MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வேற்றுகிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகளை வெளியிட்ட டிரம்ப்.. என்ன இருக்கிறது?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - உலகம் - வேற்றுகிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகளை வெளியிட்ட டிரம்ப்.. என்ன இருக்கிறது?

உலகம்

வேற்றுகிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகளை வெளியிட்ட டிரம்ப்.. என்ன இருக்கிறது?

Admin
Last updated: மே 10, 2026 6:28 காலை
Admin
Share
SHARE

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) மற்றும் வேற்று கிரக வாசிகள் தொடர்பான ரகசியக் கோப்புகளை வெளியிட்டுள்ளார்.

முதல் கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வரும் நாட்களில் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், “இந்த ரகசியங்களை அமெரிக்க மக்கள் நேரடியாகப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

இந்தக் கோப்புகளில் 1940-களில் இருந்து சேகரிக்கப்பட்ட UFO அறிக்கைகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக1947ஆம் ஆண்டு பதிவான பறக்கும் தட்டுகளைப் பற்றிய அறிக்கைகள், 1969ல் அப்போலோ 12 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் படம்பிடித்த மர்மமான நிகழ்வின் புகைப்படம், 1972ல் அப்போலோ 17 விண்வெளி வீரர்கள் கண்ட அடையாளம் தெரியாத பொருட்கள் குறித்து அவர்கள் பேசிய உரையாடல்கள் இதில் அடங்கியுள்ளன.

இருப்பினும் நேற்று வெளியான சுமார் 160 கோப்புகளை ஆய்வு செய்த நிபுணர்கள், இதில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறுகின்றனர்.

UFO ஆய்வாளர் மிக் வெஸ்ட் கூறுகையில், “வெளியான வீடியோக்களில் காணப்படும் உருவங்கள் கேமரா லென்ஸ் கோளாறாகவோ அல்லது தொலைதூர ஒளிப்புள்ளிகளாகவோ இருக்கவே வாய்ப்பு அதிகம்,” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சர்ச்சைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விண்கற்கள் விழுந்ததால் ஏற்பட்ட தாக்கமாக இருக்கலாம் என்றும் சிலர் சந்தேகிக்கின்றனர்.

அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ள கூடுதல் தகவல்கள் விண்வெளி ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் பரிதாபம்.. ரன்களை வழங்கி மோசமான சாதனை
Next Article ஜோதிட நாள்காட்டி 10.05.2026 | சித்திரை 27 – ஞாயிற்றுக்கிழமை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

உலகம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பல் சிகிச்சைக்காக 'ஹடாசா ஐன் கெரெம்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அவர் குணமடைந்துவிட்டதாக…

1 Min Read
உலகம்

ஈரான் மீதான முற்றுகை தொடரும் – ட்ரம்ப் திட்டவட்டம்

அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள நிலையில், ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு…

1 Min Read
உலகம்

அமெரிக்க விமான கண்காட்சியில் நடுவானில் மோதிய 2 போர் விமானங்கள்: 4 விமானிகள் தப்பினர்!

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் போர் விமான கண்காட்சியின்போது, சாகசத்தில் ஈடுபட்ட 2 போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின. அதிர்ஷ்டவசமாக 4 விமானிகள் உயிர் தப்பினர்.

1 Min Read
உலகம்

இங்கிலாந்தில் ரயில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்

இங்கிலாந்தின் பெட்போர்டு அருகே இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர். ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?