தமிழகத்தில் குதிரை பேரத்தை முதலில் தொடங்கியது திமுகதான் என்று அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குதிரை பேரத்தை தமிழ்நாட்டில் முதலில் தொடங்கியது திமுகதான். அதற்கு உதாரணம் ராமகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன். குதிரை பேரத்திற்கு எப்படி பதில் சொல்ல வேண்டுமென்று பாடத்திட்டத்தில் வேறு விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் குதிரை பேரத்தை உருவாக்கிய திமுகவே அது குறித்து பேசலாமா? எங்களுக்கு அந்த அரசியல் இல்லை. வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக வெளியான தகவல் தவறு. எங்கள் ஆட்சி வலிமையானது என்பதால் குதிரை பேரம் பேச வேண்டிய அவசியமே இல்லை. மைனாரிட்டி அரசை நடத்தியது திமுகதான், தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே எடப்பாடி, திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார். இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாக அமையும். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்று நினைக்கும் ஒரே முதலமைச்சர் ஜோசப் விஜய்தான். தமிழ்நாட்டில் மாற்றங்கள் தேவை என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, முதலமைச்சர் விஜய் அரியணையில் அமர்ந்துள்ளார்" என்று கூறினார்.
You Might Also Like
நீலாங்கரையில் இருந்து சட்டப்பேரவைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் ஜோசப் விஜய்
சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து சட்டப்பேரவைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் புறப்பட்டார். சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்கும் நிகழ்வில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார். முதலமைச்சராக நேற்று பொறுப
0 Min Read
தொழில்நுட்ப கோளாறால் பாமணி ரயில் நடுவழியில் நின்றது: வாகன ஓட்டிகள் தவிப்பு
சென்னையில் ரெயில்வே கேட் வழியாகச் சென்ற 'பாமணி' ரயில், தொழில்நுட்பக் கோளாறால் நடுவழியில் நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
2 Min Read
இன்ஸ்டா ரீல்ஸ் போராளிகளை சமூகம் கொண்டாடுகிறது – உதயநிதி ஸ்டாலின்
தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டு உரிமைகளைப் பாதுகாக்க திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் ஒன்றிணைந்து செயல்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக திமுக…
2 Min Read
கேரளாவில் நிலச்சரிவு: 9 பேர் உயிரிழப்பு, 8 பேர் மாயம்
கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் 9 பேர் உயிரிழந்தனர். 8 பேர் மாயமாகி உள்ள நிலையில், 5,792 பேர் நிவாரண முகாம்களில் தங்க…
1 Min Read
