MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட வேண்டும் – திருமாவளவன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட வேண்டும் – திருமாவளவன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட வேண்டும் – திருமாவளவன்

தமிழ்நாடு

தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட வேண்டும் – திருமாவளவன்

Fernandez
Last updated: செப்டம்பர் 25, 2026 7:09 காலை
Fernandez
Share
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிடுகிறார்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்
SHARE

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ (SIR) நடவடிக்கைகளின்போது நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நாளிதழில் வெளியான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு மாறாகவும், சட்டவிரோதமாகவும் செயல்பட்டு தேர்தல் ஜனநாயகத்தையே சீர்குலைத்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 10 மாதங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர், 14 முறை முறையான ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளதாக நாளிதழ் செய்தி அம்பலப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தங்களது அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த உள்மோதலின் மையமாக 13 கோடி வாக்காளர்களின் பெயர்களைப் பாதிக்கும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) உள்ளது. புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவம் 6-ல் 'அங்கீகாரமற்ற, சட்டவிரோத மாற்றங்கள்' செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். மேலும், தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள் மூலம் வாக்காளர் பட்டியல் தரவுத்தளம் படிப்படியாக மையப்படுத்தப்படுவது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மையப்படுத்தப்பட்ட மென்பொருள், கள அளவில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களின் (ERO) முடிவுகளை மீறி செயல்படுவதால், தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவது தடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் அமைப்புகளை இவ்வாறு மையப்படுத்துவது, தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் பாரம்பரியமாகக் கொண்டிருந்த பரவலாக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பை வலுவிழக்கச் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அலுவலர்களின் அணுகலைக் கட்டுப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை தலைமை இயக்குநருக்கு சட்டரீதியான அதிகாரம் உள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. கோவாவில் ஏற்பட்ட மென்பொருள் பிரச்சினைகளால், உச்சநீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், வாக்களிக்கத் தகுதியுடைய 97 பேர் வாக்களிக்கும் உரிமையை இழந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

2023ஆம் ஆண்டின் சட்டம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருமித்த முடிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த உள்மோதல் அதன் அரசியலமைப்புச் செயல்பாடு குறித்த தீவிரமான கவலைகளை ஏற்படுத்துகிறது. இந்த ஆட்சேபனைகளின் நகல்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் மட்டுமே வெளிப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில் தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களே முடிவெடுக்கும் செயல்முறையிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மிகவும் கவலைக்குரியது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR நடவடிக்கைகள் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெளிவாகிறது.

SIR நடவடிக்கையின் அடிப்படையில் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்றும், அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்தல்களும் சட்டவிரோதமானவையே என்றும் அர்விந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கோருவதில் நியாயம் உள்ளது. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தாமாக முன்வந்து உடனடியாகப் பதவி விலக வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து SIR நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயிர்நாடியாக இருப்பது வாக்குரிமையும் தேர்தலும்தான். மக்களின் வாக்குரிமையையும் தேர்தல் ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Election CommissionGNESH KUMARSIR ActionsSIR நடவடிக்கைகள்Viduthalai Chiruthaigal Katchiஇந்தியத் தேர்தல் ஆணையம்ஞானேஷ்குமார்திருமாவளவன்தேர்தல் ஆணையம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article முதலமைச்சர் விஜய் தேர்தல் பரப்புரை முதலமைச்சர் விஜய்யின் மதுராந்தகம் பரப்புரை: 5000 பேருக்கு மட்டுமே அனுமதி
Next Article பல்வேறு வகையான மூலிகை டீ தயாரிப்பதற்கான பொருட்கள் வீட்டிலேயே மூலிகை டீ: ஆரோக்கியம் நிச்சயம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மண்ணிவாக்கம் ரயில்வே கேட்டில் தண்டவாளத்தில் சிக்கிய கார்

ரயில்வே கேட்டை கடக்க முயன்ற கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் ரயில்வே கேட்டில், ரயில் வரும்போது கேட்டை கடக்க முயன்ற…

செப்டம்பர் 25, 2026

காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு அவசியம்: நேபாள பிரதமர்

காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு…

செப்டம்பர் 25, 2026

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம்: சசி தரூர் வலியுறுத்தல்

கோவா வாக்காளர் பட்டியலில் இருந்து 97 பெயர்கள்…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ரத யாத்திரை பிரச்சாரத்தை தொடங்கினார் அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி…

செப்டம்பர் 25, 2026

கிரேட்டர் நொய்டா பேருந்து தீ விபத்து: 9 பேர் பரிதாப பலி

டெல்லியிலிருந்து மஹோபா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

ராமநாதபுரம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் பணம்
தமிழ்நாடு

ராமநாதபுரம்: ரூ.5 கோடி தங்கம், பணம் பறிமுதல்; பரபரப்பு வாக்குமூலம்

ராமநாதபுரம் அருகே காரில் கடத்த முயன்ற 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேரிடம் காவல்துறையினர் விசாரணை…

1 Min Read
தமிழ்நாடு

கோவை மருத்துவக் கல்லூரியில் திமுக பாடல்: வானதி சீனிவாசன் கண்டனம்

கோவை மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் திமுக பாடல் ஒலித்ததற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்விக்கூடங்களை அரசியல் மேடைகளாக மாற்றுவது சரியல்ல…

1 Min Read
தமிழ்நாடு

கணவனை தீர்த்து கட்டிய மனைவி: அதிர்ச்சி காரணம் வெளியானது

கணவனை கொலை செய்ய கூலிப்படையை ஏவி விட்ட மனைவி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
தமிழக வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்
தமிழ்நாடு

தமிழகத்தில் மதுபானங்கள் மீது புதிய வரி விதிப்பு: அரசு முடிவு

தமிழகத்தில் மதுபானங்கள் மீது 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீமை' என்ற புதிய வரியை விதிப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?