் ஆட்சி மாற்றத்தைத் தடுக்க முடியாத உத்தவ் தாக்கரே, மற்ற அரசுகள்…

அக்டோபர் 19, 2026

போலீஸ் வேடமிட்டு நகை வியாபாரியிடம் ரூ.1.3 கோடி பறித்த கும்பல் கைது

ஹைதராபாத்தில் போலீஸ் வேடமிட்டு நகை வியாபாரியிடம் ரூ.1.3…

அக்டோபர் 19, 2026

மத்திய பிரதேசத்தில் லாரி மோதி 14 பக்தர்கள் பலி: 40 பேர் காயம்

மத்திய பிரதேசத்தின் குவாலியர் அருகே ஷீதள மாதா…

அக்டோபர் 19, 2026

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் காயம், கிராமங்களுக்கு தீ வைப்பு

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச்…

அக்டோபர் 19, 2026

பிரதமர் மோடி, அமித் ஷா சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்: ராகுல் காந்தி

வாக்குப்பதிவு முறைகேடு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும்,…

அக்டோபர் 19, 2026

You Might Also Like

இந்தியா

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபை தேர்தலில்…

1 Min Read
உச்ச நீதிமன்ற வளாகம்
இந்தியா

மும்மொழிக் கொள்கையிலிருந்து 6-ம் வகுப்புக்கும் விலக்கு: உச்ச நீதிமன்றம்

நடப்பு கல்வியாண்டில் 3-வது மொழி கட்டாயம் என்பதிலிருந்து 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கும்படி சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
இந்தியா

நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு: ஓராண்டு சிறப்பு நடவடிக்கை தொடக்கம்

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் நோக்கில், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஓராண்டு சிறப்பு நடவடிக்கையை செப்டம்பர் மாதம் முதல் தொடங்குகிறது.

1 Min Read
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு: சமூக வலைதள கணக்கின் முகப்புப் படத்தை மாற்றிய பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் முதலாம் ஆண்டு நினைவை நாடு முழுவதும் உள்ள மக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகக் கொண்டாடி வருகின்றனர்.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?