MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நம் அனைவருக்குமானதாக இருக்கும் – ஆதவ் அர்ஜுனா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நம் அனைவருக்குமானதாக இருக்கும் – ஆதவ் அர்ஜுனா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நம் அனைவருக்குமானதாக இருக்கும் – ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நம் அனைவருக்குமானதாக இருக்கும் – ஆதவ் அர்ஜுனா

Admin
Last updated: மே 11, 2026 6:48 மணி
Admin
Share
SHARE

தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு என்றும் தனித்துவ வரலாற்றுக்குச் சிறப்புப் பெற்றது. ‘தமிழும் அறமுமே’ தமிழ் நிலத்தின் வரலாற்றை இயக்கி வந்திருக்கின்றன. இனி தமிழ்நாட்டின் வருங்காலத்தையும் வழிநடத்தப்போகின்றன.

அத்தகைய மகத்தான காலத்தின் பொறுப்பைத் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், கழகத் தலைவர் தலைமையிலான நமது ஆட்சிக்கும் அளித்துள்ள தமிழ்நாடு மக்களைப் போற்றுகிறேன்.

‘நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நாம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துள்ளோம். அவர்கள் நமக்கான ஆட்சியைக் கொடுப்பார்கள்’ என்று தமிழ்நாடு மக்கள் வாழ்த்தி எங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை ஒருபோதும் பொய்க்காது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் வீட்டுப் பிள்ளைகள் உங்களுக்காகப் பணி செய்து, உங்களைப் பெருமையடைய செய்வார்கள். அனைத்தையும் நாம் பார்க்கத்தானே போகிறோம்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொறுப்பேற்றவுடன், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (500 யூனிட்டுக்குள்) இரு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப் பொருள் தடுப்புப் படை என எளிய மக்களுக்கான நலன், பெண்கள் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கான நல்வாழ்வு ஆகிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். இனி இதுபோல் தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களையும் உரிமைகளையும் நம் முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார்.

பதவியேற்ற பிறகு, சட்டமன்றத்திற்குச் சென்று மக்கள் அளித்த ஜனநாயக அரசாட்சி உத்தரவை ஏற்றார் முதல்-அமைச்சர். பிறகு, அரசின் செயல்திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.

அடுத்து, நம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழர்கள் ஆகியோர் சென்று மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தினோம்.

பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியை முதல்-அமைச்சருடன் சென்று சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றோம். நம் கழக அரசு தந்தை பெரியார் காட்டிய கொள்கைப் பாதையில், எந்தவித சமரசத்திற்கும் இடமின்றி பயணிக்கும் என்று தெரிவித்து மகிழ்ந்தோம்.

‘ஆதவ் அர்ஜுனா எனும் நான்’ என்று தமிழ்நாடு அரசின் அமைச்சராக நேற்று நான் பதவியேற்றபோது, தமிழ்நாட்டு வரலாற்றின் மேன்மையையும், தமிழக மக்களான உங்களின் அன்பையுமே எனது குரலாக வெளிப்படுத்தினேன். இது, என் தனியொருவனின் குரல் அல்ல. நம் அனைவரின் கூட்டு முழக்கம்.

கழகத் தலைவர் – தமிழ்நாடு முதல்-அமைச்சர் அண்ணன் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி நம் அனைவருக்குமானதாக இருக்கும். அறம் ஓங்கும்!

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ICC ஒருநாள் தரவரிசை பட்டியல்.. இந்தியா முதலிடம்.. 2027 உலககோப்பைக்கு தகுதி பெற கடும் போட்டி
Next Article IPL 2026: மும்பை அணியை பார்க்கவே வேதனையாக இருக்கு.. தோல்விக்கு காரணம் இது தான்- ஹர்பஜன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்கிறார்
தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்: புதிய திட்டங்கள் இல்லை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழக பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டங்கள் இல்லை என்றும் வருவாய் பெருக்க நடவடிக்கைகள் இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி: திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப் பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பன், ஒரு வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளரி டம் தோல்வி…

3 Min Read
தமிழ்நாடு

சட்டமன்றத்தில் கிண்டல்: முதல்வருக்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

சட்டமன்றத்தில் முதலமைச்சர் தன்னை கிண்டல் செய்ததற்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின், 'மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன். மக்கள் தேடும் இடத்தில் நான் முதல் ஆளாக நிற்பேன்' என்று ஆவேசமாக…

2 Min Read
முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் வீடு
தமிழ்நாடு

முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?